ஆப்கான் - தலிபான் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்க பிரதிநிதி விசேட பயணம்

Published By: Vishnu

26 Jul, 2020 | 11:45 AM
image

ஆப்கானிஸ்தானின் நல்லிணக்கத்திற்கான அமெரிக்காவின் சிறப்பு பிரதிநிதி, சல்மே கலீல்சாத், காபூல் அரசாங்கத்திற்கும் தலிபான் கிளர்ச்சியாளர்களுக்குமிடையிலான சமாதான பேச்சுவார்த்தைக்கு அழுத்தம் கொடுப்பதற்காக ஐந்து தேசிய சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

அதன்படி சல்மே கலீல்சாத் தோஹா, காபூல், இஸ்லாமாபாத், ஒஸ்லோ மற்றும் சோபியா ஆகிய பகுதிகளுக்கு பயணிக்க வெள்ளிக்கிழமை புறப்பட்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை சனிக்கிழமை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பெப்ரவரி மாதம் தலிபானுடனான ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்கா ஆப்கானிஸ்தானிலிருந்து தமது படைகளை படிப்படியாக வெளியேற்றி வருகிறது.

இந்த ஒப்பந்தம் கிளர்ச்சியாளர்களுக்கும் ஆப்கானிய அரசாங்கத்திற்கும் இடையில் முறையான சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு வழி வகுக்கும் நோக்கில் உள்ளது. மேலும் கலீல்சாத்தின் பணி இரு தரப்பினரையும் கலந்துரையாடலுக்கு கொண்டுவருவது ஆகும்.

கைதிகள் பரிமாற்றம் மற்றும் வன்முறையைக் குறைத்தல், சமாதானப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கான முன்னேற்றத்திற்கு இடையூறு விளைவிக்கும் இரு பிரச்சினைகள் ஆகியவற்றிற்கு அழுத்தம் கொடுக்க கலீல்சாத் திட்டமிட்டுள்ளார்.

கைதிகள் பரிமாற்றங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டாலும், இந்த பிரச்சினையை முழுமையாக தீர்க்க கூடுதல் முயற்சி தேவைப்படுகிறது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஈரானின் எல்லையில் உள்ள ஒரு மேற்கு மாகாணத்தில் தலிபான் போராளிகளுக்கு எதிரான வான்வழித் தாக்குதல்களில் பொதுமக்கள் உட்பட 45 பேர் கொல்லப்பட்ட ஆப்கானிய அரசாங்கப் படைகள் நடத்திய தாக்குதலை கலீல்சாத் புதன்கிழமை கண்டித்திருந்ததையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10
news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10