ஐ.எஸ் அமைப்பினர் சமீபத்தில் படுகொலை செய்த 5 நபர்களில் 4 பேர் சிரியாவில் பிரபல கால்பந்து அணிக்காக விளையாடும் வீரர்கள் என தெரிய வந்துள்ளது.

பொது வீதியில் வைத்து தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட அந்த நால்வரும் பிரபல கால்பந்து அணியான அல்ஷபாபில் இணைந்து விளையாடி வந்தனர்.

குர்து இனத்தவருக்காக வேவு பார்ப்பதாக கூறி ஐ.எஸ் அமைப்பினர் இவர்களை கடத்தி சென்றுள்ளனர். இதனிடையே கடத்தப்பட்ட கால்பந்து வீரர்களுடன் 5 பேரை படுகொலை செய்துள்ளதாக ஐ.எஸ் அமைப்பினரின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் படங்களை வெளியிட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு ஆசியா கிண்ண கால்பந்து போட்டிகளை பார்த்துக்கொண்டிருந்த 13 இளைஞர்களை ஐ.எஸ் குழுவினர் படுகொலை செய்தமையும்  குறிப்பிடத்தக்கது.