அமெரிக்காவுடனான பதற்றங்களுக்கு மத்தியில் ஈரான் ஏவுகணை பரிசோதனை

Published By: Vishnu

29 Jul, 2020 | 09:03 AM
image

ஈரானின் துணை இராணுவ புரட்சிகர காவல்படை ஹோர்முஸ் நீரிணையிலிருந்து பிரதி விமானம் தாங்கி கப்பலை குறிவைத்து ஹெலிகொப்டரில் இருந்து ஏவுகணைகளை வீசி சோதனை மேற்கொண்டுள்ளதாக அந் நாட்டு அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

"மொஹமட் நபி 14" என அழைக்கப்படும் இந்த பயிற்சிகள் உலகளாவிய எண்ணெய் உற்பத்தியில் ஐந்தில் ஒரு பகுதிக்கான முக்கிய கப்பல் பாதையான ஹார்முஸ் நீரிணைக்கு அருகில் நடைபெற்றது.

ஜனவரி மாதம் அமெரிக்க ட்ரோன் தாக்குதல் பாக்தாத்தில் ஒரு உயர் ஈரானிய ஜெனரலைக் கொன்றது மற்றும் தெஹ்ரான் ஈராக்கில் அமெரிக்கப் படைகளை குறிவைத்து கண்டம் விட்டு கண்டம் செல்லும் ஏவுகணைகளை வீசியதன் மூலம் பதிலளித்தது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் ஈரான் மற்றும் அமெரிக்கா இரண்டின் பொருளாதாரங்களை பல மாதங்களாக மூழ்கடித்துள்ள நிலையில், ஒக்டோபரில் காலாவதியாகவுள்ள தெஹ்ரான் மீது பல ஆண்டுகளாக ஐ.நா. ஆயுதத் தடையை நீட்டிக்க அமெரிக்கா வாதிடுவதால் மோதலின் அறிகுறிகள் அதிகரித்து வருகின்றன. 

சிரியா மீது அண்மையில் ஒரு அமெரிக்க ஜெட் போர் விமானம் ஈரானிய பயணிகள் விமானத்தை நெருங்கிய சம்பவமும் இரு நாடுகளுக்கிடையிலான பதட்டங்களை புதுப்பித்துள்ளது.

இவ்வாறு தெஹ்ரானுக்கும் வொஷிங்டனுக்கும் இடையிலான பதட்டங்களுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க கடற்படை, ஈரானின் பொறுப்பற்ற நடத்தை குறித்து கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இது அச்சுறுத்துவதற்கும் வற்புறுத்துவதற்குமான ஒரு முயற்சி என்றும் கூறியுள்ளது.

ஹோர்முஸ் நீரிணை, தென்கிழக்கில் ஓமான் குடாவையும், தென்மேற்கில் பாரசீகக் குடாவையும் கொண்டு அமைந்துள்ள ஒரு குறுகலான கடற் பரப்பாகும். இதன் வடக்கில் ஈரானும், தெற்கில் ஐக்கிய அரபு அமீரகமும், ஓமானின் ஒரு பகுதியான முசாந்தமும் அமைந்துள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17