தமிழ், சிங்கள பிளவுகளுக்கு பிக்குகளே முதன்மை காரணம் - விடுதலைப்புலிகள் மக்கள்பேரவை

Published By: Digital Desk 4

29 Jul, 2020 | 08:54 PM
image

தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும் இடையில்  ஏற்பட்டுள்ள பிளவுகளுக்கு ஆட்சியாளர்களைவிட பௌத்தபிக்குகளே  காரணம். என்று விடுதலைப்புலிகள் மக்கள்பேரவையின் பிரதித்தலைவர் செ.அரவிந்தன் தெரிவித்தார்.

வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்க அலுவலகத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்துகருத்து தெரிவித்த அவர்,

சமஸ்டியை கோரினால் வடகிழக்கில் இரத்த ஆறு ஓடும் என்று பௌத்த துறவிகள் தெரிவிக்கின்றனர். உண்மையில் சமஸ்டி தொடர்பான அறிவற்றவர்களாகவே அவர்கள் இருக்கின்றனர். 1926இல் சமஸ்டியை முதல்முதலாக கோரியது சிங்களமக்கள் தான். பண்டார நாயக்கவும் அது தொடர்பான முன்மொழிவுகளை வைத்திருத்திருக்கின்றார்.

எனவே சமஸ்டி தொடர்பான அறிவற்றவர்களாக அரசியல் மேடைகளிலே அவர்கள் பேசுவது அவர்களின் துறவறத்திற்கு துரோகம் இழைப்பதாகவே பார்க்க முடியும்.

இந்த நாட்டில் இன கலவரங்களை முன்னெடுத்ததிலே பௌத்த பிக்குகள் தான் பிரதான இடத்தினை வகித்திருந்தார்கள்.

தமிழர்களிற்கும் சிங்களவர்களிற்கும் இடையில்  ஏற்பட்டுள்ள பிளவுகளுக்கு சிங்கள மக்கள் மற்றும் ஆட்சியாளர்களை விட பௌத்தபிக்குகளே அதிகமான காரணமாக இருந்துள்ளார்கள்.

அரசியல் கருத்துக்களை கூறுவது துறவிகளின் செயற்பாடு அல்ல. அத்துடன் அவ்வாறான துறவிகளிற்கு அரசினால் பல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

எனவே அறம் சார்ந்து அன்பை போதிக்கும் கருத்துக்களை அவர்கள் முன்வைக்க வேண்டும். சிங்கள மக்கள் இந்த விடயத்தில் ஏமாறக்கூடாது.

விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு சமஸ்டிக்கொள்கையில் உறுதியுடன் செயற்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று அந்த நம்பிக்கை தளர்ந்து போயிருக்கின்றது.

தனி நாட்டிற்காக போராடிய நாங்கள் சமஸ்டி கொள்கையின் அடிப்படையிலாவது எங்களிற்கான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கின்றோம்.

அந்தவகையில் விடுதலைப்புலிகள் மக்கள் பேரவையானது யாழ்தேர்தல் தொகுதியில் கூடாரசின்னத்திலே போட்டயிடுகின்றது. மக்கள் எம்மை ஆதரிப்பார்கள் என்று நம்புகின்றோம். போராளிகளையும் பொதுமக்களையும் ஒற்றுமைப்படுத்தி பயணிக்க வேண்டிய நிலையில் எமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம் என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33