தேர்தலில் ராஜபக்ஷக்கள் வெற்றிபெற்றால் மீண்டும் அடக்குமுறை ஆட்சியே இடம்பெறும் - சரத் பொன்சேகா

Published By: Digital Desk 3

27 Jul, 2020 | 05:03 PM
image

(ஆர்.யசி)

மத்திய வங்கி ஊழல் வாதிகளை சிறையில் அடைப்பதாக கூறிய ராஜபக்ஷவினர் இன்று அவர்களுடன் தேசிய அரசாங்கத்தை அமைக்க முயற்சித்து வருகின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்தார். இம்முறை தேர்தலில் ராஜபக்ஷக்கள் வெற்றிபெற்றால் மீண்டும் அடக்குமுறை ஆட்சியே இடம்பெறும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரகூட்டம் இன்று வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றது. இதன் போதே அவர் இவற்றை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரத்தை பெற்றுக்கொண்டு அதன் மூலமாக அரசியல் அமைப்பினை மாற்றியமைத்து ராஜபக்ஷவினரின் அதிகாரத்தை பலப்படுத்திக்கொள்ளவே முயற்சிக்கின்றனர். நாம் செய்ததெல்லாம் தவறென கூறிக்கொண்டு நாட்டினை இராணுவ ஆட்சியின் கீழ் கொண்டுசெல்ல நினைப்பது சரியானதா என மக்கள் சிந்திக்க வேண்டும். நாம் ஆட்சிக்கு வந்து நூறு நாட்கள் ஆட்சியில் இருந்து அரசாங்கத்தை ராஜபக்ஷக்களுக்கு கொடுக்கும் வரையில் பல நல்ல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். சுயாதீன ஆணைக்குழுக்களை அமைத்தது அதில் முக்கியமான ஒன்றாகும்.

இம்முறை தேர்தலில் பொதுஜன முன்னணி வெற்றிபெற்றால் அதன் பின்னர் பாராளுமன்ற ஜனநாயகம் இல்லாது வெறுமனே ஜனாதிபதியின் அதிகாரத்தை மாத்திரம் முன்னிறுத்தி ஆட்சியை நடத்த நினைப்பர். அனைத்தையும் ஜனாதிபதியின் அதிகாரங்களின் கீழ் கொண்டு நடத்தலாம் என கோத்தாபய ராஜபக்ஷ நினைக்கின்றார். அதற்காகவே அவர்களுக்கென்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை அரசாங்கத்தை அமைக்க நினைக்கின்றார். ஆனால் அவர்களுக்கு 105 ஆசனங்களுக்கு அதிகமாக பெற்றுக்கொள்ள முடியாது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிற்கு அரசியல் தெரியாது. அவரால் அரசியல் தீர்மானம் எடுக்க முடியாது. எடுக்கவும் தெரியாது. யுத்தத்தை நடத்தவும் அவருக்கு தெரியாது. அவர் அமெரிக்க பிரஜையாக மட்டுமே இருந்தார். அவரை நம்பி 69 இலட்சம் மக்கள் எவ்வாறு ஆதரித்தனர் என்பதில் எனக்கு இன்னமும் சந்தேகம் உள்ளது. ஒரு தலைவரை தெரிவு செய்வதில் எமது மக்கள் சிந்திக்காது தீர்மானம் எடுத்ததை நினைத்து ஆச்சரியப்படுகின்றேன். ஜனாதிபதியானவுடன் கோத்தாபய ராஜபக்ஷ தவறான பாதையில் பயணிக்க ஆரம்பித்துவிட்டார் என்பதை மட்டுமே நான் தொடர்ந்தும் எச்சரித்து வருகின்றேன்.

மத்திய வங்கி ஊழல் வாதிகளை சிறையில் அடைப்பதாக கூறிய ராஜபக்ஷவினர் இன்று அவர்களுடன் தேசிய அரசாங்கத்தை அமைக்க முயற்சித்து வருகின்றனர். ரணில், ரவி இருவரின் ஆதரவுடன் ஆட்சியை அமைக்க பாரிய முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றது. அதேபோல் தேர்தல் முடிந்தவுடன் சம்பிக்கவும், ராஜிதவும் சிறைக்கு செல்லவேண்டி வரும். அவர்களை பழிவாங்க ராஜபக்ஷவினர் பார்த்துக்கொண்டுள்ளனர். எம்முடன் தமிழர் எவரும் இணைந்து செயற்பட்டால் அவர்கள் புலிகள் என முத்திரை குத்தப்படுவர். ஆனால் உண்மையில் புலிகளுடன் அரசியல் உறவை வைத்திருப்பது ராஜபக்ஷக்கள் தான். இந்த உண்மைகளை மக்கள் சிந்தித்து பார்க்காது அவர்களை ஆதரிப்பது அர்த்தமற்றது. இம்முறை தேர்தலில் ராஜபக்ஷக்கள் வெற்றிபெற்றால் மீண்டும் அடக்குமுறை ஆட்சியே இடம்பெறும். அதனை அனைவரும் நினைவில் வைத்துக்கொண்டு இந்த இறுதி தேர்தல் வாரத்தை கையாள வேண்டும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40