பேசிக்கொண்டிருக்கும் போது குரலில் மாற்றம் ஏற்படுகிறதா? இதோ தீர்வு

01 Aug, 2020 | 11:12 AM
image

எம்மில் பலருக்கும் பேசிக்கொண்டிருக்கும் போது குரலில் மாற்றம் ஏற்படும். அதாவது பேச்சின் ஒலியளவு குறைந்துவிடும். அதாவது டெசிபல் அளவு குறைந்துவிடும். சில நிமிட போராட்டத்திற்கு பிறகு மீண்டும் அவர்கள் இயல்பாக பேசுவார்கள். இத்தகைய பாதிப்பிற்கு மருத்துவ ரீதியாக பொனஸ்தீனியா என்று பெயர். இதற்கு தற்போது மேம்படுத்தப்பட்ட ஸ்பீச் தெரபி என்ற சிகிச்சை அறிமுகமாகியிருக்கிறது.

இந்த பாதிப்பு குறித்து மருத்துவர்கள் விளக்கமளிக்கையில், நாம் ஓடத் தொடங்கும் போது வேகமாக ஓடுகிறோம். பிறகு வெகு தூரம் ஓட ஓட எம்முடைய வேகம் குறைந்துவிடுவதைப் பார்க்கிறோம். அதைப் போன்றதொரு பாதிப்பு இதன் போது ஏற்படுகிறது. 

எம்முடைய குரல்வளையிலுள்ள தசைகள் பேச்சிற்கான ஒலியளவை தொடர்ந்து வழங்குவதால், அங்கு ஏற்படும் தளர்வே இத்தகைய பாதிப்பிற்கு காரணம். இந்த தசைகளின் செயல்பாடு, இயக்கம், வலிமை குறித்து பரிசோதித்து,அதற்குரிய நிவாரணமளித்தால் மீண்டும் இயல்பாக தங்குதடையில்லாமல் பேசுவார்கள். இவர்களுக்கு கூடுதலாக மேம்படுத்தப்பட்ட ஸ்பீச் தெரபி என்ற சிகிச்சையையும் இணைந்து வழங்கும் போது அவர்களின் பாதிப்பு குறையும்.

அதே தருணத்தில் இவர்களுக்கு காசநோய், நுரையீரல் பாதிப்பு, நீரிழிவு போன்ற பாதிப்புகள் இருந்தாலும் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால் அது குறித்து பரிசோதனையையும் மேற்கொள்ள பரிந்துரைப்பார்கள். இவர்களில் பலருக்கு ஆயுள் முழுவதும் இளஞ்சூடான நீரை பருகுவதை வழக்கமாக்கிக் கொண்டு ஓரளவு நிவாரணம் கிடைக்கும்.

டொக்டர் கிருஷ்ணகுமார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29
news-image

ஒஸ்பெர்ஜர்'ஸ் சிண்ட்ரோம் எனும் குழந்தைகளுக்கான வளர்ச்சி...

2024-04-04 14:17:36
news-image

அதிரோஸ்கிளிரோசிஸ் எனும் ரத்த நாளத் தடிப்பு...

2024-04-03 16:12:32