துருக்கியில் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் புதிய சட்டமூலம்

Published By: Vishnu

31 Jul, 2020 | 06:39 AM
image

சமூக ஊடகங்களை ஒழுங்குப்படுத்தும் வகையில் துருக்கியில் புதன்கிழமை புதிய சட்டமூலம் ஒன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தப் புதிய சட்டமூலத்திற்கமைய வெளிநாட்டு சமூக ஊடகங்களான முகப்புத்தகம் மற்றும் டுவிட்டர் என்பன தமது பிரதிநிதியை துருக்கயில் கொண்டிருக்க வேண்டும். 

மேலும் புதிய சட்டத்தின் கீழ் சமூக ஊடக வழங்குனர்கள் துருக்கியில் உள்நாட்டு பயன்பெருவோரின் தரவை சேமிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதனை எவரும் மீறுவார்களேயேனால் அவர்ளுக்கு எதிராக 1.5 மில்லியன் டொலர் வரை அபராதம் விதிக்கப்பட்டுவதுடன் அலைவரிசை கட்டுப்பாடு மற்றும் விளம்பரத் தடை என்பனவும் விதிக்கப்படும் என புதிய சட்டம் கூறுகின்றது.

மேலும் துருக்கியல் உள்ள சுமார் 55 மில்லியன் பயனாளர்களை தவறான தகவல்களில் இருந்து பாதுகாக்கவும் பயனாளர்களை குறைக்கும் முயற்சியாகவுமே இந்த சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஜனாதிபதி யின் ஆலோகர்கள் 

அத்துடன் இப்புதிய சட்டமூலத்தின் நோக்கம் மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை பாதுகாப்பதும் தவறான தகவல்களில் இருந்து அவர்களை விடுவிப்பதுமே என ஆளும் நீதி மற்றும் மேம்பாட்டு கட்சி தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்த புதிய சட்டமூலம் கருத்து சுதந்திரத்தை நசுக்கும் நடவடிக்கை என மனித உரிமை ஆர்வளர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 11:11:08
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10
news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41