குசல் மெண்டிஸுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!

Published By: Jayanthy

28 Jul, 2020 | 07:58 PM
image

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குசல் மெண்டிஸுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க இலங்கை கிரிக்கெட் சபை (எஸ்.எல்.சி)  தீர்மானித்துள்ளது. 

சில நாட்களுக்கு முன்னர் பாணந்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய காலி வீதி - ஹொரேதுட்டுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில், பாணந்துறை வடக்கு பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய நபரொருவர்  உயிரிழந்துள்ளதுடன் , விபத்து தொடர்பில் காரின் சாரதியான கிரிக்கட் வீரர் குசல் மெண்டிஸ் கைது செய்யப்பட்டிருந்தார். 

பின்னர் அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன் அவர் மீதான வழக்கு விசாரணையில் உள்ளது.

இந்நிலையிலேயே, குறித்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குசல் மெண்டிஸ் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. 

இலங்கை கிரிக்கெட் சபையின் ஒப்பந்தத்தில் உள்ள வீரர்களுக்கு எதிராக ஒழுங்கு விசாரணைகளை மேற்கொள்ள இலங்கை கிரிக்கெட் சபைக்கு அதிகாரம் உள்ள நிலையில், இது போன்ற சம்பவங்களை தடுக்கும் நடவடிக்கையாகவே இவ் ஒழுக்காற்று விசாரணை முன்மொழியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை, இறந்தவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு மில்லியன்  ரூபா இழப்பீடாக, வழங்கப்பட்டதுடன் அவர்களுக்கு நிரந்தர வீடு இல்லாததால் குடும்பத்திற்கு ஒரு நிலம் ஒன்றினை வழங்கவும் குசல் மெண்டிஸ் முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22
news-image

ஐ.பி.எல் 2024 : பஞ்சாப் கிங்ஸை...

2024-03-26 00:02:20