( லியோ நிரோஷ தர்ஷன் )

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டுமென கூட்டு எதிர்க் கட்சி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதமெழுதியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

ஜனாதிபதியின் கருத்தை சர்வதேசத்தில் சவாலுக்குட்படுத்தும் வகையில் செயற்பட்டமையானது மங்கள சமரவீர வெளிவிவகார அமைச்சுப்பதவிக்கு தகுதியற்றவர் என்பதை வெளிப்படுத்துகின்றது.

எனவே அவருக்கு எதிராக ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டுமென கூட்டு எதிர்க்கட்சி ஜனாதிபதிக்கு கடிதமெழுதியுள்ளது.

பாராளுமன்ற கட்டடத்  தொகுதியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத்  தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.