வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களே அதிகமாக பாதிப்பு ! பொலிஸார் வெளிப்படுத்தியுள்ள பாரிய மோசடி

28 Jul, 2020 | 05:29 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

இணையம் ஊடாக போலி கடன் திட்டம் ஒன்றினை பிரச்சாரப்படுத்தி,  வெளிநாட்டில் வேலை செய்வோருக்கு  சலுகை வட்டி வீதத்தில் கடன் வழங்குவதாக கூறி,  அவர்களின் உள்நாட்டு வங்கிக் கணக்கு விபரங்களைப் பெற்று முன்னெடுக்கப்பட்டு வந்த பாரிய மோசடி நடவடிக்கையை கிருலப்பனை பொலிஸார் வெளிப்படுத்திக்கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் ஐந்து பேரைக் கைது செய்துள்ள பொலிஸார், அவர்கள் முன்னெடுத்து வந்த போலி சாரதி அனுமதிப் பத்திரம் உள்ளிட்ட அரச ஆவணங்களை அச்சிடும் நடவடிக்கைகள் தொடர்பிலும் தகவல்களை வெளிப்படுத்திக்கொண்டுள்ளனர்.

அவ்வறு பொலிஸாரால் மீட்கப்பட்ட போலி சாரதி அனுமதிப் பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணத் தகவல்களில் உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் பலரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த மோசடி கும்பலுக்கு பயங்கரவாத நடவடிக்கைகளுடன் உள்ள தொடர்பு தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட பிட்டபத்தர, நாரஹேன்பிட்டி மற்றும், வெல்லம்பிட்டி பகுதிகளைச் சேர்ந்த 5 சந்தேக நபர்களையும், மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் அலோசனையின் பேரில் கிருலப்பனை பொலிஸ் நிலையத்தில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற விஷேட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை  வெளிப்படுத்தினார். இந்த செய்தியாளர் சந்த்திப்பில் இந்த விடயம் தொடர்பில்  பாதிக்கப்பட்டவர்கள் அனேகர் தமிழ் பேசும் மக்கள் என்பதால், விஷேடமாக பொலிஸ் ஊடகப் பிரிவு மற்றும் பொது மக்கள் உறவு, தொடர்பாடல் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் லால் செனவிரத்ன தமிழில் விடயங்களை தெளிவுபடுத்தினார்.

பிரதிப் பொலிஸ் மா அதிபர் லால் செனவிரத்ன, பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன ஆகியோர் ஊடக சந்திப்பில் வெளிப்படுத்திய விடயங்கள் பிரகாரம் குறித்த விவகாரம் வருமாறு,

'கடந்த மே 25 ஆம் திகதி கிருலப்பனை பொலிஸ் நிலையத்துக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாடு ஒன்றுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  தனது வங்கிக்கணக்கிலிருந்து 5 இலட்சம் ரூபா பணம் மோசடியான முறையில் பெறப்பட்டுள்ளதாக  அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்டதைப் போல போலி அறிவித்தல் ஒன்றினை அந்த செயலக கடிதத் தலைப்பில் இணையத்தில் வெளியிட்டும், என்டபிரைஸிஸ் ஸ்ரீ லங்கா எனும்  திட்டத்தின் போலி ஆவணம் ஒன்றினை பயன்படுத்தியும் மோசடிக்கான அத்திவாரம் இடப்பட்டுள்ளது.

அந்த போலி ஆவணங்கள் ஊடாக  வெளிநாட்டில் வேலை செய்வோருக்கு அரசாங்கம் குறைந்த வட்டி வீதத்தில் ( 2 வீதம்) இரண்டு மில்லியன் வரை கடன் வழங்குவதாக பிரச்சாரம் செய்தே  மோசடிக்கான ஆரம்பத்தை இட்டுள்ளனர். அதன்படி வெளிநாட்டில் வேலை செய்யும் நபர்களின் இலங்கையில் உள்ள உறவினர்கள் ஊடாக இங்கு வங்கியொன்றில் புதிய கணக்கொன்று ஆரம்பிக்க ஆலோசனை  சந்தேக நபர்களால் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஆரம்பிக்கப்படும் கணக்கை இணையம் வாயிலாக கொடுக்கல் வாங்கல் செய்யத்தக்கதாக ஆரம்பிக்கவும்  ஆலோசனை கொடுக்கப்பட்டுள்ளது.

அப்படி ஆரம்பிக்கப்பட்ட வங்கிக்கணக்குகளின் இரகசிய இலக்கம் உள்ளிட்டவற்றை பெற்றுக்கொள்ளும் சந்தேக நபர்கள், கடன் தொகையில் 10 வீதத்தை குறித்த கணக்கிலேயே வைக்குமாறு கூறி ஏனைய தொகையையே கடன் பெறுநருக்கு பெற அனுமதித்துள்ளார்.

பின்னர் தன்னிடம் உள்ள இரகசிய இலக்கங்களை பயன்படுத்தி அந்த 10 வீத பணத்தை  இணையம் வாயிலாக தமது வேறு ஒரு கணக்குக்கு மார்றிக்கொள்ளும் சந்தேக நபர்கள், அங்கிருந்து அதனை தனியார் வங்கிகள் 4 இல் உள்ள வேறு கணக்குகளுக்கு மாறிறியுள்ளனர்.  2019 ஆம் ஆண்டு முதல் இந்நடவடிக்கைகளை சந்தேக நபர்கள் முன்னெடுத்து வந்துள்ளதுடன், விசாரணைகளில் இதுவரை வெலிப்படுத்தப்பட்ட தகவல்கலுக்கு அமைய பிட்டபத்தர பகுதியைச் சேர்ந்த மூவர், நாரஹேன்பிட்டி, வெல்லம்பிட்டி பகுதிகளைச் சேர்ந்த தலா ஒவ்வொருவரை கைது செய்துள்ளனர். அவர்கள் 30,39,38,46 வயதுகள் உடையவர்களாவர்.

சந்தேக நபர்களிடம் முன்னெடுத்த விசாரணைகளில், அவர்கள் முன்னெடுத்த போலி ஆவண தயாரிப்பு, போலி சாரதி அனுமதிப் பத்திர தயாரிப்பு தொடர்பிலான மோசடி நடவடிக்கைகளும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி சந்தேக நபர்களிடமிருந்து போலி சாரதி அனுமதிப் பத்திர தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் அச்சு இயந்திரம்,  கணினி,  லெமினேடிங் இயந்திரம்,  போலியாக தயாரிக்கப்பபட்ட சாரதி அனுமதிப் பத்திரங்கள் 61,  சாரதி அனுமதிப் பத்திரம் தயாரிக்கப்பயன்படும் அட்டைகள் 925, போலி சர்வதேச சாரதி அனுமதிப் பத்திரம் 5, 2 போலி இறப்பர் முத்திரைகள்,  14 வங்கி அட்டைகள்,  நிலையான, கையடக்கத் தொலைபேசிகள் 15, சிம் அட்டைகள் 40, 20 வங்கி பணவைப்பு பற்றுச் சீட்டுக்கள், சாரதி அனுமதி பத்திர தயயாரிப்புக்கு பயன்படும் சிம் அட்டைகள்,  கார், வேன் என்பன மீட்கப்பட்டுள்ளன.

போலி சாரதி அனுமதிப் பத்திரம் தொடர்பில் மேலதிக விசாரணை செய்தபோது பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய 6 சந்தேக நபர்களின் பெயர்கள் அதில் உள்ளடங்கியுள்ளமை தெரியவந்ததால், இவர்களுக்கும் பயங்கரவாத நடவடிக்கைகளை முன்னெடுத்த கும்பலுக்கும் இடையில் ஏதேனும் தொடர்புகள் இருந்தனவா என சந்தேகம் எழுந்துள்ளது.  இதனையடுத்து சந்தேக நபர்களை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த போலி கடன் திட்டத்தில் ஏமாற்றப்பட்ட அதிகமானோர் தமிழ் பேசும் வடக்கு கிழக்கை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. அதனால் இவ்வாறான போலி  பிரச்சாரங்கள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு பொது மக்களை வேண்டிக் கொள்கின்றோம்.' என ஊடக சந்திப்பு ஊடாக பொலிஸார்  பொது மக்களிடம் கோருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24