பிரபாகரனின் கோரிக்கைகளை ஒருபோதும் ஏற்கப்போவதில்லை: பிரதமர் மஹிந்த

Published By: J.G.Stephan

27 Jul, 2020 | 04:42 PM
image

(எம்.மனோசித்ரா)

போரின் மூலம் வெற்றிக்கொள்ள நினைத்த கோரிக்களை தற்போது ஜனநாயக போர்வையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அடைய முயற்சிக்கின்றது. எந்தவொரு சந்தர்பத்திலும் பிரபாகரனின் கோரிக்கைகளை அனுமதிக்கவோ பெற்றுக் கொடுக்கவோ இடமளிக்க போவதில்லை என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

போர்காலத்தைப் போன்று பேரழிவானதொரு சூழல் மீண்டும் ஏற்படுவதற்கு தமது அரசாங்கத்தில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வாய்ப்பளிக்கப்பட மாட்டாது. மக்கள் இம்முறை பொதுத் தேர்தலில் தெளிவான முடிவொன்றினை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.

குருணாகல் - தம்பதெனிய பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்த பிரதமர் மேலும் கூறுகையில் ,

நாட்டிலுள்ள இளைஞர் யுவதிகள் டயரால் அடித்து கொல்லப்படும் யுகம் மீண்டும் தோற்றம் பெறாமல் இருப்பதற்கு இம்முறை பொதுத் தேர்தலில் தெளிவான முடிவொன்றை எடுக்க வேண்டும்.

யுத்தத்தின் போது காணப்பட்ட பேரழிவு மிக்க யுகத்தில்  சுமார்  60 000 கல்வி கற்ற ஆற்றல் உடைய இளைஞர்களை நாடு இழந்தது. பட்டதாரிகள் பெருமளவானோர் இந்த பேரழிவான சூழலில் கொல்லப்பட்டதோடு அவர்களில் 4,210 பேர் குருணாகல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர்.

அன்று நாட்டில் காணப்பட்ட நிலைமை தொடர்பில் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் முறைப்பாடளிப்பதற்கும் சாட்சியளிப்பதற்கும் என்னுடன் மேலும் பலர் முன்வந்தனர். எமது அரசாங்கத்தின் கீழ் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இவ்வாறானதொரு நிலைமை ஏற்படுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

விடுதலைப் புலிகள் அமைப்பு வடக்கை கிழக்கையும் வேறுபடுத்தி தனியொரு இராச்சியத்தை கட்டியெழுப்புவதற்காக முயற்சித்தது. எனினும் எமது அரசாங்கத்தால் புலிகளின் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது.

அன்று யுத்தத்தின் மூலம் பெற நினைத்தும் ஆனால் பெற முடியாமல் போன வியடத்தை ஜனநாயகம் என்ற போர்வையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போது பெற்றுக் கொள்ள முயற்சிக்கிறது. ஆனால் பிரபாகரனுடைய கோரிக்கைகளை ஒரு போதும் நாம் பெற்றுக் கொடுக்கப் போவதில்லை.

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு புதிய கல்வியைப் பெற்றுக் கொடுப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதோடு தொழிற் பயிற்சிகளையும் தொழிநுட்ப கல்வியையும் மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதன்முறையாக தேர்தலில் வாக்களித்ததால் இலங்கை தமிழ்...

2024-04-20 11:53:28
news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09