ஞாயிறு நள்ளிரவுடன் தேர்தல் பிரசாரங்கள் முடங்கும்: அமைதி காலத்தை சீர்குழைத்தால் கடும் நடவடிக்கை..!

Published By: J.G.Stephan

30 Jul, 2020 | 04:02 PM
image

(எம்.மனோசித்ரா)

பாராளுமன்றத் தேர்தலுக்கான பிரசார கூட்டங்கள் 2 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைவதோடு அமைதி காலம் ஆரம்பமாகிறது. எனவே அமைதி காலத்தில் சட்டத்திற்கு முரணாக செயற்படுபவர்களுக்கு எதிராக துரிதமாக நடவடிக்கை எடுக்குமாறு சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று வியாழக்கிழமை இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக  கடந்த 26 ஆம் திகதி கட்சி செயலாளர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் ஆகஸ்ட் 3 ஆம் திகதியும் பிரசாரங்களை நடத்துவதற்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதற்கு அனுமதி வழங்குவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட போதிலும் தேர்தலுக்கான ஏற்பாடுகள்  உள்ளிட்ட விடயங்களை கருத்திற் கொண்டு 2 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் பிரசாரங்களை முன்னெடுக்க தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனவே 2 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் பிரசார கூட்டங்களை நடத்துதல் , கிராமங்களிலும் வீடுகளிலும் கூட்டங்களை நடத்துதல், வீடு வீடாகச் சென்று வாக்குகளை கேட்டல், துண்டு பிரசுரங்களை விநியோகித்தல், அறிவித்தல் கொடுக்கப்பட்ட கிளை அலுவலகங்களில் பிரசார பலகைகளை காட்சிப்படுத்தியிருத்தல் மற்றும் சுவரொட்டிகளையும் அறிவித்தல்களையும் பதாதைகளையும் காட்சிப்படுத்தல் என்பவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவின் பின்னர் ஆரம்பமாகும் அமைதி காலப்பகுதியினுள் அனைத்து அரசியல் கட்சிகள் , குழுக்கள், வேட்பாளர்கள் இவற்றை தவிர்த்து சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலொன்றுக்கு முடிந்தளவு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று ஆணைக்குழு எதிர்பார்க்கிறது.

அமைதி காலப்பகுதியினுள்  மேற்கூறப்பட்ட  சட்ட விரோதமான செயற்பாடுகளைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் ஊடாக அனைத்து பொலிஸ் அலுவலர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30