அமெரிக்க பொலிஸாரால் கறுப்பினத்தவர் சுட்டுக்கொலை ; உயிர் பிரியும் நேரத்தில் வீடியோ எடுத்த தோழி ( காணொளி இணைப்பு )

Published By: Priyatharshan

09 Jul, 2016 | 11:50 AM
image

அமெரிக்க பொலிஸாரால் சுடப்பட்ட கறுப்பினத்தவரின் உயிர் பிரியும் நேரத்தில் வீடியோ எடுத்த அவரின் தோழி அதனை பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளார்.

 குறித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளமெங்கும் பரவிவருகின்றது.

அமெரிக்காவின் மின்னபொலைஸ் நகரில், துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான 32 வயதான கருப்பினத்தவரான  பிலாண்டோ கேசிலின் தனது  தோழி லேவிஸ் ரெனோல்ட்ஸ் என்பவருடன் காரில் வேகமாக சென்றுள்ளார்.

இந்நிலையில், காரை வழிமறித்த பொலிஸார் சாரதி அனுமதிப்பத்திரத்தை காண்பிக்குமாறு கூறியுள்ளனர். ஆனால், அவரோ சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு பதிலாக துப்பாக்கியை நீட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து பொலிஸார்,  பிலாண்டோ கேசிலை தம்மிடமிருந்த துப்பாக்கியால் சுட்டனர். 

உயிருக்காகப் போராடிய கேசிலை, மருத்துவமனைக்கு அழைத்து சென்றார் தோழி. போகும் வழியில் பிலாண்டோ கேசில் உயிர் பிரிந்தது. 

உயிர்பிரியும் இறுதிக் காட்சிகளையும் பொலிஸாருடன் இடம்பெற்ற வாக்குவாதத்தையும் தோழி வீடியோவாக தனது கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்து பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார். 

அமெரிக்காவில் தொடர்ந்து கறுப்பின மக்களை பொலிஸார் துன்புறுத்தி வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில் இந்த வீடியோ அங்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47