நுகேகொடை பிரதேசத்தில் மண்மேடு சரிந்து வீழ்ந்­ததன் காரணமாக, களனி வழியான ரயில் சேவைகள் நேற்று மாலை முதல் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டுள்ளதாக ரயில்வே திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.

இதன்­படி களனி மார்க்­கத்தின் ஊடான ரயில் சேவைகள் நுகே­கொடை வரை­யி­லேயே இடம்­பெறும் என்றும் ரயில்வே திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. 

மேலும், நுகேகொடைக்கும் மஹரகமைக்கும்  இடையிலான உட­ஹ­க­முல்லை பிர­தே­சத்­தி­லேயே மண்­மேடு சரிந்து வீழ்ந்­துள்­ளது எனவும் மண்­மேட்­டினை அகற்றும் பணிகள் இடம்­பெற்று வரு­வ­தா­கவும் அவை நிறைவு பெற்ற பின்னர் வழ­மை­யான களனி வழியான ரயில் சேவைகள் இடம்­பெறும் என்றும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.