பிள்ளையான் அமைச்சர் பதவியில் அமர முடியாது - அம்பிட்டிய சுமணரத்தன தேரர் 

26 Jul, 2020 | 11:15 AM
image

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையானுக்கு எதிராக சாட்டப்பட்ட குற்றங்களும் அதற்கான வழக்குகளும் இருப்பதால் கபினற் அமைச்சர் பதவியில் அமர முடியாது எனவே அவர் பாராளுமன்றம் சென்று செய்யக் கூடியது என்ன? என மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாராதிபதியும் சுயேச்சைக் குழு 22 வேட்பாளருமான அம்பிட்டிய சுமணரத்தன தேரர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாரையில் இன்று சனிக்கிழமை (25) தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்

2020 பொது தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில்  இன்னும் சல தினங்கள் உள்ள நிலையில் 30 வருட யுத்ததின் பிற்பாடு இம் மக்கள் கடந்து வந்த இன்னல்கள் தொடர்பாக பாராளுமன்ற சிங்கள ஆட்சியாளர்கள் புரிந்து  கொள்ளக் கூடிய சிங்கள மொழியில் கூறி மக்களுக்கு  சரியான தீர்வை வழங்க வேண்டும் என முயற்சி செய்து கொண்டிருப்பேன்.

தொல்பொருள் செயலணி தொடர்பாக மனவேதனையடைகின்றேன் இந்த நாட்டில் ஆட்சி செய்கின்றவர்களும் செய்ய இருப்பவர்களும் நான் பாராளுமன்றம் செல்வதில் பயத்தில் இருக்கின்றனா. காரணம் இந்த மக்களுக்கு உள்ள பிரச்சனைகளை அவர்கள் மொழியில் நான் எடுத்துக் கூறும்போது பாராளுமன்றம் சென்றவர்கள் இதுவரையும் செய்யாதையிட்டு அவர்கள் வெக்கப்படுவார்கள், அரசியலில் மட்டுமல்ல நிர்வாகத்துறையில் இருப்பவர்களும்

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடந்த 4 வருடங்கள் இருந்து இந்த மக்களுக்கு என்ன செய்தார் என்பதை தமிழ் மக்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். ஆவர் ஊயிர்த ஞாயிறு குண்டுவெடிப்பில் தற்கொலை குண்டுதாரியின் தலையை இந்து மயானத்தில் புதைத்தவர். அரசாங்க அதிபர் என்ற முறையில் தனது பிரதேசத்தில் செய்துவிட்டு தேர்தலில் நின்று  இம் மக்களிடம் வாக்கு கேட்பது வெக்கமில்லை என எனக்கு தெரியவில்லை.

சாணக்கியன் இன்றுவரை தேர்தல் தொடர்பாக ஊடக விளம்பரங்களுக்கு  கோடிக்கணக்கில் பணம் செலவு செய்துள்ளார். இவ்வாறு விளம்பரங்களுக்கு லஞ்சம் கொடுத்து செயற்படுவதுடன் விசேடமாக ஹிஸ்புல்லா, அமீர்அலி, முஸ்லும் காங்கிரஸ். போன்ற அனைவருமே இலஞ்ச ஊழல் செய்து வாக்குகளை பெற்றுக் கொள்வதற்கு முயற்சிக்கின்றனர்.  தேர்தல் ஆணைக்குழு கண்டு கொள்ள வில்லை இதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது இவ் உத்தியோகத்தர்களுக்கு தேவைப்பட்டதாக தெரியவில்லை 

இது ஏனைய வேட்பாளர்களுக்கு மிகவும் பாரிய பிரச்சனை மக்கள் உண்மையை அறிந்து கொள்ள விரும்புகின்றனர். மக்களை பயமுறுத்த வேண்டிய அவசியமில்லை தற்போது தொல்பொருள் செயலணி உத்தியோகத்தர் வேறு எங்கும் செல்லாது அதுவும் மட்டக்களப்பில் மாத்திரம்  தொல்பொருள் நிலங்களை மட்டும் தான் ஆராய வருகின்றனர் இது ஏன்? ஏன எனக்கு சந்தேகம் எழுகின்றது. இதில் ஜனாதிபதி தொடர்பு இருக்கின்றதாக தெரியவில்லை நான் பாராளுமன்றம் செல்ல இடமளிக்காமல் தமிழ் மக்களிடையே பௌத்த புனிதஸ்தலங்கள் தொடர்பில் பிரச்சனையை ஏற்படுத்துவது ஏன் என தெரியவில்லை.

கரடியனாறு பகுதியிலுள்ள உசனார் மலையில் இருந்த பிள்ளையார் சிலையை தேசப்படுத்தியதாக கேள்விப்பட்டுள்ளேன். அங்கு செல்வேன் ஆனால் அங்கு செல்லாமல் இருப்பது  தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் பிரச்சனையில் என்னை கோத்துவிட முயற்சிக்கின்றனர். இதற்கு பின்னால் யார் இருக்கின்றார் என பார்த்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கின்ற ஒருவர் அவருக்கு உதவி செய்வதற்கு தொல்பொருள் திணக்களத்தில் சில உத்தியோகத்தர்கள் உள்ளனர். 

இவர்கள் இருவரும் இணைந்து மட்டக்களப்பில் மதரீதியாக இனங்களுக்கிடையே பிரச்சனை ஏற்படுத்தப் பார்க்கின்றனர். நான் இதற்கு எல்லாம் ஏமாறமாட்டேன். மேலும் தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைப்பதை தடை செய்வதில் மேலும் ஜாரான் போன்றவர்கள் சுற்றிய வளைக்கும் மட்டும் ஆமத்துரு  பார்த்துக் கொண்டிருப்பார் என்பது தான் அவர்களுடைய எண்ணம். நான் அந்த விடயத்தில் இல்லை.

பிள்ளையான் விடுதலையாகி வெளியில் இருப்பார் என்றால் பிரச்சனை இல்லை நான் அதை பயமில்லாமல் மக்களுக்கு சொல்வேன்.  பிள்ளையான் சிறையில் கைதியாக இருக்கும் வேளை மக்களுக்கு நியாயத்தை பெற்று வழங்க கூடிய ஒருவருமில்லை. அவருக்கு எதிராக சாட்டப்பட்ட குற்றங்களும் அதற்கான வழக்குகளும் இருப்பதால் கபினற் அமைச்சர் பதவியில் அமரமுடியாது

ஆனால் நாட்டின் தலைவர்கள் தாம் நினைத்தவாறு அவ்வாறு வழங்குபவர்களாக இருந்தால் மற்றவர்கள் விரும்பமாட்டார்கள்  எனவே அவர் பாராளுமன்றம் சென்று செய்யக் கூடியது என்ன். பிள்ளையான் பின்னால் இருக்கும் குழுவில் இந்த நாட்டு ஆட்சியாளர்களிடம் சென்;று தோளில்கை போட்டு செயற்பட எவருமே இல்லை  என நான் பொறுப்புடன் கூறுகின்றேன் 

அனைத்து மக்களுடைய விருப்பங்களை மிகவும் கூடுதலாக இணைத்துக் கொள்ளும் இவ்வேளையில் அனைத்து மக்களும் எனக்கு வாக்களிப்பதாக கதைக்கின்றனர். என்ற நிலையைப் பெற்று கூறுகின்றேன் எமது சந்ததியினரின் எதிர்காலம்  நாம் 30 வருடங்களாக பெற்றுக் கொள் முடியாத வரப்பிரசாரங்களை பெற்றுக் கொள்ள தொடர்ந்து செயற்படுவேன் எனவே  எனது சுயேச்சைக் குழு 22 இலக்கம் மேளச் சின்னத்துக்கும் எனது முதலாம் இலக்கத்துக்கும் வாக்களிக்குமாறு கேட்டக் கொள்கின்றேன்.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59
news-image

மாஓயாவில் நீராட சென்ற 4 மாணவர்கள்...

2024-03-28 09:50:11
news-image

காலநிலை மாற்றத்திலிருந்து சிறுவர்களை பாதுகாக்க விசேட...

2024-03-28 09:46:04