கம்பஹாவில் உள்ள ஹோட்டல் அறை ஒன்றிலிருந்து வைத்தியர் ஒருவர் மர்மமாக  உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலத்தின் அருகே ஊசிகள் மற்றும் அவரது அடையாள அட்டைகள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் கடந்த மாதம் 30 ஆம் திகதியே ஹோட்டலில் அறை ஒன்றை முன்பதிவு செய்ததாகவும் நேற்றைய தினமே அறைக்கு வந்ததாகவும் முதல்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.