யானைகளின் மர்ம மரணத்திற்கு இயற்கை நச்சு காரணமாக இருக்கலாம் என சந்தேகம்

Published By: Digital Desk 3

31 Jul, 2020 | 04:59 PM
image

தென்னாபிரிக்க நாடான போட்ஸ்வானாவில் கடந்த மூன்று மாதங்களில் நூற்றுக்கணக்கான யானைகள் மர்மமான முறையில் உயிரிழந்தது.

இந்நிலையில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட பரிசோதனைகள் யானைகளின் மர்ம இறப்பிற்கு பின்னால் இயற்கையான நச்சுத்தன்மை காரணமாக இருக்கலாம் என வனவிலங்கு மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறைந்தது 350 க்கும் மேற்பட்ட யானைகளின் திடீர் மரணங்களுக்குப் பின்னால் ஒரு தொற்று நோய் காரணமாக இருப்பது  சாத்தியமில்லை என்று வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறை பணிப்பாளர் சிரில் தாவோலோ தெரிவித்துள்ளார்.

ஒகாவாங்கோ பன்ஹான்டில் பிராந்தியத்தில் முதல் யானையின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு மாதங்களுக்கும் மேலாக மரணத்திற்கான காரணத்தை நிறுவ அதிகாரிகள் போராடி வந்தனர்.

ஆரம்ப விசாரணைகள் வேட்டையாடுதல் மற்றும் ஆந்த்ராக்ஸ் தொற்று நொய் போன்ற பொதுவான காரணங்களை நிராகரித்தன.

"அமெரிக்கா உட்பட பிற நாடுகளிலிருந்து நாங்கள் அதிக பரிசோதனை முடிவுகளைப் பெற்றுள்ளோம், இதுவரை முடிவுகள் ஒரு தொற்று நோய்க்கிருமியாக இருக்க வாய்ப்பில்லை என்று காட்டுகின்றன" என்று தாவோலோ தெரிவித்துள்ளார்.

"எங்கள் முக்கிய கவனம் இப்போது சுற்றுச்சூழலில் காணப்படும் பாக்டீரியாவிலிருந்து இயற்கையாக உற்பத்தி செய்யப்படும் நச்சுகள், நீர்நிலைகள் போன்ற பரந்த சுற்றுச்சூழல் காரணிகளை ஆராய்வதில் உள்ளது."

போட்ஸ்வானா, தென்னாபிரிக்கா, சிம்பாப்வே மற்றும் அமெரிக்காவில் உள்ள ஆய்வகங்களுக்கு அரசாங்கம் பரிசோதனைகளை அனுப்பியுள்ளது.

கடந்த வார நிலவரப்படி, போட்ஸ்வானாவில் பாக்டீரியா கண்டறிதல் மற்றும் நச்சுயியல் பரிசோதனைகள், தென்னாப்பிரிக்காவில் ஹிஸ்டோபோதாலஜி சோதனைகள் மற்றும் சிம்பாப்வேயில் பாக்டீரியா கண்டறிதல் மற்றும் ஹிஸ்டோபோதாலஜி சோதனைகள் ஆகியவற்றின் முடிவுகளைப் பெற்றது.

தென்னாபிரிக்காவிலிருந்து முடிவுகள் விரைவில் எதிர்பார்க்கப்படுகின்றன என்று தாவோலோ கூறினார்.

யானை இறப்புகள் சில சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகளின் பாதுகாவலர்களை கவலையடைய செய்துள்ளது. ஒரு காரணத்தை விரைவாக நிறுவ முடியாவிட்டால் மரணங்கள் கட்டுப்பாட்டை மீறக்கூடும் என்று அஞ்சுகிறார்கள்.

வேட்டையாடுதலால் ஆபிரிக்காவின் ஒட்டுமொத்த யானைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. போட்ஸ்வானாவில் 130,000 ஆபிரிக்க யானைகள் உள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08
news-image

பரப்புரைக்காக தமிழ்நாடு சென்ற ராகுல் காந்தி...

2024-04-15 13:08:34
news-image

நான் பொலிஸ் உத்தியோகத்தராக இருந்திருந்தால் எனது...

2024-04-15 12:53:59
news-image

தற்பாதுகாப்பு மற்றும் தாக்குதல் திட்டங்களிற்கு இஸ்ரேலிய...

2024-04-15 11:44:59
news-image

ஈரானிற்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டும் -...

2024-04-15 11:34:42