ரணில் - மஹிந்த தமது தவறுகளை மறைத்துக்கொள்ள சஜித்தை சாடுகின்றனர் - ரஞ்சித் மத்தும பண்டார

Published By: Digital Desk 3

30 Jul, 2020 | 05:26 PM
image

(செ.தேன்மொழி)

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தூய்மையான அரசியல் செயற்பாட்டையே முன்னெடுத்து வருகின்றார் என்று தெரிவித்த கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, விக்கிரமசிங்க - ராஜபக்ஷ தரப்பினர் தங்களது தவறை மறைத்துக் கொள்வதற்காக திட்டமிட்டே சஜித் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

ராஜபக்ஷ - விக்ரமசிங்க இணைந்து தங்களுக்கு சவாலை ஏற்படுத்தியுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருக்கு எதிராக போலி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். மத்திய கலாச்சார நிதியத்தில் இருந்து எடுக்கப்பட்ட பணம் நியாயமான முறையிலேயே செலவிடப்பட்டுள்ளது. இந்த நிதியம் தொடர்பான செயற்பாடுகளில் 11 பேர் ஈடுபட்டு வருகின்றனர்.

அதற்கமைய அதிலிருந்து பணம் எடுக்கப்பட்டால் இவர்களின் அனுமதியுடனே எடுக்கமுடியும். இந்நிலையில் இந்த பணம் தொடர்பில் அப்போதைய நிதி அமைச்சர் உள்ளிட்ட 8 பேர் கைச்சாத்திட்டுள்ளனர். இதில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க , ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் மற்றும் பிரதமர் செயலாளர் ஆகியோர் மாத்திரமே கைச்சாத்திடாது இருந்துள்ளனர். இங்குதான் சதிதிட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த பணம் வீடுகள் அமைப்பதற்கோ வேறு எதற்கோ செலவிடப்படவில்லை. விகாரைகளின் திருத்தத்திற்கும், புத்தர்சிலைகள் அமைப்பதற்கும் மற்றும் தேவாலங்களின் திருத்த வேலைப்பாடுகளுக்குமே பயன்படுத்தப்பட்டுள்ளது.நாங்கள் தெளிவாக சொல்கின்றோம்.

சஜித் பிரேமதாச என்பவர் ஏனையவர்களை போன்றவரல்ல, அவர் தூய்மையான அரசியல் செயற்பாடுகளிலேயே ஈடுபட்டு வருகின்றார். தற்போது உள்ள சில அரசியல்வாதிகள் தங்களது தவறை மறைப்பதற்காக இன்னுமொருவருக்க எதிராக வேனும் என்றே திட்டமிட்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

தவறு இடம்பெற்றிருந்தால் நீதிமன்றத்திற்கு செல்லுங்கள். ராஜபக்ஷர்களின் காலத்தில் எந்த விகாரை மற்றும் மதஸ்தலங்களின் அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது. இதுதான் ராஜபக்ஷ- விக்கிரமசிங்கவின் சேறுபூசல் செயற்பாடுகள். இதற்கு ஏமாற்றமடையாது எதிர்வரும் 5 ஆம் திகதி இந்த செயற்திறன் அற்ற அரசாங்கத்திற்கு தக்க பாடத்தை புகட்டுங்கள்.

கேள்வி : முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாயக்க மத்திய கலாச்சர நிதியம் தொடர்பில் பாரிய மோசடி இடம்பெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார் ஏன் ஒரு அணியிலிருந்தவர்களே இவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்?

பதில்: ரவி கருணாநாயக்கவின் மோசடிதான் இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைப்பது. ரவி முறைபாடு அளிக்கின்றார். ராஜபக்ஷ விசாரணை செய்கின்றார். இதனூடகவே இவர்களது டீல் அரசியல் முறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது அல்லவா?

கேள்வி :இந்த பணம் விகாரைகளை திருத்தவே செலவிடப்பட்டுள்ளது. அப்படியொன்றால் மத்திய கலாச்சார நிதியத்தின் நோக்கமும். இந்த செயற்பாடுகளும் ஒன்றுக்குள்ளா உள்ளடங்குகின்றது?

பதில்: மத்திய கலாச்சார நிதியம் என்பது நாட்டின் தொல்பொருளியில் சிறப்புமிக்க சொத்துகளை பாதுகாத்தல் மற்றும் அவை தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுப்பதாகும்.

அதற்கமைய விகாரைகள் மற்றும் தஸ்தல்களை அமைத்தல் , அவற்றை அபிவிருத்திச் செய்தல் , மற்றும் அவை தொடர்பான திருத்த வேலைப்பாடுகளை முன்னெடுப்பதாகும். இரண்டாம் புவனேக பாகு மன்னனின் கட்டடத்தை உடைத்து விட்டு , அவர்களை பாதுகாப்பதற்காக ஜனதிபதியும் பிரமரும் முயற்சித்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38