லடாக் மற்றும் ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டு ஒருவருடம் பூர்த்தி!

03 Aug, 2020 | 08:27 PM
image

(நா.தனுஜா)

இந்திய அரசாங்கத்தினால் லடாக் மற்றும் ஜம்மு - காஷ்மீர் என்பன யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்ட பின்னர் அங்கு மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி செயற்திட்டங்களைப் பட்டியற்படுத்தி அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் இந்திய உயர்ஸ்தானிகராலயம், உண்மையில் அப்பகுதி மக்கள் பல்வேறு நன்மைகளை அடைந்திருப்பதாக இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் நெஹா சிங் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய அரசாங்கத்தினால் லடாக் மற்றும் ஜம்மு - காஷ்மீர் பகுதிகளை யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கும் அரசியலமைப்பின் 370 ஆவது சரத்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு புதன்கிழமையுடன் ஒருவருடம் பூர்த்தியடைகின்றது. அதனை முன்னிட்டு கடந்த ஒரு வருடகாலத்தில் ஜம்மு - காஷ்மீர் அடைந்திருக்கக்கூடிய நன்மைகள், அங்கு இந்திய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திகள் மற்றும் அப்பிரதேச மக்களுக்கு இந்திய அரசாங்கம் வழங்கிய உதவிகளைச் சுட்டிக்காட்டி இலங்கையிலுள்ள இந்தியத்தூதரகத்தின் பேச்சாளர் நேஹா சிங்  நீண்ட ஊடக அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளார்.

அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இந்திய நாட்டின் 1.3 பில்லியன் மக்களின் நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில் அவர்களது பிரதிநிதிகள் உள்ளடங்கியிருக்கும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைப் பெற்றுக்கொண்டதன் ஊடாக லடாக் மற்றும் ஜம்மு - காஷ்மீர் பகுதிகள் ஒரு யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டதன் பின்னரான மாபெரும் பயணத்தின் ஓராண்டுகாலம் நிறைவுற்றிருக்கின்றது. 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி இந்தியப் பாராளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி லடாக் மற்றும் ஜம்மு - காஷ்மீர் என்பன யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டதுடன், அவற்றின் நிர்வாக நடவடிக்கைகள் நேரடியாக இந்திய அரசாங்கத்தின் கீழ்க்கொண்டுவரப்பட்டது.

அதனைத்தொடர்ந்து இப்பகுதியில் இந்திய அரசாங்கத்தினால் பெருமளவான அபிவிருத்தி செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பௌத்த கல்வியுடனான முதலாவது மத்திய பல்கலைக்கழகத்தை லடாக்கில் அமைப்பதற்கான திட்டம், அப்பகுதி மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள், காஷ்மீரில் அப்பிள் உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளுக்கான விசேட நிவாரணத்திட்டம், மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் திட்டம், பின்தங்கிய கிராமங்களில் காணப்படும் பிரச்சினைகளைக் கண்டறிவதற்காக முன்னெடுக்கப்பட்ட 'மீண்டும் கிராமத்திற்க செயற்திட்டம் உள்ளிட்ட மேலும் பல்வேறு செயற்திட்டங்களைக் குறிப்பிட முடியும் என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டிப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08
news-image

பரப்புரைக்காக தமிழ்நாடு சென்ற ராகுல் காந்தி...

2024-04-15 13:08:34
news-image

நான் பொலிஸ் உத்தியோகத்தராக இருந்திருந்தால் எனது...

2024-04-15 12:53:59
news-image

தற்பாதுகாப்பு மற்றும் தாக்குதல் திட்டங்களிற்கு இஸ்ரேலிய...

2024-04-15 11:44:59
news-image

ஈரானிற்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டும் -...

2024-04-15 11:34:42