பாராளுமன்றத்தில் பெண் பிரதிநிதித்துவம் கொண்ட நாடுகள் பட்டியல் : இலங்கைக்கு பாரிய பின்னடைவு

01 Aug, 2020 | 07:38 AM
image

(எம்.மனோசித்ரா)

சர்வதேச ரீதியில் பாராளுமன்றத்தில் பெண்கள் பிரதிநிதித்துவ அடிப்படையிலான தரப்படுத்தலில் 193 நாடுகளில் இலங்கை 182 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய இலங்கை பாராளுமன்றத்தில் நூற்றுக்கு 5 சதவீத பிரதிநிதித்துவமே காணப்படுகிறது.

இந்நிலையில் 2020 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தலில் பிரதான கட்சிகள் சார்பில் தேர்தலில் போட்டியிட களமிறக்கப்பட்டுள்ள பெண் வேட்பாளர்களது விபரங்களை பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையதளமான Manthri.lk வெளியிட்டுள்ளது.

அதற்கமைய பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடுகின்ற 252 வேட்பாளர்களில் 14 பெண் வேட்பாளர்கள் காணப்படுகின்றனர். அதே போன்று ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிடுகின்ற 262 வேட்பாளர்களில் 15 பேர் பெண் வேட்பாளர்களாவர்.

ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடும் 262 வேட்பாளர்களில் 10 பேர் பெண் வேட்பாளர்களாவர். தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடுகின்ற 262 வேட்பாளர்களில்  16 பேர் பெண் வேட்பாளர்களாவர்.

இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிடுகின்ற 44 வேட்பாளர்களில் 4 பேர் பெண் வேட்பாளர்களாவர். தேசிய மக்கள் சக்தி மாத்திரமே ஏனைய கட்சிகளுடன் ஒப்பிடும் போது அதிகளவான பெண் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44