“ஒரே கட்சிக்குள் இரட்டை நிலைப்பாடு: சமூகத்தைப் பந்தாட நினைக்கும் அலி சப்ரி” – அஷாத் சாலி

Published By: J.G.Stephan

27 Jul, 2020 | 03:16 PM
image

உண்மையான, ரோஷமுள்ள எந்த முஸ்லிமும் மொட்டுக் கட்சியில் இருக்கமாட்டார்கள் எனவும், அந்தக் கட்சிக்கு ஆதரவளிக்கமாட்டார்கள் எனவும், அதற்கு வாக்களிக்கமாட்டார்கள் என்றும் மேல் மாகாண முன்னாள் ஆளுநரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அஷாத் சாலி தெரிவித்துள்ளார்.


கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

“மொட்டுக் கட்சிக்காக வாக்குத் தேடி அலையும், அந்தக் கட்சியின் முக்கியஸ்தர்களான சட்டத்தரணி அலி சப்ரி, வடமேல் மாகாண ஆளுநர் முஸம்மிலின் மனைவி பெரோஸா முஸம்மில், பேருவளை மர்ஜான் பளீல் ஆகியோர், இத்தனை அநியாயங்கள் நடந்த பின்னரும், முஸ்லிம் சமூகத்திடம் வந்து வாக்குக் கேட்பது வெட்கக் கேடானது. ஜனாதிபதித் தேர்தலின் போது, “முஸ்லிம்கள், மொட்டுக் கட்சிக்கு வாக்களிக்காவிட்டால் அடிவிழும்” என, ஊர் ஊராக கூவித் திரிந்த அலி சப்ரி, பொதுத்தேர்தலில் இன்னுமொரு புதியவடிவில் தமது பிரச்சாரத்தைக் கொண்டு செல்கின்றார்.

ஜனாதிபதி கோத்தாவின் நிர்வாகத்தின் கீழ், இனிவரும் காலங்களில் பிறப்புச் சான்றிதழில் சாதி, மதம், இனம் என பதியப்படாது, இலங்கையர் என்று குறிப்பிட்டு, ‘எல்லோரும் இலங்கையரே’ என்ற கொள்கை கடைப்பிடிக்கப்படவுள்ளதாக, முஸ்லிம் பகுதிகளுக்குச் சென்று, மேடை மேடையாகக் கூறி வருகின்றார். கோத்தாவை ‘சிறுபான்மைச் சமூகத்தின் காவலர்’ எனப் புகழ்கின்றார்.

ஆனால், அலி சப்ரி, இவ்வாறான பரப்புரையை முன்னெடுத்த 24 மணித்தியாலத்துக்குள் பச்சமல்ல விமல் வீரவன்ச, அலிசப்ரி இவ்வாறு பேசி வருவது முட்டாள்தனமானது எனவும், எந்தக் காரணம்கொண்டும் அவ்வாறு செய்யமாட்டோம் எனவும் சிங்களப் பிரதேசங்களில் ஆணித்தரமாக எடுத்துரைக்கின்றார். ஜனாதிபதியோ, பிரதமரோ, செயலாளரோ ஒருபோதும் இதற்கு இடமளிக்கமாட்டார்கள் எனவும் அவர் கூறி வருகின்றார். ஒரே கட்சிக்காக வாக்குக் கேட்கும் இரண்டு சமூகத்தைச் சேர்ந்த இவர்களின் மாறுபட்ட நிலைப்பாடே, மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

“ஜனாஸா எரிப்பு” விடயத்திலும் அலி சப்ரி கையை விரித்துவிட்டார். தன்னால் முடிந்தளவு முயற்சித்ததாகவும் ஆனால், எதுவுமே நடக்கவில்லை என்றும் அவர் முன்னர் கூறியிருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44