பெற்ற தாயே மகளை கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சி

Published By: Raam

08 Jul, 2016 | 04:26 PM
image

இந்தியாவின் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் கலையரசி  (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கள்ளகாதலனுக்கு தனது 13 வயது மகளை திருமணம் செய்து கொடுக்க முயற்சித்தமையால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கலையரசி சமையல் வேலை செய்து வருகிறார். கலையரசியின் கணவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 13 வயதில் மகளும், 10 வயதில் மகனும் உள்ளனர்.

இந்நிலையில் கலையரசிக்கும், புளியங்குடியை சேர்ந்த சமையல் ஆசிரியரொருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. கணவர் வீட்டில் இல்லாத நேரங்களில் கலையரசியின் வீட்டிற்கு சமையல் ஆசிரியர் வந்து செல்லது வழக்கமாகியது. அப்போது 8 ஆம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்த கலையரசியின் மகள் மீது அவரின் பார்வை விழுந்துள்ளது. அவளையும் அடைய வேண்டுமென சமையல் ஆசிரியர் திட்டமிட்டுள்ளார்.

அவர், கலையரசியிடம் ‘உனது மகளை எனக்கு திருமணம் செய்து கொடு, உன் கடன் முழுவதையும் நான் அடைத்து விடுகிறேன்’ என ஆசை காட்டியுள்ளார். இதனால் கலையரசியும் தனது மகளை சமையல் ஆசிரியருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்.

திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க வேண்டும் என்பதற்காக கலையரசி தனது மகளை அழைத்துக் கொண்டு  சமையல் ஆசிரியருடன் மதுரைக்கு சென்றுள்ளார். அங்கு ஒரு விடுதியில் மூன்று பேரும் தங்கி  உள்ளனர். அப்போது கலையரசின் சம்மதத்துடன் அவளின் மகளிடம் சமையல் ஆசிரியர் உறவுக்கொள்ள முயன்றுள்ளார். இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் சத்தம் போட்டுள்ளதோடு, மீண்டும் இது போல் நடக்க முயன்றால் கூச்சல் போட்டுவிடுவேன் என அவர் கூறியதால் சமையல் ஆசிரியர் அங்கிருந்து வெளியில் சென்றார்.

பின்னர் மூன்று பேரும் ஊருக்கு திரும்பி உள்ளனர். அப்போது, விரைவில் உனது மகளை எனக்கு திருமணம் செய்து கொடு என சமையல் ஆசிரியர் கூறியுள்ளார். இதையடுத்து திருமண ஏற்பாடுகளை செய்வதாக கலையரசி அவரிடம் உறுதி அளித்துள்ளார். அவர்கள் இருவரும் பேசியதை அந்த சிறுமி கேட்டுக் கொண்டிருந்தார்.

பெற்ற தாயே தன்னை கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிடுவதை கண்ட சிறுமி அவர்களிடம் இருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என முடிவு செய்து, மதுரையில் இருந்து வீட்டிற்கு வந்ததும் தனது தம்பியை அழைத்துக் கொண்டு சுரண்டையில் உள்ள தனது பாடசாலை ஆசிரியை வீட்டிற்கு சென்றார். அங்கு ஆசிரியையிடம் நடந்தவற்றை சொல்லி அந்த சிறுமி அழுதாள்.

அந்த ஆசிரியை அவசர பொலிஸ் சேவைக்கு தொலைபேசி அழைப்பின் ஊடாக முறைப்பாடு புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து கடையநல்லூர் பொலிஸ் அதிகாரி பத்மநாபபிள்ளை மற்றும் பொலிஸார் சிறுமியையும், அவரது தம்பியையும் கடையநல்லூர் பொலிஸ் நிலையம் அழைத்து வந்தனர். 

பின்னர் அவர்களை நெல்லை குழந்தைகள் நலக்குழு தலைவர் நளனிடம் பொலிஸார் ஒப்படைத்தனர்.

தற்போது நெல்லை சிறுவர்கள் காப்பகத்தில் உள்ள சிறுமியையும் அவரது தம்பியையும் இன்று குழந்தைகள் நல சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்க குழந்தைகள் நலக்குழு முடிவு செய்துள்ளது. 

பெற்ற தாயே தனது மகளை கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்து வைக்க முயன்ற சம்பவம் கடையநல்லூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08
news-image

பரப்புரைக்காக தமிழ்நாடு சென்ற ராகுல் காந்தி...

2024-04-15 13:08:34