சர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய இரு மாலைதீவு பிரஜைகளை தெஹிவளை பகுதியில் வைத்து பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இவர்களிடமிருந்து 385 கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இவர்கள் இருவரும் இலங்கை ஊடாக பாகிஸ்தான் மற்றும் மாலைதீவுக்கு போதைப்பொருட்களை கடத்தி வந்தமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.