கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை  விற்க வேண்டாம் - 4 ஆவது நாளாகவும் தொடரும் சத்தியாக்கிரகம்

Published By: Digital Desk 3

31 Jul, 2020 | 05:04 PM
image

(செ.தேன்மொழி)

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விற்பனை செய்ய வேண்டாம் என்று கோரிக்கை விடுத்து கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையை பாதுப்பதற்கான ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரக போராட்டத்தை அரசாங்கத்திலிருந்து உறுதியான தீர்மானம் கிடைக்கும் வரையில் கைவிடப் போவதில்லை என்று ஒன்றிணைந்த தொழிற்சங்க தலைவர் பிரசன்ன களுத்தரதுங்க தெரிவித்தார்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்குமுனையை பாதுப்பதற்கான ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரக போராட்டம் மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் , அது தொடர்பில் வினவிய போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறியவதாவது,

கொழும்பு துறைமுகத்தின் கிழக்குமுனையை விற்பனை செய்யவேண்டாம் என்றே நாங்கள் இந்த சத்தியாக்கிரக போராட்டத்தை நடத்தி வருகின்றோம். கடந்த புதன் கிழமையே இந்த போராட்டத்தை ஆரம்பித்தோம். இதன்போது நாங்கள் எமது கோரிக்கையை முன்வைத்து துறைமுகத்திற்கு முன்பாக ஆர்பாட்டம் ஒன்றும் செய்திருந்தோம்.

இன்றைய தினம்வரை எமது ஆர்பாட்டத்தில் 23 தொழிற்சங்கங்கள் இணைந்துக் கொண்டுள்ளதுடன், துறைமுகத்தில் பணியில் ஈடுப்பட்டிருந்த தொழிற்சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் தற்போது வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதுவரையிலும் அரசாங்கத்திடமிருந்து உரிய பதில் கிடைக்கப் பெறவில்லை.

ஆளும் தரப்பினருடன் கலந்துரையாடுவதற்கு நாங்கள் முயற்சிக்கின்ற போதிலும் அது முடியாமல் போயுள்ளது. இந்நிலையில் நாங்கள் துறைமுகத்தின் நுழைவாயிலை மறைத்து ஆர்பாட்டமொன்னை தற்போது முன்னெடுத்து வருகின்றோம். எங்களது வேண்டுகோள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி நியாயத்தை பெற்றுக் கொடுக்கும் வரையில் எமது இந்த போராட்டம் தொடரும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58