தேர்தல் பிரச்சாரத்தின் போது அரச அலுவலர்கள் தொடர்பாக அதிகளவான முறைப்பாடுகள்!

31 Jul, 2020 | 06:34 PM
image

2020 பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது அபிவிருத்தி செயற்றிட்டங்கள், அரசுக்கு சொந்தமான வாகனங்கள் மற்றும் தேர்தல் விதிமுறைகளை மீறிய அரச அலுவலர்கள் தொடர்பாகவும் அதிகளவான முறைப்பாடுகள் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா நிறுவனத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

ஜுலை 30 திகதி வரையில் பொதுச் சொத்துக்களை பாதுகாப்பதற்கான நிகழ்ச்சித்திட்டத்திற்கு 152 சம்பவங்கள் அறிக்கையிடப்பட்டிருந்தன. அவற்றில் 137 முறைப்பாடுகள் இதுவரையில் உறுதிசெய்யப்பட்டுள்ளன. இவற்றுள் 37 முறைப்பாடுகள் அபிவிருத்தி செயற்றிட்டங்களான வீதி மற்றும் பாலங்களை திறந்துவைப்பதனூடாக அவற்றை பிரச்சார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியமை தொடர்பாகவும், 33 முறைப்பாடுகள் தேர்தல் விதிமுறைகளை மீறிய அரச அலுவலர்கள் தொடர்பாகவும், 33 முறைப்பாடுகள் அரசுக்கு சொந்தமான வாகனங்களை பயன்படுத்தியமை தொடர்பாகவும் பதிவிடப்பட்டுள்ளன.  

விரிவான தகவல்களை உள்ளடக்கிய சம்பவங்களின் விபர வரைபடத்தை பொதுச் சொத்துக்களை பாதுகாப்பதற்கான வலைத்தளமான www.apesalli.lkvDk எனும் இணையத்தளத்தினூடாக அவதானிக்கலாம். பொதுச் சொத்துக்களின் தவறான பிரயோகம் தொடர்பான பெரும்பாலான முறைப்பாடுகள் ஹம்பாந்தோட்டை (20) புத்தளம் (19) மற்றும் (17) கொழும்பு மாவட்டங்களில் பதிவாகியுள்ளன.  

ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அசேக்கா ஒபேசேக்கர இது தொடர்பாக குறிப்பிடுகையில், ' 

இவற்றைத் தடுப்தற்காக தேர்தல் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவற்றுக்கு பொறுப்புக்கூறும் வகையிலான வழக்குத் தாக்கல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதவிடத்து இதுபோன்ற சம்பவங்கள் தொடரும் என்பதையும் மீள வலியுறுத்திக் கூற விரும்புவதாகவும் ' தெரிவித்தார்.

ஒபேசேக்கர மேலும் தெரிவிக்கையில், ' தேர்தல் ஆணைக்குழுவின் சட்ட விதிமுறைகளை மீறுபவர்கள் தொடர்பாக அரசியலமைப்பின் உறுப்புரை 104யின் பிரகாரம் தேர்தல் ஆணைக்குழுவின் பொறுப்புக்கூறல் கடுமையாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதோடு, இவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு பொறுப்பான நிறுவனங்கள் அவற்றின் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவது மட்டுமல்லாது எதிர்காலத்தில் இவ்வாறன சம்பவங்கள் நடைபெறுவதைத் தவிர்க்கவும் உதவியாக அமையும் கருதுவதாக அவர் குறிப்பிட்டார்.

இதே வேளை, துரித கதி இலக்கங்களான 076 3223442/ 076 3223663 pppr@tisrilanka.org  மின்னஞ்சல் ஊடாகவும் www.apesalli.lk  இணையத்தளத்தினூடாகவும் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் நிறுவனத்தினால் தொடர்ச்சியாக தேர்தல் காலத்திலும் தேர்தல் தினத்திலும் முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படும். என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 10:50:13
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10