வடக்கில் சித்தமருத்துவத்துறையை வளர்ப்பதற்கு விசேட நடவடிக்கை!

29 Jul, 2020 | 11:27 AM
image

வடக்கில் சித்தமருத்துவ துறையை மேலும் வளர்ப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக வடமாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். 

புதிதாகக் கட்டப்பட்ட பள்ளமடு கிராமிய சித்த மருத்துவமனையினை வட மாகாண ஆளுநர் திருமதி.பீ.எஸ்.எம்.சாள்ஸ் 28-7-2020 அன்று வைபவரீதியாகத் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் வட மாகாண பிரதம செயலாளர், சுகாதார சுதேச மருத்துவம் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் செயலாளர், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர், மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள ஆணையாளர் மற்றும் உத்தியோகத்தர்கள், பள்ளமேடு கிராமிய சித்த மருத்துவமனை மருத்துவப் பொறுப்பதிகாரி, சுதேச வைத்தியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். 

அத்துடன் 'சித்த மருத்துவமும் கொரோனாவிற்குபின் வாழ்க்கை முறையும்' என்ற தலைப்பில் உருவான இறுவட்டை ஆளுநர்; வெளியிட்டு அதன் காட்சிப்படுத்தலையும் கண்டுகளித்தார். இதனையடுத்து அங்கு உரையாற்றிய ஆளுநர் தெரிவிக்கையில்,  

அரச சேவை நிலையங்கள் மக்களுடைய தேவையை அறிந்து தமது சேவைகளை மக்களின் கால்தடத்திற்கே கொண்டுசெல்ல வேண்டும். கட்டடங்களை கட்டி முடிப்பதோடு மட்டும் எமது வேலை முடியவில்லை. அந்தக் கட்டடங்களைச் சார்ந்த ஊழியர்கள் உரிய சேவைகளை மக்களுக்கு முழுமையாக வழங்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்கு அலுவலகத்திற்கு வருகைதந்து மக்கள் சேவையாற்ற வேண்டும். சித்த மருத்துவ முறையில் எனக்கு நீண்ட கால நம்பிக்கையுண்டு. 

உணவே மருந்து என்று சொல்லுவார்கள். நமது உடலிற்குத் தேவையான ஏதோவொன்று அதிகாமாகும்போது நாம் நோய்வாய்ப்படுகின்றோம். உதாரணமாக, இனிப்பு அதிகமானால் அதனை நீரிழிவு நோய் என்றும்;, உப்பு அதிகமானால் அதை இரத்த அழுத்தம் என்றும், கொழுப்பு அதிகமானால் அதை கொலஸ்ரோல் என்றும் சொல்கிறார்கள். 

உணவின் அடிப்படையைக்கொண்டு நோய்களைக் குணமாக்குவதற்கான செயற்பாட்டினை கொண்டிருக்கின்ற சித்த வைத்திய முறையில் தற்போது மேல் நாட்டவர்கள் உட்பட அனைவருமே நம்பிக்கை ஏற்பட்டுள்ள நிலையில் நம்முடைய மக்களும் அதைப் பின்பற்ற வேண்டுமென்பதற்காகத்தான் சித்த வைத்தியத் துறையை வளர்;க்க வேண்டுமென்ற சிந்தனை தேசிய மட்டத்தில் காணப்படுகின்றது. 

அதிலும் முக்கியமாக வட மாகாண சபை அதில் ஆர்வமுடன் ஈடுபட்டிருப்பது மகிழ்ச்சியாகவுள்ளது. பொதுவாக நமது நாட்டிலே அறிகுறிகளுக்கு மருத்துவம் செய்கின்றதொரு நடைமுறை இருக்கின்றது. அதனால் ஒரு நோயின் முக்கிய காரணங்களை சோதனை செய்யாமல் மருத்துவம் செய்யும் போக்கே அதிகமாக காணப்படுகின்றது. அதனால் மேலதிக நோய்களை ஒரு நோயாளி பெற்றுக்கொள்ளும் நிலையானது பல சந்தர்ப்பங்களில் ஏற்படுகின்றது. 

எனவே, நோயின் தன்மைகளையும் அதற்குரிய மருந்தையும் உணவுப் பழக்கத்தையும் சரியாக சொல்லுகின்ற ஒரு வைத்திய முறைதான் இந்த சித்த வைத்திய முறை. இவற்றைப்பற்றிய சரியான புரிதலை மக்களுக்கு கொண்டுசெல்ல வைத்தியர்கள் முயற்சி எடுக்கவேண்டும். அப்பொழுதுதான் மக்களுக்கு குறிப்பாக இளைய தலைமுறைக்கு இம்மருத்துவமுறையில் நம்பிக்கை ஏற்படும்.

இம்மருத்துவத்துறையை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக்கூடிய ஒரு துறையாக உருவாக்க வேண்டும். தற்போது காணப்படும் அனைத்து அழகு சாதனப் பொருட்களிலும் அவை இயற்கை மூலிகைகளால் தயாரிக்கப்பட்டவையெனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அது உண்மையாவென நமக்குத் தெரியாது. 

ஆனால், வட மாகாணத்தில் இருக்கும் இந்த சித்த வைத்தியத் திணைக்களம் நினைத்தால் மக்களைக்கொண்டே மூலிகையினாலான பொருட்களைத் தயாரித்து மக்கள் பாவனைக்காக விநியோகிக்க முடியும். இதன் மூலம் வாழ்வாதாரத்திற்காக ஏங்குகின்ற மக்களுக்கு வாய்ப்பளிக்கின்ற சந்தர்ப்பமாகவும் அமையும். தகுந்த பொருட்களைப் பெற்றுக்கொள்ள விரும்புகிற மக்களுக்கும் நல்ல சந்தர்ப்பமாகவும் அமையும். 

எனவே, இந்த சித்த வைத்தியத்துறை அதனோடு சம்மந்தப்பட்ட பல்வேறு பிரிவுகளை மக்கள் மயப்படுத்த வேண்டும். அதற்கான முயற்சிகளை சித்த மருத்துவத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். இந்த வைத்தியத்துறையை வளர்க்க மாகாண சபையும் பிரதம செயலாளரும் எடுத்திருக்கின்ற அனைத்து முயற்சிகளையும் நான் பாராட்டுகின்றேன். இவ்வைத்தியத் துறையை மென்மேலும் வளர்க்கத் தேவையான அனைத்து அனுமதிகளையும் உதவிகளையும் பெற்றுத் தர ஆளுநர் செயலகம் ஒத்துழைக்கும் என்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04