நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகிப்பதில் அரசு தோல்வி: சமன் ரத்னப்பிரிய

Published By: J.G.Stephan

30 Jul, 2020 | 04:53 PM
image

(நா.தனுஜா)
அரசாங்கத்தினால் கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடிக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரத்தை முறையாக நிர்வகிக்க முடியாத நிலையேற்பட்டிருக்கிறது. மக்கள் தமது அன்றாட வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதற்கே பாரிய சிக்கல்களைச் சந்திக்க வேண்டிய நிலையேற்பட்டிருக்கிறது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் உதார ரத்நாயக ஆகியோர் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டனர். அவர்கள் அங்கு மேலும் கூறியதாவது:

தற்போதைய அரசாங்கத்தினால் கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடிக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரத்தை முறையாக நிர்வகிக்க முடியாத நிலையேற்பட்டிருக்கிறது. அன்றாட வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதற்கே பாரிய சிக்கல்களைச் சந்திக்கவேண்டிய நிலை எதிர்காலத்தில் ஏற்படும் என்றே பலரும் கருதுகின்றனர். இந்நிலையை எவ்வாறேனும் மாற்றியமைக்க வேண்டும் என்பதுடன், அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பொருளாதார ரீதியான நிவாரணங்கள் எவையும் முறையாக உரியவர்களைச் சென்றுசேரவில்லை  என்பதும் முக்கியமாக அவதானம் செலுத்தப்பட வேண்டிய விடயமாகும்.

கொரோனா வைரஸ் பரவலையடுத்து நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலையின் காரணமாக கடந்த சில மாதகாலத்திற்குள் 1800 இற்கும் மேற்பட்ட வணிகங்கள் முற்றுமுழுதாக மூடப்பட்டிருக்கின்றன. அதேபோன்று மேலும் பெரும் எண்ணிக்கையானோர் தமது வேலைவாய்ப்பை இழந்திருக்கிறார்கள். எனினும் இவர்களுக்கான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் ஆக்கபூர்வமான செயற்திட்டங்கள் எதனையும் நடைமுறைப்படுத்தவில்லை. எனினும் அவ்வாறு வேலைவாய்ப்பை இழந்த இளைஞர், யுவதிகள் மற்றொரு தொழிலைப் பெற்றுக்கொள்ளும் வரையில் மாதாந்தம் அவர்களுக்கு 10,000 ரூபாவை வழங்குவதற்கு நாம் எமது கொள்கைப் பிரகடனத்தில் உறுதியளித்திருக்கிறோம்.

பொருளாதாரம் ஒருபுறமிருக்க நாட்டின் சட்டதிட்டங்களும் 2015 ஆம் ஆண்டிற்கு முன்னர் காணப்பட்ட நிலையை நோக்கிப் பயணித்துக்கொண்டிருப்பது போன்று தெரிகிறது. முச்சக்கரவண்டி தொழிற்சங்கத் தலைவரின் படுகொலை, அதியுச்ச பாதுகாப்பு வலயத்தில் மர்மமான முறையில் இடம்பெற்ற இறப்பு போன்றவற்றைக் குறிப்பிடலாம். சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற மரணம் தொடர்பில் எவ்வித சி.சி.டி.வி காணொளிகளும் வெளியாகவில்லை. எனினும் ஐ.டி.எஸ் வைத்தியசாலையிலிருந்து வந்த கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளியின் சி.சி.டி.வி காணொளிகள் வெளியாகின. எனினும் அதியுச்ச பாதுகாப்பு வலயத்திலிருந்து எந்தவொரு காணொளிகளும் கிடைக்கவில்லை என்பது எமக்குப் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே இவற்றிலிருந்து நாட்டின் சட்டதிட்டங்கள் மீண்டும் படுகுழிக்குள் விழுந்துகொண்டிருப்பதை உணரமுடிகின்றது என்று குறிப்பிட்டனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37