365 நாட்கள் முற்றுகையின் கீழ் காஷ்மீர்!

01 Aug, 2020 | 10:54 PM
image

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) முகமது சாத் கட்டாக்

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பான ஜம்மு ரூ காஷ்மீர் , நவீன உலகம் இதுவரை கண்டிராத மிகக் கொடூரமான, மற்றும் மனிதாபிமானமற்ற இராணுவ முற்றுகையின் கீழ் தனது 365 நாட்களை நிறைவு செய்கிறது. நாகரிக உலகம் என்று தம்மைத்தாமே அழைக்கும் இந்தியாவின் பார்வையின் கீழ், ஒரு பாதுகாப்பற்ற சமூகத்தை கொல்வது, காயப்படுத்துவது, கற்பழிப்பது மற்றும் அழிப்பது தடையின்றி தொடர்கிறது. இருந்தும் , இக்கொலைகளைக்கண்டும்  காணாதது போல் , பல உலக நாடுகள் சில  பொருளாதார நலன்களுக்காக கண்மூடித்தனமாக இருப்பதும் வருத்தமளிக்கிறது.

A history of the Kashmir conflict | The Economist - YouTube

ஆகஸ்ட் 5, 2019 அன்று, பா.சி.ச மோடி அரசு   யு.என்.எஸ்.சி, ஜெனீவா மாநாடு ஆகிய அதன்  சர்வதேச கடமைகளைத் துண்டித்து தனது அரசியலமைப்பின் 370 மற்றும் 35 ஏ சட்டப்பிரிவுகளை  ரத்து செய்து , சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீரை  அதன் சிறப்பு அந்தஸ்தை பறிப்பதன் மூலம் தனது சொந்த அரசியலமைப்பையே மீறியது. சர்வதேச சமூகம், ஐ.நா மற்றும் ஓ.ஐ.சி உள்ளிட்ட பல்வேறு சர்வதேச அமைப்புகள், தனி நாடுகள், காங்கிரஸ்கள், பாராளுமன்றங்கள் தங்கள் குரல்களை இதற்கு எதிராக எழுப்பினாலும்  இந்திய  அரசுக்கு எதிராக  உறுதியான நடவடிக்கைகள்  சரிவர பின்பற்றபட வில்லை.

Indian Held Kashmir Has Been Under Lockdown For More Than 300 Days ...

கோவிட் -19 உலக நாடுகளின் சுகாதார அமைப்புகளை அச்சுறுத்தியது  மற்றுமல்லாது  கொடிய தொற்றுநோய்  என்பதால்  உலகளாவிய அவசரநிலை  அறிவிக்கப்பட்ட நிலையிலும் , இந்தியா நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கானோர் இறப்பதைப் புறக்கணித்து அதன் பலவீனம் அடைந்து  வரும் சுகாதார அமைப்பை சீர்செய்யாமல் , ஆக்கிரமிப்பு மீதான தனது பிடியை இறுக்கிக் கொள்ளும் வாய்ப்பாக உலகளாவிய அவசரநிலையை தொடர்ந்து பயன்படுத்தி, காஷ்மீரில் சர்ச்சைக்குரிய சட்டத்தை அமுல்படுத்துவதன்  மூலம்  காஷ்மீர் சமூகத்தை  அடக்கி வந்தது.

சர்வதேச சமூகத்தின் மனசாட்சியை உலுக்கிய பாகிஸ்தான் பிரதமரின் கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற யு.என்.ஜி.ஏ.வரலாற்று உரை உலக நாடுகள், மன்றங்கள் மற்றும் உலகளாவிய சிவில் சமூகத்திற்கு ஒரு சிறந்த தெளிவை வழங்கியது மட்டுமல்லாமல் ஆகஸ்ட் 5, 2019 க்கு முந்தைய நிலைக்கு இந்தியா திரும்பவும், ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாதுகாப்புப் படையினரை நிறுத்துவதன் மூலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 8 மில்லியன் காஷ்மீர் மக்களை விடுவிக்கவும் இந்தியாவை வலியுறுத்தியது  . ஆனாலும் ,சர்வதேச சமூகத்தின் இந்த அழைப்புகளை இந்தியா கடுமையாக புறக்கணித்தது.

Pakistan's Khan warns of all-out conflict amid rising tensions ...

பிராந்திய மட்டத்தில், இந்தியா, இதுபோன்ற நடவடிக்கையின் காரணமாக, சீனாவுடன்  கட்டுப்பாட்டு எல்லையில்  தொடர்ந்து முரண்பட்டுக்கொண்டு இருக்கிறது ,. இதனால்  ஏற்கனவே இந்திய வீரர்களின் உயிர்கள் பல காவுகொள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.இது வரை நிலைமை ஆபத்தானதாகவே இருக்கிறது.நேபாளத்துடன், நேபாள பிரதேசத்தை பலவந்தமாக ஆக்கிரமிப்பதன் மூலம் இந்தியா முரண்படுகிறது. 

பூட்டான் தொடர்ந்து இந்திய மேலாதிக்கத்திற்கு பிணைக் கைதிகளாக இருந்து வருகிறது, அங்கு நாடு தனது மக்களின் அபிலாஷைகளின்படி அதன் சுயாதீன வெளியுறவுக் கொள்கையை பின்பற்ற முடியமல் தவிக்கிறது.குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் பிற எல்லை மற்றும் நீர் பிரச்சினைகள்  போன்ற பிரச்சசினைகளால் பங்களாதேஷ் போன்ற ஒரு நட்பு நாட்டை அதன் நிலையை மறுபரிசீலனை செய்ய கட்டாயப்படுத்தியுள்ளன.இலங்கையுடன், இந்தியா தொடர்ந்து பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஆழ்ந்த மனப்பான்மை இல்லாத  நட்பு உறவை கொண்டுள்ளது, இது 16 ஆண்டுகளுக்கும் மேலாக எல்.டி.டி.இ பயங்கரவாதத்திற்கு எதிராக   நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான அப்பாவி இலங்கை உயிர்களைக் காவுகொண்டது.

ஆப்கானிஸ்தானில், ஒரு இராஜதந்திர தோல்வியாகவும்,  பிராந்திய அபிலாஷைகளுக்கு இணையாகவும் பார்க்கும் சமீபத்திய ஆப்கானிய சமாதான முன்னெடுப்புகளை தகர்ப்பதற்காக  ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தானில் பயங்கரவாத செயல்களை மேற்கொள்வதற்காக தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான், ஜமாத்-உல்-அஹ்ரர், ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற பயங்கரவாத குழுக்களுக்கு இந்தியா தொடர்ந்து நிதியுதவி அளிக்கிறது. பாகிஸ்தானுடன், இந்திய சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீரின் நிலையை வலுக்கட்டாயமாக மாற்றுவதைத் தவிர, எல்லையில்  வாழும் அப்பாவி பொதுமக்களை குறிவைத்து வழக்கமான அத்துமீறல்கள் மூலம் ஏற்கனவே பதட்டமான உள்ள உறவை மேலும் மோசமடைய செய்கிறது. இருதரப்பு மோசமடைந்து வரும் அரசியல்/ இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு உறவுகள் நிச்சயமாக பிராந்தியத்தில் இரண்டு அல்ல, மூன்று அணுசக்திகளுக்கு இடையில் ஆபத்தான  நிலைகளைக்  கொண்டுள்ளன.

Jammu and Kashmir reorganisation: Pakistan slams 'recipe for ...

பிராந்திய ரீதியாகவும், உலகளாவிய ரீதியாகவும் பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா அதன் அனைத்து  முயற்சிகளையும் வளங்களையும் செலவழிக்கும் அதே வேளையில், இந்தியாவே தனிமைப்படுத்தப்பட்டிருப்பது அதனது தார்மீக, அரசியல் மற்றும் ஜனநாயக கொள்கைகளை  தீவிரமாக பாதிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் 70 ஆண்டுகால வரலாற்றில் இதுபோன்ற எதிர்மறை பார்வையுடன்  உலக அளவில் ஒருபோதும் காணப்படவில்லை. ஒரு காலத்தில் உலகின் மிகப்பெரிய ஜனநாயகமாகக் கருதப்பட்ட ஒரு நாட்டின் உலகளாவிய, பிராந்திய மற்றும் உள்நாட்டு அந்தஸ்தைப் பற்றி நாட்டிற்குள் உள்ள நல்ல அரசியல், அறிவுசார் மற்றும் மதச்சார்பற்றவர்கள் வேதனையுடன் கவலைப்படுகிறார்கள். இது அனைத்தும் வரலாற்றின் ஒரு பகுதியாக காணப்படுகிறது.

சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரில் அப்பாவி காஷ்மீர்களை போலி குற்றச்சாட்டுக்கள்  மற்றும் பிற சாக்குப்போக்குகளின் பேரில்  கொலைசெய்வதை  இந்திய அரசு தொடர்ந்து வருகிறது.மேலும் , ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான இந்திய குடிமக்களை சர்ச்சைக்குரிய பிரதேசத்தில் குடியேற்றுவதன் மூலம் இந்திய சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்மு மற்றும் காஷ்மீரின் மக்கள்தொகை கட்டமைப்பை ஒரே நேரத்தில் மாற்றி வருகிறது, இது காஷ்மீரி மக்களை தங்கள் சொந்த நிலத்தில் இருந்து  அகற்றவும் அவர்களது  வாக்கு  உரிமையை பறிக்கவும் வழிவகுக்கிறது .ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீரிலும் மற்றும் பிற இனங்களுக்கு எதிரான  அடக்குமுறை நடவடிக்கைகளும்  இந்தியா நிலப்பரப்பில் உலகத்தின் பார்வையின்கீழே  தொடர்ந்து வருகிறது.

பாகிஸ்தான், தனது அரசியல் மற்றும் இராஜதந்திர ஆதரவின் மூலம், யு.என்.எஸ்.சி தீர்மானங்கள், ஜெனீவா மாநாடு, சர்வதேச சட்டம், இருதரப்பு ஒப்பந்தங்கள், மனிதாபிமானமற்ற அடக்குமுறை மற்றும் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்மு மற்றும் காஷ்மீர்  ஆகியவற்றில் மக்கள்தொகை மாற்றங்கள் ஆகியவற்றின் இந்தியாவின் அப்பட்டமான மீறல்களை சர்வதேச சமூகத்திக்கு  தொடர்ந்து உணர்த்திக்கொண்டே இருக்கும்.

அச்சு, மின்னணு மற்றும் டிஜிட்டல் உள்ளிட்ட அனைத்து ஊடகங்களும் பயங்கர  விளைவுகள் ஏற்பட முன் ,சர்வதேச மனசாட்சியை உலுக்கவும் , சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீரில் நீதி மற்றும் மனித உரிமைகளுக்காக போராடவும் பயன்படுத்தப்படும். பாகிஸ்தான் எப்போதுமே காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக நிற்கும். அவர்களும் பாகிஸ்தானை சேர்ந்தவர்களே. ஒவ்வொரு பாகிஸ்தானியரும் காஷ்மீர் மக்கள்  தங்கள் அன்பு மற்றும் நேசம் பொருந்திய  ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் பாகிஸ்தானுடன்  இணைக்க விரும்புவதால் தான்  சித்திரவதைப்படுத்தப்படுவதை அறிவார்கள்.

Kashmiris see 'little hope' in India's dialogue offer | India | Al ...

ஜம்மு-காஷ்மீர் மக்கள் மீது பாகிஸ்தான் எவ்வாறு அலட்சியமாக இருக்க முடியும்? காஷ்மீர் மக்களுக்கு சுயநிர்ணய உரிமையைப் பெற பாகிஸ்தான் எந்த உதவியும் செய்ய தயார்  என்பது ஒரு தேசிய தீர்மானமாகும். இருப்பினும், பாகிஸ்தான் சர்வதேச நாடுகள் எவ்வாறு இப்பிரச்சினைக்கு பதில் அளிக்கிறது என்பதை  பொறுமையாக உற்று நோக்குகிறது. இந்தியா அமைதியை ஏற்கத் தயாராக இல்லை என்பதால், எந்த பயனும் இல்லாமல் காலம் கடந்து கொண்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43