நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்கு செல்ல ‘விசா’, கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்கள் தேவை. அவை எதுவும் இல்லாமல் திருட்டு தனமாக எல்லை தாண்ட ஐரோப்பிய நாடுகளில் பலவிதமான சாகச வேலைகள் பலர் செய்து வருகின்றனர்.

சமீபத்தில் இத்தாலியில் இருந்து சுவிற்ஸர்லாந்து செல்ல 21 வயது இளைஞர்  விசா எதுவும் இல்லாதமையால் ஒரு பெரிய பயணப்பையில் தன்னை தானே அடைத்துக்கொண்டு செல்ல முயற்சித்துள்ளார்.

முதலில் பயணப்பையினுள் தன்னை தானே அடைந்துக்கொண்டவர் மற்றொருவர் உதவியுடன் சுவிற்ஸர்லாந்து செல்லும் புகையிரதத்தில் அந்த பயணப்பை ஏற்ற செய்தார். புகையிரதம் சுவிற்ஸர்லாந்து எல்லையை வந்தடைந்தது. எனவே அந்த பயணப்பை புகையிரத நிலைய மேடையில் இறக்கி வைக்கப்பட்டது.

அச்சமயத்தில் பயணப்பையிலிருந்து வெளியே வர நைசாக பயணப்பை சிப்பை திறந்தார். அப்போது பயணப்பை தானாக ஆடியது அதைப்பார்த்த பொலிஸார் மற்றவரிடம் என்ன என்று விசாரித்தார். இதற்கிடையே சிப்பை திறந்து இளைஞர் பாதி வெளியேறி விட்டார்.

உடனே அவரை கையும் களவுமாக பிடித்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.இச்சம்பவம் சுவிற்ஸர்லாந்து  புகையிரத நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.