அங்கொட லொக்காவிற்கு உதவிய இலங்கை பெண் உட்பட மூவர் இந்தியாவில் கைது!

Published By: Vishnu

03 Aug, 2020 | 07:57 AM
image

இலங்கையின் பாதாள குழு முக்கியஸ்தரான அங்கொட லொக்காவுக்கு உதவுவதற்கான போலியான ஆவணங்கள் தயாரித்த குற்றச்சாட்டில் இந்தியாவின் கோவையில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அங்கொட லொக்கா ஜூலை மாதம் முதல் வாரத்தில் கோவையில் உயிரிழந்த நிலையில் அவரது உடல் மதுரையில் தகனம் செய்யப்பட்டது.

அவரது உடல் மதுரைக்கு கொண்டு செல்ல பொலிஸார் ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்த போது, அங்கொட லொக்காவின் முழு மோசடி நடவடிக்கை வெளச்சத்திற்கு வந்தது.

இந் நிலையில் இது தொடர்பான விசாரணையில் அங்கொட லொக்காவுடன் தங்கியிருந்தாக கூறப்படும் இலங்கை பெண்ணான அமானி தாஞ்சி, மதுரையைச் சேர்ந்த ஒரு பெண்ணும், திருப்பூரைச் சேர்ந்த ஒரு ஆணும் இவ்வாறு போலியான ஆவணங்களை தயாரித்தமைக்காக கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பைச் சேர்ந்த அமானி தஞ்சி (27), மதுரைச் சேர்ந்த சிவகாமி சுந்தரி (36), தற்போது திருப்பூரில் வசித்து வரும் ஈரோடைச் சேர்ந்த எஸ்.தினேஸ்வரன் (32) ஆகியோரை ஞாயிற்றுக்கிழமை கோவை பீலமேடு பொலிஸார் கைது செய்தனர். 

அவர் இந்திய நாட்டவர் என்ற பெயரில் ஆதார் அட்டையைப் பெற்றமை. குற்றவியல் சதி மற்றும் ஆவணங்களை மோசடி செய்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்காக ஐ.பி.சி.யின் 120 பி, 177, 182, 202, 212, 417, 419, 466, 468 மற்றும் 471 ஆகிய பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01