தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு இன்று முதல் தடை!

Published By: Vishnu

03 Aug, 2020 | 07:28 AM
image

(எம்.மனோசித்ரா)

2020 பாராளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்வது இன்று முதல் தடைசெய்யப்பட்டுள்ளது.

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்திற்கான வாக்கெடுப்பு 5 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளது. இம்முறை தேர்தலில் ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். 2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலுக்கமையவே இம்முறை தேர்தல் நடைபெறவுள்ளதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதே வேளை கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பை இம்முறை இழந்துள்ளனர். சட்டத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பளிப்பதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இல்லை என்பதால் வாக்கெடுப்பு நடைபெறும் தினத்தன்று தனிமைப்படுத்தலை நிறைவு செய்யாதவர்களுக்கு வாக்களிக்க முடியாது என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 20 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும் கொவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக தேர்தல் பிற்போடப்பட்டது. 

ஜூன் மாதம் 10 ஆம் திகதி தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய ஆகஸ்ட் 5 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்தார். அதனைத் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடுகின்ற அரசியல் கட்சிகளும் சுயாதீன குழுக்களும் பிரசாரங்களை ஆரம்பித்திருந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் பிரசார நடவடிக்கைகள் நிறைவுக்கு வரவுள்ளன. அதற்கமைய இன்று நள்ளிரவிலிருந்து அமைதி காலம் ஆரம்பமாகிறது.

போட்டியிடும் வேட்பாளர்கள்

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் நாடளாவிய ரீதியில் 3652 அரசியல் கட்சிகளும் 3800 சுயாதீன குழுக்களும் போட்டியிடவுள்ளன. கொழும்பு , கம்பஹா , களுத்துறை , கண்டி , மாத்தளை, நுவரெலியா , காலி , மாத்தறை , அம்பாந்தோட்டை , யாழ்ப்பாணம் , வன்னி , மட்டக்களப்பு , திகாமடுல்லை , திருகோணமலை , குருணாகல் , புத்தளம் , அநுராதபுரம் , பொலன்னறுவை , பதுளை , மொனராகலை , இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய 22 தேர்தல் மாவட்டங்களிலும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் சார்பில் ஒட்டுமொத்தமாக 7 , 452 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றர்.

எனினும் ஐக்கிய மக்கள் சக்தி போட்டியிடவிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பிரிதொரு வேட்பாளரும் போட்டியிலிருந்து விலகியுள்ளதோடு மற்றொரு வேட்பாளர் அண்மையில் விபத்தில் உயிரிழந்தார்.

கொழும்பில் அரசியல் கட்சிகள் சார்பில் 352 வேட்பாளர்களும் சுயாதீன குழுக்கள் சார்பில் 572 வேட்பாளர்களும் , கம்பஹாவில் அரசியல் கட்சிகள் சார்பில் 315 வேட்பாளர்களும் சுயாதீன குழுக்கள் சார்பில் 378 வேட்பாளர்களும் , களுத்துறையில் அரசியல் கட்சிகள் சார்பில் 143 வேட்பாளர்களும் சுயாதீன குழுக்கள் சார்பில் 169 வேட்பாளர்களும் , கண்டியில் அரசியல் கட்சிகள் சார்பில் 255 வேட்பாளர்களும் சுயாதீன குழுக்கள் சார்பில் 180 வேட்பாளர்களும் , மாத்தளையில் அரசியல் கட்சிகள் சார்பில் 104 வேட்பாளர்களும் சுயாதீன குழுக்கள் சார்பில் 80 வேட்பாளர்களும் , நுவரெலியாவில் அரசியல் கட்சிகள் சார்பில் 132 வேட்பாளர்களும் சுயாதீன குழுக்கள் சார்பில் 143 வேட்பாளர்களும் போட்டியிடவுள்ளனர்.

இதே போன்று காலியில் அரசியல் கட்சிகள் சார்பில் 156 வேட்பாளர்களும் சுயாதீன குழுக்கள் சார்பில் 156 வேட்பாளர்களும் , மாத்தறையில் அரசியல் கட்சிகள் சார்பில் 130 வேட்பாளர்களும் சுயாதீன குழுக்கள் சார்பில் 70 வேட்பாளர்களும் , அம்பாந்தோட்டையில் அரசியல் கட்சிகள் சார்பில் 110 வேட்பாளர்களும் சுயாதீன குழுக்கள் சார்பில் 80 வேட்பாளர்களும் , யாழில் அரசியல் கட்சிகள் சார்பில் 190 வேட்பாளர்களும் சுயாதீன குழுக்கள் சார்பில் 140 வேட்பாளர்களும் , வன்னியில் அரசியல் கட்சிகள் சார்பில் 153 வேட்பாளர்களும் சுயாதீன குழுக்கள் சார்பில் 252 வேட்பாளர்களும் , மட்டக்களப்பில் அரசியல் கட்சிகள் சார்பில் 128 வேட்பாளர்களும் சுயாதீன குழுக்கள் சார்பில் 176 வேட்பாளர்களும் போட்டியிடவுள்ளனர்.

திகாமடுல்லையில் அரசியல் கட்சிகள் சார்பில் 200 வேட்பாளர்களும் சுயாதீன குழுக்கள் சார்பில் 340 வேட்பாளர்களும் , திருகோணமலையில் அரசியல் கட்சிகள் சார்பில் 91 வேட்பாளர்களும் சுயாதீன குழுக்கள் சார்பில் 98 வேட்பாளர்களும் , குருணாகலில் அரசியல் கட்சிகள் சார்பில் 216 வேட்பாளர்களும் சுயாதீன குழுக்கள் சார்பில் 180 வேட்பாளர்களும் , புத்தளத்தில் அரசியல் கட்சிகள் சார்பில் 143 வேட்பாளர்களும் சுயாதீன குழுக்கள் சார்பில் 209 வேட்பாளர்களும் , அநுராதபுரத்தில் அரசியல் கட்சிகள் சார்பில் 144 வேட்பாளர்களும் சுயாதீன குழுக்கள் சார்பில் 120 வேட்பாளர்களும் , பொலன்னறுவையில் அரசியல் கட்சிகள் சார்பில் 88 வேட்பாளர்களும் சுயாதீன குழுக்கள் சார்பில் 64 வேட்பாளர்களும் , பதுளையில் அரசியல் கட்சிகள் சார்பில் 144 வேட்பாளர்களும் சுயாதீன குழுக்கள் சார்பில் 144 வேட்பாளர்களும் , மொனராகலையில் அரசியல் கட்சிகள் சார்பில் 90 வேட்பாளர்களும் சுயாதீன குழுக்கள் சார்பில் 81 வேட்பாளர்களும் , இரத்தினபுரியில் அரசியல் கட்சிகள் சார்பில் 224 வேட்பாளர்களும் சுயாதீன குழுக்கள் சார்பில் 84 வேட்பாளர்களும் , கேகாலையில் அரசியல் கட்சிகள் சார்பில் 144 வேட்பாளர்களும் சுயாதீன குழுக்கள் சார்பில் 84 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

வாக்காளர்கள்

2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலுக்கமைய இம்முறை பொதுத் தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களிலும் ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 வாக்களர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

கொழும்பில் 17 இலட்சத்து 9, 209 வாக்காளர்களும் , கம்பஹாவில் 17 இலட்சத்து 85 ஆயிரத்து 964 வாக்காளர்களும் , களுத்துறையில் 9 இலட்சத்து 72 ஆயிரத்து 319 வாக்காளர்களும் , கண்டியில் 11 இலட்சத்து 29 ஆயிரத்து 100 வாக்காளர்களும் , மாத்தளையில் 4 இலட்சத்து 7 ஆயிரத்து 569 வாக்காளர்களும் , நுவரெலியாவில் 5 இலட்சத்து 77 ஆயிரத்து 717 வாக்காளர்களும் , காலியில் 8 இலட்சத்து 67 ஆயிரத்து 709 வாக்காளர்களும் , மாத்தறையில் 6 இலட்சத்து 59 ஆயிரத்து 587 வாக்காளர்களும் , அம்பாந்தோட்டையில் 4 இலட்சத்து 93 ஆயிரத்து 192 வாக்காளர்களும் , யாழ்ப்பாணத்தில் 5 இலட்சத்து 71 ஆயிரத்து 848 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இதே போன்று வன்னியில் 2 இலட்சத்து 87 ஆயிரத்து 024 வாக்காளர்களும் , மட்டக்களப்பில் 4 இலட்சத்து 9 ஆயிரத்து 808 வாக்காளர்களும் , திகாமடுல்லையில் 5 இலட்சத்து 13 ஆயிரத்து 979 வாக்காளர்களும் , திருகோணமலையில் 2 இலட்சத்து 88 ஆயிரத்து 868 வாக்காளர்களும் , குருணாகலையில் 13 இலட்சத்து 48 ஆயிரத்து 787 வாக்காளர்களும் , புத்தளத்தில் 6 இலட்சத்து 14 ஆயிரத்து 370 வாக்காளர்களும் , அநுராதபுரத்தில் 6 இலட்சத்து 93 ஆயிரத்து 634 வாக்காளர்களும் , பொலன்னறுவையில் 3 இலட்சத்து 31 ஆயிரத்து 109 வாக்காளர்களும் , பதுளையில் 6 இலட்சத்து 68 ஆயிரத்து 166 வாக்காளர்களும் , மொனராகலையில் 3 இலட்சத்து 72 ஆயிரத்து 155 வாக்காளர்களும் , இரத்தினபுரவில் 8 இலட்சத்து 77 ஆயிரத்து 582 வாக்காளர்களும் , கேகாலையில் 6 இலட்சத்து 84 ஆயிரத்து 189 வாக்காளர்களும்  வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

தேர்தல் செலவுகள்

நடைபெறவுள்ள தேர்தலுக்கு 850 கோடி ரூபாய் செலவுகள் ஏற்படும் என்று கணிப்பிடப்பட்டுள்ளதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தரவொன்றை வெளியிட்டுள்ளது. 

அதற்கமைய கடந்த 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை விட இம்முறை தேர்தலுக்கு 5 , 524 , 601, 378 ரூபா செலவு அதிகரித்துள்ளது. கொவிட்-19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வழமைக்கு மாறாக சுகாதார பாதுகாப்பு நடவக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதால் இவ்வாறு செலவு அதிகரித்துள்ளது.

மொத்தமாக வாக்களிக்க தகுதி பெற்றுள்ள ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 வாக்காளரில் தலா ஒரு வாக்காளருக்கு மாத்திரம் 523 ரூபா செலவிடப்பட்டுள்ளது. இந்த செலவு கடந்த பொதுத் தேர்தலை விட 325 ரூபாவால் அதிகரித்துள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.

ஆசனங்கள்

பொதுத் தேர்தலில் மாவட்டங்களுக்கான ஆசன ஒதுக்கீடுகளை அவதானிக்கும் போது கொழும்பு 19 , கம்பஹா 18 , களுத்துறை 10 , கண்டி 12 , மாத்தளை 5 , நுரவெலியா 8 , காலி 9 , மாத்தறை 7 , அம்பாந்தோட்டை 7 , யாழ்ப்பாணம் 7 , வன்னி 6 , மட்டக்களப்பு 5 , திகாமடுல்லை 7 , திருகோணமலை 4 , குருணாகல் 15 , புத்தளம் 8 , அநுராதபுரம் 9 , பொலன்னறுவை 5 , பதுளை 9 , மொனராகலை 6 , இரத்தினபுரி 11 , கேகாலை 9 என்ற அடிப்படையில் 196 ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஏனைய 29 உறுப்பினர்கள் தேசிய பட்டியல் ஊடாக தெரிவு செய்யப்படுவர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:11:31
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59