தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு வெளியிடப்பட்டுள்ள வழிக்காட்டி

Published By: J.G.Stephan

27 Jul, 2020 | 12:38 PM
image

(நா.தனுஜா)

பொதுத்தேர்தலின் போது வாக்களிப்பு நிலைய அதிகாரி மற்றும் வாக்குகளை எண்ணும் அதிகாரிகள் செயற்பட வேண்டிய விதம் மற்றும் தேர்தலின் போது செயற்படக்கூடாத முறைகள் என்பவற்றை உள்ளடக்கி தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்காக நிலையத்தினால் 15 பக்க அறிக்கையொன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

ஆகஸ்ட் 5 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் வெளியிடப்பட்டுள்ள அவ்வறிக்கையில் 'ஜனநாயக சமுதாயமொன்றின் அடிப்படை நியாயமான தேர்தலாகும்' என்ற தலைப்பில் இடம்பெற்றிருக்கும் அறிமுகத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்த நாட்டின் ஏற்றுக்கொள்ளப்பட்ட தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களில் ஒன்றாக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் உள்ள அதேவேளை, கடந்த 1997 ஆம் ஆண்டிலிருந்து தேர்தல் கண்காணிப்புப் பணிகளை ஆரம்பித்ததோடு தேர்தல் முறைமை மறுசீரமைப்பு முயற்சிகளிலும் பங்களிப்பை வழங்கி வந்திருக்கிறது. இலங்கையில் மக்கள் தமது வாக்குரிமையைப் பயன்படுத்தத் தொடங்கிய காலம் முதலாகத் தமது பிரதிநிதிகளை தாமே தெரிவுசெய்து வந்திருக்கிறார்கள்.

தமது வாக்குரிமையை சரியாகப் பயன்படுத்துவதுடன், அந்தந்தத் தேர்தல்களுக்கென நிர்ணயிக்கப்பட்டிருக்கும் முறைமைகளைப் பின்பற்றித் தமது பிரதிநிதியைத் தெரிவுசெய்வது வரையில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து வாக்காளர் உரிய விளக்கங்களைப் பெற்றிருப்பது அவசியமாகும். இலங்கையைப் பொறுத்தவரையில் மக்கள் மத்தியில் இதுபற்றிய தெளிவு போதியளவில் காணப்படுவதாகக் கூறமுடிந்தாலும் கூட, முக்கிய தேர்தல் சட்டங்கள் பற்றிய விளக்கம் இல்லாமலிருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

இந்தச் சவாலை வெற்றிகொள்வதற்கான ஒரே வழி இவைபற்றிய விளக்கங்களை இலகுவான மொழிநடையில் பிரசுரித்து மக்கள் மத்தியில் விநியோகிப்பதொன்றேயாகும். அந்தவகையில் வாக்களிப்பு நிலைய அதிகாரிகளின் அதிகாரங்கள் மற்றும் கடமைகள் குறித்தும் மேற்படி நோக்கத்திலேயே இவ்வாறானதொரு கையேட்டை வெளியிடுகின்றோம். என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அவ்வறிக்கையில் வாக்களிப்பு நிலைய அதிகாரி என்பவர் யார்?, அவரது நியமனம், வாக்களிப்பு நிலைய அதிகாரியின் அதிகாரங்கள் மற்றும் பொறுப்புக்கள், வாக்களிப்பு இடம்பெற்ற பின்னர் வாக்களிப்பு நிலைய அதிகாரியின் கடமைகள், அவர் செய்யக்கூடாத விடயங்கள், அவற்றுக்கான தண்டனை ஆகிய பல்வேறு விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31