வேலை நிறுத்தத்தை நிறைவுசெய்ய பொது சுகாதார பரிசோதகர்கள் தீர்மானம்!

28 Jul, 2020 | 08:55 PM
image

(எம்.மனோசித்ரா)

தனிமைப்படுத்தல் மற்றும் தொற்றுநோய் தடுப்பு கட்டளை சட்டத்தில் பொது சுகாதார பரிசோதகர்களுக்காக அதிகாரங்கள் தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த 11 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை நாளை காலை 7.30 மணியுடன் நிறைவுக்கு வரவுள்ளது.

இன்று செவ்வாய்கிழமை பிரதமருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைய தொழிற்சங்க நடவடிக்கையை நிறைவுக்கு கொண்டு வர தீர்மானித்தாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

1897 ஆம் இலக்க நோய் தொற்றாளர்களை தனிமைப்படுத்துவதற்கான மற்றும் தொற்று நோய் கட்டுப்படுத்தலுக்கான கட்டளை சட்டத்தில் பொது சுகாதார பரிசோதகர்களுக்கான அதிகாரங்கள் தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த 16 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை 11 நாட்கள் நாடளாவிய ரீதியில் பொது சுகாதார பரிசோதகர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்த காலப்பகுதிக்குள் சுகாதார அமைச்சர், அமைச்சின் செயலாளர் , சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. எனினும் அந்த பேச்சுவார்த்தைகளின் போது எமக்கான உரிய தீர்வு வழங்கப்படாமையால் தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டியேற்பட்டது.

இந்நிலையில் கடந்த 25 ஆம் திகதி சட்டமா அதிபர் இது தொடர்பில் தெளிவான பதிலொன்றை சுகாதார அமைச்சிற்கு வழங்கியிருந்தார். பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தில் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களுக்குக் காணப்படும் அதிகாரங்களைச் சுற்றுநிருபமாக வெளியிடுவது சட்டத்திற்கு முரணானதாகும் என்று சட்டமாதிபர் அமைச்சின் செயலாளருக்கு அறிவித்திருந்தார்.

இவ்வாறான நிலையில் இந்த பிரச்சினை தொடர்வதால் மக்களுக்கு ஏற்படும் பிரச்சினையைக் கருத்திற் கொண்டு பிரதமருடனான பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதன் போது சட்டமா அதிபர் திணைக்களத்தின் தெளிவுபடுத்தலுக்கு அமைய 1897 ஆம் இலக்க நோய் தொற்றாளர்களை தனிமைப்படுத்துவதற்கான மற்றும் தொற்று நோய் கட்டுப்படுத்தலுக்கான கட்டளை சட்டத்தின் 38 ஆவது உறுப்புரைக்கமைய பொது சுகாதார பரிசோதகர்களுக்கு பரிசோதகர்கள் என்ற ரீதியில் அதிகாரங்கள் காணப்படுவதாக கூறப்பட்டது. 

அதற்கமை பொது சுகாதார பரிசோதகர்களுக்கு வேண்டிய இடங்களுக்குச் செல்லுதல் , சட்ட மீறல் இடம்பெறும் போது அதில் தலையிடுதல் உள்ளிட்ட அதிகாரங்கள் காணப்படுவதாக சட்டமா அதிபர் திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட அதிகாரி தெளிவுபடுத்தினார்.

அதற்கமைய பரிசோதகர்களாக எமக்கு காணப்படும் அதிகாரங்களுக்கு ஏற்ப செயற்பட முடியும் என்பதால் தொற்று நோய் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளில் நாம் தொடர்ச்சியாக ஈடுபட தீர்மானித்துள்ளோம். இந்த கட்டளைச்சட்டத்தின் கீழ் ஏதேனுமொரு வழக்கு தொடரப்பட்டால் அது தொடர்பில் சுகாதார மருத்துவ அதிகாரிகளுக்கும் (எம்.ஓ.எச்.) மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டால் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் ஆலோசனைக்கமைய செயற்படுவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டது. கட்டளைச்சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தாமல் எமது கடமைகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க இணக்கம் காணப்பட்டது என்றார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவிக்கையில் பொது சுகாதார பரிசோதகர்களின் தொழிற்சங்க நடவடிக்கை குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தனிமைப்படுத்தல் கட்டளை சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது வழக்கு தொடரப்பட்டால் சுகாதார மருத்துவ அதிகாரிகள் இனக்கம் தெரிவிக்க வேண்டும் என்றும் அதில் இரு தரப்பிற்கும் முரண்பாடுகள் ஏற்படும் பட்சத்தில் எனது ஆலோசனையின் பேரில் செயற்படுவதற்கும் இனக்கப்பாடு எட்டப்பட்டது.

இந்த தனிமைப்படுத்தல் கட்டளை சட்டம் மிகப் பழமையானது என்பதால் அதில் திருத்தங்கள் அல்லது மாற்றங்களை ஏற்படுத்துவது தொடர்பிலும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59
news-image

மாஓயாவில் நீராட சென்ற 4 மாணவர்கள்...

2024-03-28 09:50:11