எம்மை விமர்சிப்போர் அரசாங்கத்திற்கு உதவுகின்றனர் - ரணில்

27 Jul, 2020 | 02:29 PM
image

(நா.தனுஜா)

ஐக்கிய மக்கள் சக்தி என்பது ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்தலைவர் உள்ளடங்கலாக குறித்தவொரு பிரிவினரால் உருவாக்கப்பட்டதும், தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டதுமான தனியானதொரு கட்சி என்று நீதிமன்றத் தீர்ப்பில் தெளிவாகக் கூறப்பட்டிருக்கும் போதிலும், சிலர் இன்னமும் தம்மை ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள். 

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் எவ்வித தொடர்புமில்லை என்பதுடன், இந்தத் தீர்ப்பை அவர்கள் எந்த நீதிமன்றத்திற்குச் சென்றாலும் மாற்றியமைக்க முடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கிறார்.

பிரசாரக்கூட்டமொன்றில் தன்னால் நிகழ்த்தப்பட்ட உரையின் ஒரு சிறுபகுதி காணொளியை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றி, செய்திருக்கும் பதிவிலேயே அவர் இவ்வாறு கூறியிருக்கிறார். 

அதில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது:

சிலர் அரசாங்கத்தை விமர்சிப்பதை விடுத்து ஐக்கிய தேசியக் கட்சியையும் விமர்சிக்கின்றார்கள். எம்மை விமர்சிப்பதென்பது அவர்கள் அரசாங்கத்திற்குச் செய்கின்ற உதவியாகவே அமையும். 

அதேபோன்று மேலும் சிலர் தாம் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் என்றும், இந்தக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பொதுத்தேர்தலில் போட்டியிடத் தமக்கு அனுமதி கிடைத்திருப்பதாகவும் கூறுகின்றனர். 

இவ்வாறு கூறுகின்றவர்கள் எமக்கெதிராக நீதிமன்றத்திற்கும் சென்றார்கள். எனினும் அனைத்து நீதிமன்றங்களும் அவர்களுக்கு ஒரே தீர்ப்பையே வழங்கியது.

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுவினால் அங்கீகாரம் அளிக்கப்பட்டு, அதன் ஒரு கூட்டிணைவாக ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கப்படவில்லை என்பது தெளிவாகின்றது. 

ஐக்கிய மக்கள் சக்தி என்பது ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்தலைவர் உள்ளடங்கலாக குறித்தவொரு பிரிவினரால் உருவாக்கப்பட்ட, தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட தனியானதொரு கட்சியாகும். 

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து களமிறங்கியிருக்கும் வேட்பாளர்களுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டிருப்பது, அது தனியொரு அரசியல் கட்சி என்பதை மேலும் தெளிவுபடுத்துகின்றது என்று நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

எனவே, ஐக்கிய மக்கள் சக்தி என்பது மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஞானசாரதேரரின் கட்சி போன்று தனியொரு கட்சியாகும். இதற்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எவ்வித தொடர்புமில்லை. 

அதுமாத்திரமன்றி வழக்குத்தொடுனர்களால் இவ்விடயத்துடன் தொடர்புடைய உண்மைத்தகவல்கள் சில நீதிமன்றத்தில் வெளியிடப்படவில்லை என்பதுடன், அவை திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளமை தெளிவாகின்றது என்றும், நீதிமன்றத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளமையானது, ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்தவர்கள் முற்றிலும் பொய்யுரைக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறது என அவர் மேலும் கூறியிருக்கிறார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59