தலைவிதியைத் தீர்மானிக்கும் தேர்தல் - வாக்களிக்கும் தமிழர்களுக்கு உலகத் தமிழர் பேரவையின் வலியுறுத்தல்

Published By: Digital Desk 3

30 Jul, 2020 | 02:41 PM
image

(நா.தனுஜா)

இலங்கைத் தமிழ்மக்கள் தற்போது முக்கியமானதொரு தெரிவை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றார்கள். எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் முடிவுகள் அதன் பின்னரான இலங்கையின் தசாப்தகாலத் தலைவிதியைத் தீர்மானிப்பவையாக அமையப்போகின்றன.

எனவே பொதுத்தேர்தலில் போட்டியிடும் தமிழ் அரசியல் கட்சிகளில் தமிழர்களின் தேசிய நலனை முன்நிறுத்தும் கட்சி எது? நெருக்கடியான சூழ்நிலைகளிலும் தமிழர் அரசியலை முன்கொண்டு செல்லக்கூடிய கட்சி எது? என்று சிந்திப்பதுடன், நீண்டகால அடிப்படையிலான தமது அரசியல், பொருளாதார மற்றும் ஜனநாயக உரிமைகளை அடைந்துகொள்வதை மனதிலிருத்தியே தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் என்று உலகத் தமிழர் பேரவை வலியுறுத்தியிருக்கிறது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதத் 5 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் தமிழ்மக்கள் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி உலகத் தமிழர் பேரவை வெளியிட்டிருக்கும் நீண்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

இலங்கை மக்கள் முக்கியமானதொரு தெரிவை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றார்கள். எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் முடிவுகள் அதன் பின்னரான இலங்கையின் தசாப்தகாலத் தலைவிதியைத் தீர்மானிப்பவையாக அமையப்போகின்றன.

தற்போது மிகைப்படுத்தப்படாதளவில் ஜனநாயகத்தன்மைகளும், பன்மைத்துவமும் ஆபத்திலுள்ளன. எனவே குறிப்பாகத் தமிழ், முஸ்லிம் சமூகத்தினர் உள்ளடங்கலாக ஒட்டுமொத்த இலங்கையர்களும் எதிர்வரும் பொதுத்தேர்தலை நீண்டகால அடிப்படையிலான தூரநோக்குடன் பார்க்க வேண்டும் என்றும், அதனைக்கொண்டு தமது உரிமையை விவேகத்துடனும் பொறுப்புணர்வுடனும் பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றோம். இல்லாவிட்டால் அதற்காக செலுத்தவேண்டிய விலை மிகவும் உயர்வானதாகவே இருக்கும்.

ஜனாதிபதி ராஜபக்ஷவின் ஆட்சி தெளிவற்ற - ஆணையிடல் மற்றும் விசேட செயலணிகள் ஊடாக நிர்வாகத்தை முன்னெடுப்பதாக இருக்கும் அதேவேளை முக்கிய சிவில் கட்டமைப்புக்கள் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளின் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன.

அதுமாத்திரமன்றி மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல் ஆகியவை ஊடகவியலாளர்கள் சுயதணிக்கை செய்துகொள்வதற்கும், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் அமைதியாவதற்கும் தூண்டியிருப்பதுடன் சிறுபான்மை சமூகத்தவர் மத்தியில் பாதுகாப்பின்மை உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

இத்தகையதொரு பின்னணியில் அரசியலமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகக் குறிப்பாக, 19 ஆவது திருத்தத்தை இல்லாதொழிப்பதற்காக ராஜபக்ஷாக்கள் எதிர்வரும் பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கோருகின்றனர். ஒரு சமநிலையற்ற, பாராளுமன்றம் மற்றும் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டிற்கு உட்படாத, முக்கிய கட்டமைப்புக்களை அவசியமற்றதாக்குகின்ற நிறைவேற்றதிகாரம் நாட்டை எத்தகைய நிலைக்கு இட்டுச்செல்லும் என்பதைச் சிந்திப்பதொன்றும் அத்தகை கடினமான காரியமல்ல. அத்தகையதொரு அரைவாசி ஜனநாயகத்தில் சட்டத்தின் ஆட்சியும் மனித உரிமைகளும் மதிப்பிழப்பதுடன், தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் வகையிலான ஆட்சி தலைதூக்கும். நாட்டின் அபிவிருத்திக்கும், சுபீட்சத்திற்கும் எவ்வித கட்டுப்பாடுகளுமற்ற வலுவான தலைமைத்துவமொன்று அவசியம் என்ற வாதம் போலியானதும், சுயபாதுகாப்பை முன்நிறுத்தியதும் மாத்திரமேயாகும்.

பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மையுடனான ஜனநாயகக்கட்டமைப்பொன்று அனைத்து மக்களுக்கும் அவசியம் என்பதுடன், அது சிறுபான்மை சமூகத்தைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் பெரும்பான்மை அதிகாரம் சிறுபான்மையின மக்களை இலக்குவைத்து செயற்படுகையில், குறைந்தபட்சம் சட்ட அடிப்படையிலான தத்துவார்த்தக்கூறுகள் குறிப்பிடத்தக்கவையாக இருக்கும். எனவே தமிழ், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்த மக்கள் தேர்தலைப் பொறுத்தவரையில் தமக்குள்ள தெரிவுகள் தொடர்பில் நன்கு ஆய்ந்தறிவது அவசியமாகும்.

போர் முடிவடைந்து 11 வருடங்களின் பின்னர் அரசியல் சூழ்நிலைகள் மற்றும் தேர்தல் வாய்ப்புக்கள் தொடர்பில் மறுமதிப்பீடொன்றைச் செய்வது தமிழ்ச்சமூகத்திற்கு இன்றியமையாததொன்றாகும். வடக்கு - கிழக்கு தமிழ்ச்சமூகத்தைப் பொறுத்தவரையில் நாட்டில் கௌரவமானதும் பாதுகாப்பானதுமான நிலையொன்றை அடைந்துகொள்வது இன்னமும் கனவாகவே இருந்துவருவதுடன், அரசியலமைப்பு மற்றும் பொறுப்புக்கூறல் அடிப்படையிலான அடைவுகளில் பாரிய அதிருப்திநிலை தொடர்கிறது. எனினும் கடந்த 5 வருடகாலத்தில் வடக்கு - கிழக்கில் இராணுவத்தின் பிரசன்னம் நிறுத்தப்பட்டமை மற்றும் போரின் போது மரணித்தவர்களை நினைவுகூருவதற்கான சுதந்திரம் என்பவை உள்ளடங்கலாகத் தமிழ்மக்கள் குறிப்பிடத்தக்களவான இயல்புநிலையொன்றை அனுபவித்தார்கள் என்பது மறுக்கப்பட முடியததாகும். எனினும் தேர்தல் முடிவுகளால் இவற்றில் எவற்றையெல்லாம் இழக்கவேண்டியேற்படும் என்பது மிகமுக்கியமான கேள்வியாகும்.

நாட்டின் தேசிய அரசியலைப் பொறுத்தவரையில் கடந்த 10 வருடகாலத்தில் தமிழ் அரசியல் தலைமைத்துவம் குறிப்பிடத்தக்க நேர்மறையான அடைவுகளைக் காண்பித்ததுடன், அதற்கு உதாரணமாக கடந்த 2018 ஆம் ஆண்டில் ஏற்பட்ட அரசியலமைப்பு நெருக்கடியின் போது வகித்த பங்கைக் குறிப்பிடமுடியும். எதிர்கால அரசியல் ரீதியான நிலைபேறான தன்மைக்கு இத்தகைய அடிப்படைகளை மேலும் வலுப்படுத்திக்கொள்ள வேண்டுமே தவி, தொய்வடையச்செய்யக் கூடாது. இன்றளவில் இலங்கைத் தமிழ்ச்சமூகம் மிகவும் நலிவடைந்த நிலையில் காணப்படுவதுடன் - வலுக்குறைந்த தேர்தல் வாய்ப்பு மற்றும் செயற்திறன் குறைந்த கல்வி, பொருளாதார செயற்பாடுகள் என்பவற்றையே அது காண்பிக்கின்றது.

இன்றளவில் இலங்கைத் தமிழ்ச்சமூகம் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்திருக்கின்றது. ராஜபக்ஷாக்களால் முன்னெடுக்கப்படும் ஆட்சிநிர்வாகத்தில் சிறுபான்மைச் சமூகங்களின் தேவைப்பாடுகள் குறித்த அக்கறையின்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் என்பவற்றுக்கான கடப்பாடின்மை, சிவில் கட்டமைப்புக்களில் அதிகரித்துவரும் இராணுவமயமாக்கல் ஆகியவை மேலோங்கியிருப்பதுடன், பல்வகைமைத்தன்மை கொண்ட கிழக்கு மாகாணத்தின் தொல்பொருட்களைப் பாதுகாப்பதற்கான ஜனாதிபதி செயலணியில் சிங்களவர் மாத்திரம் நியமிக்கப்பட்டமையை உதாரணமாகக் குறிப்பிடலாம். எனவே தமிழ்ச்சமூகம் எதிர்வரும் பொதுத்தேர்தலில் என்ன செய்யப்போகின்றது? முதலாவதாக அனைவரும் தமது வாக்கின் பெறுமதியை நன்குணர்ந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு வாக்கும் மிகவும் முக்கியமானதாகும். அத்தோடு தேர்தலில் போட்டியிடும் தமிழ் அரசியல் கட்சிகளில் தமிழர்களின் தேசிய நலனை முன்நிறுத்தும் கட்சி எது? நெருக்கடியான சூழ்நிலைகளிலும் தமிழர் அரசியலை முன்கொண்டு செல்லக்கூடிய கட்சி எது? என்று சிந்தித்து தமிழர்கள் இம்முறை தேர்தலில் வாக்களிக்க வேண்டும். நீண்டகால அடிப்படையிலான தமது அரசியல், பொருளாதார மற்றும் ஜனநாயக உரிமைகளை அடைந்துகொள்வதை மனதிலிருத்தி தமிழர்கள் தமது பெறுமதி மிக்க வாக்குகளை எதிர்வரும் பொதுத்தேர்தலில் பயன்படுத்த வேண்டும் என்று அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22