பாகிஸ்தானின் சமூக சேவகர் அப்துல் சத்தார் எதி காலமானார்

Published By: Priyatharshan

09 Jul, 2016 | 10:39 AM
image

பாகிஸ்தான், கராச்சியிலுள்ள மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த அந்நாட்டின் சமூக சேவகர் அப்துல் சத்தார் எதி, சிகிச்சை பலனின்றி தனது 88 ஆவது வயதில் காலமானார்.

பாகிஸ்தான் சமூக சேவகர் அப்துல் சத்தார் எதி, கடந்த சில வாரங்களாக உடல்நலக்குறைவால் கடும் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு மூச்சுத் திணறல் அதிகமாக இருந்து வந்தது.

இதையடுத்து அவர் கராச்சியிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பாகிஸ்தானில்  “எதி” என்ற பெயரில் கடந்த ஆண்டுகளாக சமூகசேவை அறக்கட்டளை நிறுவனங்களை நடத்தி வந்தார். அவரது அறக்கட்டளை அதிக அளவிலான ஆம்புலன்ஸ் சேவையை கொண்டுள்ளது.

அதேபோல், நேர்சிங் ஹோம்கள், அனாதை இல்லங்கள், பெண்கள் பாதுகாப்பு மையம் உள்ளிட்ட அமைப்புகளை பாகிஸ்தான் முழுவதும் நடத்தி வந்துள்ளார்.

இதேவேளை, பாகிஸ்தானுக்கு வழிதவறி சென்ற இந்தியப் பெண்ணான கீதாவை, அவரது அமைப்பு தான் பாதுகாத்து வந்தது.

கீதாவை பராமரித்ததற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த ரூபா ஒரு கோடி நிதியை வாங்க எதி அறக்கட்டளை அமைப்பு பணிவுடன் மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47