தமிழர்களுக்கான உரிமைகளை கொடுக்காமல் இழுத்தடிப்பது இனியும் சாத்தியமற்றது -  சம்பந்தன்

26 Jul, 2020 | 07:32 PM
image

(ஆர்.யசி)

தமிழ் மக்களின் அரசியல் தீர்வினை பெற்றுக்கொள்ளும் மிக நீண்டகால போராட்டத்தின் விளைவாக இன்று தமிழ் மக்களுக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ளும் முக்கியமான கட்டத்தில் உள்ளோம். 

எனவே அதற்கான அழுத்தங்களை கொடுக்கும் பலமான தமிழர் அணியொன்று பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும் எனவும் இனிமேலும் தமிழ் மக்களுக்கு உரிமைகளை கொடுக்காமல் இழுத்தடிப்பது சாத்தியமற்றது எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் செயற்பாடுகள், இம்முறை பாராளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்களிப்பு குறித்து கருத்துக்களை முன்வைக்கும் போதே அவர் இதனைக் கூறினார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து எமது உரிமைக்கான போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. போராட்டங்கள், சர்ச்சைகள், ஒத்துழைப்புகள், ஒப்பந்தங்கள் என கடினமான பயணம் ஒன்றினை நாம் முன்னெடுத்துள்ளோம். 

ஆனால் துரதிஷ்டவசமாக தீர்வினை பெற்றுக்கொள்ள முடியாது உள்ளது. சிங்கள பெரும்பான்மை இனம் தமது ஆதிக்கத்தை தமிழ் மக்கள் கூடுதலாக வாழும் பிரதேசங்களில் கூட குறைத்துக்கொள்ள விரும்பவில்லை.

 அதன் காரணமாகவே போராட்டங்கள் தொடர்ந்தது. எனினும் 1983 ஆம் ஆண்டின் பின்னர் இந்திய பிரதமர் இந்திரா காந்தி இந்த விடயங்களில் தலையிட்டு நல்லிணக்க முயற்சிகளை கையாண்டார். அதனை ஜனாதிபதி ஜெவர்தனவும் ஏற்றுக்கொண்டார். 

அதைத் தொடர்ந்து 1987 ஆம் ஆண்டி இந்திய - இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. 13 ஆம் திருத்தத்தின் ஊடாக அதிகாரங்களை பெற்றுக்கொண்டதுடன் வடக்கு கிழக்கு ஒரு அழகாக இணைக்கப்பட்டு சில கருமங்கள் முன்னெடுக்கப்பட்டது. அதன் பின்னர் பல்வேறு விடயங்களில் நாம் திருப்தியடையவில்லை. ஆனால் எமது முயற்சிகள் தொடர்ந்த வண்ணமே இருந்தது.

ஆயுத போராட்ட காலத்தில் இருந்து தீர்வுகளை பெற்றுக்கொள்ள எமது முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டது. இன்றும் தீர்வுகளை பெற்றுக்கொள்வதில் எமது முயற்சிகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது. 

அதிகார பகிர்வு விடயத்தில் முழுமையான, உறுதியான, நிலைத்து நிக்கக்கூடிய மாற்றியமைக்க முடியாத தீர்வாக உருவாக வேண்டும். கடந்த காலங்களில் பல ஜனாதிபதிகளின் கீழ் நாம் இதற்கான முயற்சிகளை எடுத்துள்ளோம்.

 அதன் விளைவாக தீர்வு கிடைக்கக் கூடிய இடத்தில் நாம் உள்ளோம். இந்த இடத்தை இலகுவாக நாம் அடையவில்லை. சர்வதேச அழுத்தங்கள், எமது அழுத்தங்கள், தமிழ் மக்களின் அழுத்தம் காரணமாக நாம் இன்று முழுமையான அதிகார பகிர்வு தீர்வை காணக்கூடிய நிலையில் உள்ளோம். 

புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் அதில் தமிழ் தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காணும் அதிகார பகிர்வு என்ற விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்த தீர்வு கிடைக்கக்கூடிய முக்கியமான கட்டத்தில் நாம் உள்ளோம் என்பதை உறுதியாக கூற முடியும்.

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இந்திய பிரதமர் தனது பிரதிநிதியை இலங்கைக்கு அனுப்பி வைத்திருந்தார். அதில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும், நீதி கௌரவத்தின் அடிப்படையில் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதை தெளிவாக கூறியுள்ளார். 

இலங்கை ஜனாதிபதி, பிரதமர் இருவருக்கும் இந்தியா அழுத்தமாக கூறியுள்ளது. ஆகவே தீர்வை பெற்றுக்கொள்ள பலமான தமிழர் அணியொன்று பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும். அதற்கு இந்த தேர்தலை எமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மாற்றுக் கட்சிகளுக்கு வாக்களித்து தமிழர் பிரதிநித்துவத்தை குறைக்காது தமிழ் தேசிய கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும். 

அதுமட்டும் அல்ல தமிழர்களுக்கு தீர்வு வழங்க வேண்டும் என்ற பலமான அழுத்தம் சர்வதேச தரப்பினாலும், ஐக்கிய நாடுகள் சபையுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தங்கள் மூலமாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விடயங்களில் இனிமேலும் தமிழ் மக்களுக்கு உரிமைகளை கொடுக்காமல் இழுத்தடிப்பது சாத்தியமற்றது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

2024-04-18 14:31:10
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09