DFCC வங்கி “வர்தன வேர்ச்சுவல் வொலட்” என்ற தனது புதிய மொபைல் மென்பொருள் பிரயோகத்தின செய்முறை விளக்கக்காட்சியை சமீபத்தில் நடத்தியது. நிதிச் சேவைகளில் கூடுதலானோரைச் சேர்த்துக்கொள்வதற்கு DFCC மேற்கொள்ளும் முயற்சியின் மற்றுமொரு நடவடிக்கையாகவே புதிய மொபைல் பிரயோகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் வங்கித் துறையில் இத்தகைய வசதி ஆரம்பிக்கப்பட்டுள்ளமை இதுவே முதல் தடவையாகும். அறிமுக நிகழ்வில் DFCC வாடிக்கையாளர்கள், வர்த்தக நிறுவனப் பிரதிநிதிகள், ஊடகத் துறையினர் ஆகியோர் கலந்துகொண்டு,“வர்தன வேர்ச்சுவல் வொலட்” உபயோகத்தின் மூலம் கிடைக்கும் பல்வேறு வசதிகளையும் அனுகூலங்களையும் அறிந்துகொண்டார்கள்.

ஒரு நம்பிக்கையான பிரயோகம் : இந்த அதிநவீன மொபைல் பிரயோகத்தின் மூலம் பாவனையாளர்கள் இலகுவான ஷொப்பிங் அனுபவத்தைப் பெறவும் தமது நிதி அலுவல்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் முடியும். Synapsys நிறுவனம் வடிவமைத்துள்ள வர்தன வேர்ச்சுவல் வொலட் பிரயோகம் DFCC வங்கிக்கு முற்றிலும் சொந்தமானதும் அதனால் செயற்படுத்தப்படுவதும் ஆகும். இந்த அமைப்புக்கு SSL (Secure Sockets Layer) மூலம் முழுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. வர்தன வேர்ச்சுவல் வொலட் பிரயோகத்தின் ஊடான கொள்வனவுகள் கொடுக்கல் வாங்கல் PIN ஒன்றை உருவாக்குவதன் மூலம் மாத்திரமே சாத்தியமாகும். ஒரு குறிப்பிட்ட கால செயலற்ற நிலையின்பின் பிரயோகத்திலிருந்த தன்னியல்பாகவே விடுபதிகை செய்யப்படும். ஒரே நேரத்திலான புகுபதிகைகளுக்கு அனுமதியளிக்கப்பட மாட்டாது.

இலகுவானது மற்றும் வசதியானது: டிஜிட்டல் கொடுப்பனவு முறையில் புரட்சிகரமான இந்த வசதி, பணத்தை நிர்வகிக்கவும் வேறெந்தக் கொடுப்பனவுப் பத்திரங்களைக் கொண்டுசெல்ல வேண்டிய அவசியத்தை தவிர்க்கவும் உதவுவதால், இலகுவான மற்றும் வசதியான ஒரு கொடுப்பனவு வழியைப் பாவனையாளர்களுக்கு வழங்குகின்றது. பாவனையாளர்கள் தமது வேர்ச்சுவல் வொலட்டில் பணத்தை வைத்திருப்பதன் மூலம் அன்றாடக் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள முடியும். 

தனிப்பட்ட வொலட் வைத்திருப்பவர்களுக்கான சேவைகள்: பொருள்கள் மற்றும் சேவைகளைக் கொள்வனவு செய்யவும் பொது வசதிக் கட்டணங்களைச் செலுத்தவும் ஏனைய பாவனையாளர்களுக்குப் பணப் பரிமாற்றம் செய்யவும் வர்தன வேர்ச்சுவல் வொலட்டை பயன்படுத்தலாம். இப் பிரயோகம் பாவனையாளர்களின் வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்டிருப்பதால், அவர்கள் தமது நிதியை ஒழுங்காக நிர்வகிப்பதற்கு உதவும். அவர்கள் எங்கிருந்தும் எந்த வேளையிலும் தமது கணக்கு மீதியை அறிந்துகொள்ளவும் புதிய மட்டத்திலான நிதிச் சுதந்திரத்தை அனுபவிக்கவும் முடியும்.

வணிகர்களுக்கான நன்மைகள்: சகல வியாபாரத் துறைகளைச் சேர்ந்த வணிகர்களும் வர்தனவேர்ச்சுவல் வொலட் மூலம் நன்மையடையலாம். பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான கொடுப்பனவுகளை அவர்கள் இலத்திரனியல் முறையில் ஏற்றுக்கொள்ளலாம். வுpயாபாரச் செயற்பாடுகள் எந்த அளவில் இருந ;தாலும் அவர்கள் மொபைல் கொடுப்பனவுகள் மூலம் பல நன்மைகளைப் பெற முடியும். வேறு வழிகளில் கொடுப்பனவுகளை ஏற்கும்போது ஏற்படும் செலவை விட இது மலிவான வழி என்பது பிரதான நன்மையாகும். வாடிக்கையாளரின் நலனை மையமாகக் கொண்ட ஷொப்பிங் அனுபவத்தை வழங்குவதன் மூலம் தமது வர்த்தகப்பெயரின் நிலையை உயர்த்திக்கொள்ளவும் அவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும். 

சுமுகமான கொடுக்கல் வாங்கல்: வர்தன வேர்ச்சுவல் வொலட் ஊடாக பொருள்கள் மற்றும் சேவைகளைக் கொள்வனவு செய்வது விரைவான மற்றும் இலகுவான வழியாகும். முதலாவதாக, குறிப்பிட்ட வணிக நிலையத்திலுள்ள காசாளர், பாவனையாளரின் மொபைல் இலக்கத்தைக் கோருவதன் மூலம் கொடுக்கல் வாங்கலை ஆரம்பிப்பார். பின்னர், கொடுக்கல் வாங்கலை ஊர்ஜிதம் செய்வதற்காக ஒரே தடவை PIN ஒன்றினை பாவனையாளர் பெறுவார். இது காசாளருடன் பகிர்ந்துகொள்ளப்படும். அதனையடுத்து, வணிகர் தனக்குரிய கொடுப்பனவையும் தரகுப்பணத்தையும் உடனடியாகப் பெற்றுக்கொள்வார்.

பதிவு செய்வது எப்படி? தனிப்பட்ட வர்தன வேர்ச்சுவல் வொலட் ஒன்றிற்குப் பதிவு செய்ய, விண்ணப்பதாரர் DFCC வங்கியில் தனிப்பட்ட கணக்கு ஒன்றை ஆரம்பித்து, பூர்த்தி செய்யப்பட்ட வர்தன வொலட் ஆணையளிப்புப் பத்திரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பினபு, மொபைல் பிரயோகம் பதிவிறக்கம் செய்யப்பட வேண்டும். அப்பிள் தொலைபேசிவைத்திருப்பவர்கள் அப்பிள் ஸ்டோரில் இருந்தும் அன்ட்ரொயிட் தொலைபேசி வைத்திருப்பவர்கள் பிளே ஸ்டோரில் இருந்தும் பிரயோகத்தைப் பதிவிறக்கம் செய்ய முடியும். வொலட்டை செயற்படுத்தியதும், பாவனையாளர்கள் தமது விபரங்களைப் பதிவு செய்து அதன் சேவைகளைப் பயன்படுத்தத் தொடங்கலாம். இவ் வசதிக்காகப் பதிவு செய்துகொள்ள விரும்பும் வணிகர்களும் இதே நடைமுறையைப் பின்பற்றலாம். அவர்கள் தமது தனிப்பட்ட கணனிகள் ஊடாகவும் இப் பிரயோகத்தைச் செயற்படுத்தலாம். வணிக நிறுவனங்களின் கணனி அமைப்புக்களிலும் இப் பிரயோகத்தை ஒருங்கிணைக்க முடியும். வர்தன வேர்ச்சுவல் வொலட் வசதியைப் பெற விரும்பும் தனி நபர்களும், வணிகர்களும் 0112350000 என்ற DFCC ஹொட்லைன் ஊடாக அல்லது customerservice@dfccbank.com என்ற மின்னஞ்சல் ஊடாகத் தொடர்புகொள்ள வேண்டும்.

Synapsys பற்றி... DFCC வங்கி பி.எல்.சி.யின் உப நிறுவனமாக 2006 ஒக்டோபரில் கூட்டிணைக்கப்பட்ட Synapsys நிதிச் சேவைகள் ஆலோசனை, கணனி மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்பச்சேவைகளை வழங்கி வருகிறது. அதனால் வழங்கப்படும் பலதரப்படட வசதிகளும் சேவைகளும் ஆசிய பசிபிக் பிராந்தியத்திலுள்ள வங்கிகள், மூலதனச் சந்தைகள், காப்புறுதி மற்றும் சிற்றளவு கொடுப்பனவுச் சேவைகளுக்கு உதவியாக இருக்கின்றன.

DFCC வங்கி பற்றி... முன்னோடியான அபிவிருத்தி வங்கியொன்றின் நிபுணத்துவத்தையும் உயிர்த்துடிப்பான வர்த்தக வங்கியொன்றின் ஆற்றலையும் ஒருங்கே கொண்டு தேசிய சின்னமாக விளங்கும் DFCC வங்கி பி.எல்.சி. தனது வாடிக்கையாளர்களுக்கு சேமிப்பு மற்றும் பண வைப்பு உள்ளிட்ட துறைகளில் இணையற்ற சேவையையும் தனித்துமான நன்மைகளையும் வழங்கி வருகிறது. துரிதமாக வளர்ச்சியடைந்துவரும் வங்கி, தற்சமயம் 137 கிளைகளையும் சேவை நிலையங்களையும் கொண்டுள்ளது. வங்கி தற்போது LankaPay பொது ATM வலையமைப்புடன் இணைந்திருப்பதால், சகல கணக்கு வைப்பாளர்களும் நாடெங்குமுள்ள 3,000க்கு மேற்பட்ட ATMகள் ஊடாக கட்டணம் எதுவுமின்றி மீளப்பெறுகைகளைச் செய்துகொள்ளவும் கணக்கு மீதி விசாரணைகளை மேற்கொள்ளவும் முடியும். நவீன தொழில்நுட்பத்தின் மூலம் வாடிக்கையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்திவரும் வங்கி, பல்வேறு இலத்திரனியல் மற்றும் மொபைல் சேவைகளையும் வழங்குகின்றது. DFCC வங்கி பி.எல்.சி. உள்நாட்டுச் சமூகங்கள் மத்தியில் நட்புறவையும் உறுதிப்பாட்டையும் பரப்பும் அதே வேளையில், நிதிச் சேவைகளில் அனைவரையும் இணைத்துக்கொள்ளும் கொள்கையைத் தொடர்ச்சியாகக் கடைப்பிடித்து வருகிறது.