தேசிய பாதுகாப்பை அலட்சியப்படுத்தியவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் - விஜயதாஸ ராஜபக்ஷ

02 Aug, 2020 | 10:53 PM
image

(இராஜதுரை ஹஷான்)

  நல்லாட்சி  அரசாங்கத்தில் நாட்டுக்கு எதிரான ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டவர்களையும், தேசிய பாதுகாப்பினை அலட்சியப்படுத்தியவர்களையும் மக்கள் ஜனநாயக ரீதியில்  புறக்கணிக்க வேண்டும். ஆளும்  தரப்பிற்கு   சவால் விடுக்கும் பலமான எதிர்க்கட்சி ஒன்று  நடைமுறையில் கிடையாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ  ராஜபக்ஷ தெரிவித்தார்.

 கொழும்பில் இன்று இடம்  பெற்ற  ஊடகவியலாளர்  சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில்  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

  அவர் மேலும் குறிப்பிடுகையில்,

 நாட்டையும், தேசிய வளங்களையும் பாதுகாப்பதாக  ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு வாக்குறுதி  வழங்கினார்.ஜனாதிபதியின் கொள்கைத்திட்டங்களை  69 இலட்சத்திற்கும் அதிகமான  மக்கள்    ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.  ஜனாதிபதியின்   கொள்கைத்திட்டம் முழுமைப்படுத்த வேண்டும்.

  பொதுத்தேர்தலின் வெற்றியை  இலக்காகக் கொண்டு   பிரதான அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரங்கள் கடந்த ஒரு மாத காலமாக   இடம் பெற்றன.     ஆளும் தரப்பிற்கு அதாவது பொதுஜன பெரமுனவிற்கு  சவால் விடுக்கும்   எதிர்க்கட்சி ஒன்று நடைமுறையில் காணப்படவில்லை. ஐக்கிய தேசிய கட்சியினதும், ஐக்கிய மக்கள் சக்தியினதும் போட்டி  சிறிகொதாவை   மையப்படுத்தியதாக அமைந்தது  எங்களின்   போட்டி  மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெறுவதை இலக்குப்படுத்தியதாக அமைந்தது.

 இடம் பெறவுள்ள பொதுத்தேர்தல் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்  விதமாக உள்ளது.            சர்வதே மற்றும் உள்ளக ரீதியில் பல  சவால்களை நாம்   எதிர்க்க கொண்டுள்ளோம். அனைத்து நெருக்கடிகளுக்கும் தீர்வு காண    நல்லாட்சி அரசாங்கத்தை போலல்லாது  பலமான  நிலையான அரசாங்கம் தோற்றம் பெற வேண்டும்.

 நல்லாட்சி அரசாங்கத்தில்  நாட்டுக்கு எதிரான ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டவர்களையும், தேசிய பாதுகாப்பினை குறுகிய அரசியல்  தேவைகளுக்காக  அலட்சியப்படுத்தியவர்களையும்  மக்கள் ஜனநாயக ரீதியில் புறக்கணிக்க வேண்டும். மோசடிகாரர்களற்ற     பாராளுமன்றத்தை தெரிவு செய்ய  அனைத்து   இன மக்களும் ஒன்றுப்பட வேண்டும். என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27