மலேசிய முன்னாள் பிரதமருக்கு எதிரான தீர்ப்பு  

Published By: Priyatharshan

29 Jul, 2020 | 04:46 PM
image

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீது முன்வைக்கப்பட்ட பல மில்லியன் டொலர் ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு மலேசிய நீதிமன்றம் ஒன்று 12  வருடகால சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

பல மில்லியன் டொலர் ஊழல் வழக்குகளில் முதல் ஏழு வழக்குகளிலும் அவர் குற்றவாளியென நிரூபிக்கப்பட்டுள்ளார்.  மேலும் நம்பிக்கை மீறல், பண மோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோகம் போன்ற குற்றச்சாட்டுகளும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. எனினும் அவர் அதனை மறுத்துள்ளார்  .

மலேசியாவின் ஊழலுக்கு எதிரான முயற்சிகளுக்கு முன்னாள்  பிரதமர் நஜீப் ரசாக் மீதான வழக்கு பெரும் பரீட்சைக் களமாக அமைந்துள்ளது என்று கூறப்படும் அதேவேளை, குறி

த்த தீர்ப்பு மலேசியாவில் மாத்திரமன்றி உலகெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு 12 வருட சிறைத் தண்டனை மாத்திரமன்றி, 49 மில்லியன் டொலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான முதல் மலேசியப் பிரதமர் என்ற அடையாளத்தையும் அவர் பெறுகிறார்.

அரசுக்குச் சொந்தமான 42 மில்லியன் ரிங்கிட் பணத்தை தனது தனிப்பட்ட கணக்கிற்கு  மாற்றியதாக அவர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.  இது தொடர்பில் வழக்கை விசாரித்த நீதிபதி முகமட் கஸாலி, சந்தேகத்துக்கு இடமின்றி அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

2009 ஆம் ஆண்டு தொடக்கம் 2018 ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்த நஜிப்பிற்கு, அதிகார துஷ்பிரயோகத்திற்காக 12 வருட சிறை தண்டனையும் பண மோசடி நம்பிக்கை மீறல் தொடர்பிலான 6 வழக்குகளில் ஒத்திவைக்கப்பட்ட தலா 10 ஆண்டு சிறைத் தண்டனையும்  விதிக்கப்பட்டுள்ளமை மாத்திரமன்றி  அவர் மீது ,ஒரு கசையடி தண்டனைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.  எனினும் 67 வயதான முன்னாள் பிரதமர் என்ற காரணத்தால் குறித்த கசையடி தண்டனை பிற்போடப்பட்டுள்ளது .

இதேவேளை நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் என்று நஜீப் குறிப்பிட்டுள்ளார் .

 இதேவேளை, உலகின் பல்வேறு நாடுகளில் அரசியல் தலைவர்கள் மீது பண மோசடி , அதிகார துஷ்பிரயோகம் , ஊழல்கள் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற போதிலும் அவை சரியான வகையில் நிரூபிக்கப்படாமல் போவதால் குறித்த தலைவர்கள் தப்பித்துக் கொள்கின்றனர்.

அதுமாத்திரமன்றி சட்டத்தில் உள்ள ஓட்டைகளையும் அவர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்கின்றனர் . இவை அனைத்திற்கும் அப்பால் மலேசிய உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள இந்தச் சரித்திர முக்கியத்துவம் மிக்க தீர்ப்பு உலகில் வெகுவாக பேசப்படுவது மாத்திரமன்றி பாராட்டப்படும் என்பதிலும் சந்தேகமில்லை.

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04
news-image

ஒற்றுமை பற்றி பேசிப்பேசியே பிளவுபட்ட முஸ்லிம்...

2024-03-25 14:21:50
news-image

பிசுபிசுத்த நம்பிக்கையில்லா பிரேரணை

2024-03-25 14:16:49