கொழும்பு மாநகரசபை செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தினால் கொழும்பு மக்களின் தனித்துவத்துக்கு பாதிப்பு: ஆளுநருக்கு கடிதம்

Published By: J.G.Stephan

26 Jul, 2020 | 03:42 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

கொழும்பு மாநகரசபை, நகரசபை எல்லையில் உயர்தர வீதிவிலக்கு மற்றும் பாதுகாப்பு கமராக்களை பொருத்துவதற்கு தனியார் நிறுவனம் ஒன்றுடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தினால் மாநகர மக்களின் தனித்துவத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் மாநகரசபைக்கு பாரியளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மேல்மாகாண ஆளுநர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கொழும்பு மாநகரசபை எதிர்க்கட்சி உறுப்பினர் ஷர்மிலா கோணவல சுட்டிக்காட்டியுள்ளார்.

மேல்மாகாண ஆளுநர் எயார் மார்ஷ்ல் ராஷொன் குணதிலக்கவுக்கு அவர் அனுப்பிவைத்துள்ள கடிதத்திலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொழும்பு மாநகரசபை எல்லையில் உயர்தர (ஸ்மாட்) வீதிவிலக்கு மற்றும் பாதுகாப்பு கமராக்களை பொருத்துவதற்கு தனியார் நிறுவனம் ஒன்றுடன் கொழும்பு மாநகரசபை ஒப்பந்தம்  செய்துகொண்டுள்ளது. இதன் மூலம்  எதிர்வரும் 20 வருடத்துக்கு சர்வதேச ரீதியில் அறிமுகமாகும். தொழிநுட்ப தொடர்பாடல்கள் கொழும்பு மாநகர எல்லைக்குள் இந்த நிறுவனத்தின் ஊடாக மாத்திரமே மேற்கொள்ளப்பட வேண்டும்.  

குறித்த ஒப்பந்தம் காரணமாக கொழும்பு மாநகரசபைக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு மற்றும் நிதி அடைப்படையில் ஏற்படும் நட்டம் தொடர்பாக மாநகரசபையின் தொழிநுட்ப ஊக்குவிப்பு பிரிவு மற்றும் திறைசேரி அறிவுறுத்தியும் அதனை கருத்திற்கொள்ளாமல் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டிருக்கின்றது. 

திறைசேரியின் அறிக்கையின் பிரகாரம் தனியார் நிறுவனம் ஒன்றுடன் 20 வருடங்களுக்கு ஒப்பந்தம் ஒன்றுக்கு செல்வது. ஆகுமானதல்ல. இதனால் மாநகரசபைக்கு 3ஆயிரத்தி 760 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுகின்றது. அத்துடன் வீதி பெயர் பலகைகளை பொருத்துதல் மற்றும் பஸ் நிறுத்தும் இடங்களில் மேற்கொள்ளப்படும் பிரசார நடவடிக்கைகள் 2030வரை இந்த நிறுவனத்துடன் மேற்கொள்வதாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கின்றது. அதேபோன்று நகரசபைக்குள் இருக்கும் அனைத்து வீதிவிலக்கு தூண்களுக்கும் விலக்குகளை பொருத்தும் அதிகாரம் 2038 வரை இந்த நிறுவனத்துக்கே வழங்கப்பட்டிருக்கின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 10:50:13
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10