'ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதமர் பாதுகாப்பார்': அந்நம்பிக்கையில் தான் கூட்டணி அமைத்தோம் - மைத்திரிபால

Published By: J.G.Stephan

28 Jul, 2020 | 05:15 PM
image

(ஆர்.யசி)
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையில் எந்தவித முரண்பாடுகளும் இல்லை. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பாதுகாப்பார் என்ற நம்பிக்கையில் தான் கூட்டணி அமைத்தோம் என கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன கூறுகின்றார். கட்சியின் உறுப்பினர்களை விமர்சிக்கும் பொதுஜன முன்னணியினர் அவர்களின் தேர்தல் பிரசாரத்திற்காக தம்மை கேலி செய்வதாகவும் அவர் கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்காரர்கள் மீதான தொடர்ச்சியான அவதூறு கருத்துக்களையும், கேலிகளையும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்கள் முன்வைத்து வருகின்ற நிலையில் கட்சியின் தலைவர் என்ற வகையில் இந்த நிலைப்பாடுகள் குறித்து அவரது கருத்துக்களை வினவிய போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

தற்போது தேர்தல் காலம் என்ற காரணத்தினால் இவ்வாறான விமர்சனங்கள், கருத்துக்கள் முன்வைக்கப்படுவது பெரிய விடயமல்ல. நல்லாட்சிக் காலத்தில் ஜனாதிபதியெனக்கூட கருதாது என்னை விமர்சித்தனர். கட்சியை விமர்சித்தனர். ஆனால் நாம் ஆட்சியை கொண்டு சென்றோம். அதேபோல் இப்போது அரசியலுக்காக இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றது. அதனை நாம் கருத்தில் கொள்ளவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மனதளவிலும் பலமான கட்சியாக உள்ளது. மீண்டும் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ளவே நாம் முயற்சித்து வருகின்றோம்.

அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி,ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு ஆதரவை வழங்கியதன் மூலமாக ஒரு கணிசமான வாக்குகள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் வெற்றியை உறுதிசெய்தது என்பதை அவர்கள் மறந்துவிடக்கூடாது. அதன் விளைவாகவே பொதுத் தேர்தலின் போதும் நாம் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்து கட்சியை பலப்படுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம். மேலும் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பாதுகாப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அந்த வாக்குறுதியை அவர் எமக்கு வழங்கியுள்ளார். அந்த நம்பிக்கையில் தான் கூட்டணியையும் அமைத்தோம்.

கேள்வி:- அப்படியென்றால் தேர்தலின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை மஹிந்த ராஜபக் ஷவிடம் ஒப்படைப்பீர்களா?

பதில்:- அது குறித்து இப்போது என்னால் எதுவும் கூட முடியாது. கட்சியின் மத்தியகுழு அது குறித்து தீர்மானம் எடுக்கும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21