19வது திருத்தம் மக்களின் அடிப்படை உரிமைகளை இல்லாதொழித்துள்ளது: பிரதமர்

Published By: J.G.Stephan

31 Jul, 2020 | 04:00 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அரசியலமைப்பின் 19வது திருத்தம் மக்களின் அடிப்படை உரிமைகளை  இல்லாதொழித்துள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி துரதிஷ்டவசமாக ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்ததன் காரணமாகவே பொதுஜன பெரமுன என்ற புதிய கட்சியை ஸ்தாபித்தோம். எமது கட்சி தொடர்ந்து  பலப்படுத்தப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கண்டி நகரில் இடம் பெற்ற துறைசார் நிபுணர்களின் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும்  குறிப்பிடுகையில்,

ராஜபக்ஷர்களின் உரிமைகளை மறுப்பதற்காகவே அரசியலமைப்பின் 19வது திருத்தம் நல்லாட்சி அரசாங்த்தினால் உருவாக்கப்பட்டது. இத்திருத்தத்தினால் சாதாரண மக்களின் அடிப்படை உரிமைகள் இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. புதிய அரசாங்கத்தில் இந்த தவறு திருத்திக் கொள்ளப்படும்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி துரதிஷ்டவசமாக ஐக்கிய தேசிய கட்சியுடன்  இணைந்ததன் காரணமாவே புதிய கட்சியை உருவாக்கினோம். இழக்கப்பட்ட உரிமைகளை ஜனநாயக ரீதியில் முறையாக பெற்றுக் கொண்டுள்ளோம். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின்  வெற்றியை தடுப்பதற்கு கடந்த அரசாங்கம் ஜனாதிபதி தேர்தல் காலத்தில்  பாரிய சூழ்ச்சிகளை  முன்னெடுத்தது . அனைவரது முயற்சிகளும் தோல்வியடைந்தது. 69 இலட்ச மக்கள் ஜனநாயக ரீதியில்  ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்கள்.

புதிய அரசாங்கத்தில் துரிதமாக ஆற்ற  வேண்டிய  விடயங்கள் பல உள்ளன. அரசியலில்  சிறந்த தேர்ச்சி மிக்கவர்களையும், நாட்டுக்கு சேவையாற்றும் இளம் தலைமுறையினரையும் மக்கள் பாராளுமன்றத்திற்கு இம்முறை  தெரிவு செய்ய வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெரிய நீலாவணை இரட்டை படுகொலை :...

2024-03-28 21:36:38