முஸ்லிம் சமூகத்தினர் பொதுஜன பெரமுனவிற்கு  ஆதரவு வழங்குவார்கள் - பிரதமர்

Published By: Digital Desk 3

30 Jul, 2020 | 04:05 PM
image

(இராஜதுரை ஹஷான்)

முஸ்லிம்  சமூகத்தினர்   பொதுத்தேர்தலில் சிறந்த தீர்மானத்தை எடுத்து ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு    ஆதரவு வழங்குவார்கள்.  எனது  ஆட்சியிலேயே   அனைத்து இன  மக்களுக்கும் பாரபட்சமின்றிய அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.   புதிய அரசாங்கத்திலும் அப்பணிகள்  தொடரும் என  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கண்டி- உடுலகல  பிரதேசத்தில் இன்று  வியாழக்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்  கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

முஸ்லிம் சமூகத்தினருக்கும் எமக்கும் கடந்த காலங்களில் பல்வேறு   காரணிகளினால் இடைவெளி  ஏற்பட்டது. அவை இம்முறை  திருத்திக் கொள்ளப்படும்.   முஸ்லிம் சமூகத்தினர்  பொதுத்தேர்தலில்   சிறந்த தீர்மானத்தை எடுத்து   பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்குவார்கள் என்ற  நம்பிக்கை உள்ளது.

எமது அரசாங்கத்தில் முஸ்லிம்  சமூகத்தினர்  பாதுகாக்கப்பட்டுள்ளதுடன். அவர்களுக்கு முறையான அபிவிருத்தி பணிகள்  முன்னெடுக்கப்பட்டன.      அப்போதைய   அரசாங்கத்தில் 28  முஸ்லிம் அமைச்சர்கள்,இராஜாங்க அமைச்சர்கள்     அங்கம் வகித்தார்கள்.  விடுதலை  புலிகள் அமைப்பினால்   காத்தான்குடி பள்ளிவாசல் மீது முன்னெடுக்கப்பட்ட  தாக்குதலில் பலர் உயிரிழந்தார்கள். அப்போது   முஸ்லிம் சமூகத்தினருக்கு  இராணுவப  பாதுகாப்பு  வழங்கப்பட்டது.

இனங்களை அடிப்படையாகக் கொண்டு எமது ஆட்சியில்   அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படவில்லை.    இலங்கை  பிரஜைகளுக்கே அபிவிருத்திகள்  முன்னெடுக்கப்பட்டன. இனவாத கொள்கைகள் பௌத்த மதத்திற்கு முரணானது .    அனைத்து இன  மக்களுக்கும் சிறந்த சேவையாற்றியுள்ளோம் என்பது  தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59