தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்காக 75 ஆயிரம் பொலிஸார் ; மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை - பொலிஸ் தலைமையகம்

29 Jul, 2020 | 09:29 PM
image

(செ.தேன்மொழி)

தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்காக 75 ஆயிரம் பொலிஸார் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த தேர்தல் செயற்பாடுகள் கண்காணிப்பு தொடர்பான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, அனைவரும் அச்சமின்றி வாக்களிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட தேர்தல் செயற்பாடுகளை விட இம்முறை பாரிய சவால்களை எதிர்நோக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. கொவிட் -19 வைரஸ் பரவல் இதுவரையிலும் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்படாத நிலையில் சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனை மற்றும் சுகாதார பிரிவின் அறிவுறுத்தல்களுக்கமைய தேர்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் பொலிஸாரின் செயற்பாடுகள் அனைத்தும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய பதில் பொலிஸ்மா அதிபர் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார். இந்நிலையில் ஏனைய செயற்பாடுகளை விட தேர்தல் செயற்பாடுகளுக்கு இம்முறை முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதுடன் , இதுவரையில் பொலிஸ் தலைமையகத்தினால் தொலைபேசி ஊடாக மாத்திரம் 154 ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் 9 சுற்று நிரூபங்களும் வெளியிடப்பட்டுள்ளன. அதற்கமைய  நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் பேர் வரையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

தேர்தல் கால பாதுகாப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் 3 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படுவதுடன், அதற்கமைய 75 ஆயிரம் பொலிஸார் வரையில் சேவையில் ஈடுபடவுள்ளனர். இதன்போது போது கடைபிடிக்கப்பட வேண்டிய சுகாதார விதிமுறைகள் அடங்கிய வர்தமானி வெளியிடப்பட்டுள்ளதுடன், அதற்கமைய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இதேவேளை தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பில் 317 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுள் 6 வேட்பாளர்களும் உள்ளடங்குகின்றனர். அதற்கமைய இதுவரையில்  289 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றுள்ளதுடன் , இதன்போது 80 குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளன. கடந்த ஜனாதிபதி தேர்தலையும் விட முறைபாடுகள் அதிகரித்துள்ளதுடன், 2015 ஆம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடுகையில் , இம்முறை இந்த முறைக்கேடுகள் 35 சதவீதத்தில் குறைவடைந்துள்ளன. இந்த விவகாரங்கள் தொடர்பான விசாரணைகள் யாருடைய அச்சுறுத்தலும் இன்றி மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், இந்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் அரச வாகனங்கள் மாத்திரம் 3 கைப்பற்றப்பட்டள்ளன.

இதன்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு எதிராக 92 முறைப் பாடுகளும் , ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக 22 முறைப் பாடுகளும்,  ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக 44முறைப் பாடுகளும்,  வேறு சிறு கட்சிகளுக்கு எதிராக 45 முறைபாடுகளும் பதிவாகியுள்ளதுடன் ,  கைது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த 100 பேரும் , ஐ.தே.க. 20 பேர், ஐக்கிய மக்கள் சக்தியில் 53 பேர் , ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 26 ,தேசிய மக்கள் சக்தி 6 பேர், தமிழ் தேசிய கூட்டமைப்பு 40 பேர் மற்றும் வேறு கட்சி 69 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. வாக்களிப்பின் பின்னரும் முறைப்பாடுகள் ஏற்படாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய பொலிஸ் நடமாடும் சேவை மற்றும் கழக்கம் அடக்கும் படையினர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளர். வாக்களிப்பு நிலையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அதிகாரிகள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த செயற்பாடுகளுக்காக சிவில் பாதுகாப்பு அதிகாரிகளும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கணக்கெடுப்பு நிலையங்கள் 42 - 66 அதிகரிக்கப்பட்டது. அதற்கமைய அதிகாரிகளையும் அதிகரிக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. இதேவேளை சுகாதார பாதுகாப்பு உபகரணங்களை பெற்றுக் கொடுப்பதற்காக 1000  மில்லியன் ரூபாய் நிதி பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் , அதிலிருந்து தொற்றுநீக்கி பதார்த்தங்கள் , கையுறை மற்றும் முககவசங்கள் பொலிஸாருக்கு பெற்றுக் கொடுக்கப்படவுள்ளன. இந்நிலையில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிப்பில் ஈடுப்படலாம்.

கேள்வி : தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எவ்வாறு திட்டமிடப்பட்டுள்ளது?

பதில்: இம்முறை 16 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிப் பெற்றுள்ளனர். அதற்கமைய 12984 மத்திய நிலையங்களில் வாக்களிப்பு செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. வாக்குகளை கணக்கிடுவதற்காக 66 நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இதன்போது பொலிஸ் நடமாடும் பாதுகாப்புச் சேவையில் விசேட அதிரடிப்படை மற்றும் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளடங்கலாக 3067 பேர் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர் .இதேவேளை பொலிஸ் சோதனைச் சாவடிகள் 1584 செயற்பாடுகளை முன்னெடுக்கம்.

கேள்வி: தேர்தல் முறைக்கேடுகளை கட்டுப்படுத்த பொலிஸார் உரியமுறையில் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது?

பதில்: பொலிஸார் எந்தவித அச்சுறுத்தலும் இன்றி இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரையில் பக்கச்சார்பின்றி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரகின்றனர். இவ்வாறு கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதேவேளை இதுபோன்ற முறைக்கேடான விடயங்கள் இடம்பெற்றிருந்தால் அது தொடர்பில் 1933 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு எமக்கு தெரிவிக்க முடியும்.

--

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57