தெஹியத்தகண்டிய - இஹலகம பிரதேசத்தில் ஏரியில் விழுந்து பெண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.

வீட்டின் அருகில் அமைந்துள்ள ஏரியில் விழுந்தே இரண்டு வயதுடைய பெண் குழந்தை உயிரிழந்துள்ளது.

ஏரியில் விழுந்த குழந்தையை பெற்றோர் மீட்டு தெஹியத்தகண்டிய மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த பெண் குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்ததுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.