பாதாள உலகக் குழுவினர்கள் வேட்பாளாருக்கு நிதியுதவி செய்கின்றமையால் அரசியல்வாதிகள் அவர்களுக்கு துணைப்போக காரணம் - விஜேதாச ராஜபாக்ஷ

Published By: Digital Desk 3

27 Jul, 2020 | 05:27 PM
image

(எம்.மனோசித்ரா)

போதைப் பொருள் பாவனை அல்லது விற்பனையாளர்களும் பாதாள உலகக் குழுவினரும் தேர்தல் காலங்களில் வேட்பாளர்களுக்கு நிதியுதவி செய்கின்றமையினாலேயே அரசியல்வாதிகள் அவர்களை பாதுகாக்க முற்படுகின்றனர் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபாக்ஷ தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

நாட்டில் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய பொலிஸாரின் ஒத்துழைப்புடன் போதைப்பொருளுடன் தொடர்புடைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய துறைகளில் காணப்பட்ட ஊழல் மோசடிகள் மற்றும் குறைபாடுகள் என்பவையே இவற்றுக்கு பிரதான காரணமாகும்.

குறிப்பிட்டதொரு பிரதேசத்தில் பாதாள உலக செயற்பாடுகள் 3 - 6 மாதங்களுக்கும் அதிகமாகக் காணப்படுமாயின் அதில் பொலிஸார் அல்லது அரசியல் தலைவர்களது ஒத்துழைப்பு நிச்சயம் காணப்படும். பொலிஸாரதும் அரசியல்வாதிகளதும் பாதுகாப்பு காணப்பட்டமையின் காரணமாகவே பாதள உலக செயற்பாடுகளை ஒழிக்க முடியாமலுள்ளது. தேர்தலின் போது பாதாள உலகக் குழுவினரும் போதைப் பொருள் பாவனையாளர்களும் அரசியல்வாதிகளுக்கு பண உதவி செய்வதால் தான் இவ்வாறு நடைபெறுகிறது.

நாட்டில் தற்போது பின்பற்றப்படும் கல்வி கொள்கையில் பல குறைபாடுகள் உள்ளன.  இதனை புதிய அரசாங்கத்தில் மாற்றியமைக்க வேண்டும். ஆதே போன்று முறையான வியாபார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தேவையான சட்ட கொள்ளைகள் உருவாக்கப்பட வேண்டியது புதிய அரசாங்கத்தின் பிரதான பணியாகும். இதே போன்று வரி கொள்கைகளிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இவற்றை மாற்றியமைப்பதற்காகவே மக்களிடம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கோருகின்றோம். கடந்த அரசாங்கம் ராஜபக்ஷக்களின் பிரஜாவுரிமையை நீக்குவதற்கு முயற்சித்தது. அப்போது நான் அதற்கு  எதிர்ப்பு தெரிவித்தேன். அது ராஜபக்ஷக்களை பாதுகாப்பதற்காக அல்ல. அரசியலமைப்பின் படி அவ்வாறானதொரு அதிகாரம் பாராளுமன்றத்திற்கு வழங்கப்படவில்லை.

இது தொடர்பில் சட்டமா அதிபரின் நிலைப்பாடு கோரப்பட்டது. அவர் நான் கூறிய விடயங்களையே தெளிவுபடுத்தினார். இதனை இலக்காகக் கொண்டு தான் 2015 இல் ஜெனீவா பிரேரணைக்கு அரசாங்கம் அனுசரணை வழங்க தீர்மானித்தது. உலகில் எந்தவொரு நாட்டு பிரஜையும் தமது நாட்டுக்கு எதிரான பிரேரணை சமர்ப்பிக்கப்படும் போது அதற்கு ஆதரவளிக்கமாட்டார்கள் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08