காணாமல்போனோர் விவகாரத்தில் அரசியலை நடத்துகிறது கூட்டமைப்பு தமிழ் மக்களை நோக்கி நாங்கள் நீட்டுகின்ற கரங்களின் மீது எச்சிலை உமிழ வேண்டாம்  - பஷில் ராஜபக்ஷ

26 Jul, 2020 | 10:47 AM
image

நேர்கண்டவர் – ரொபட் அன்டனி 

காணாமல் போனோர் விடயத்தை தீர்க்கவிடாமல் பிச்சைக்காரரின் காயங்களை போன்று அதனை அரசியலுக்காக கூட்டமைப்பு பயன்படுத்தி வருகின்றது. மாறாக  நேர்மையான முறையில் அந்த மக்களுடன் கலந்துரையாடி  இந்த பி்ரச்சினையை  தீர்ப்பதற்கு எங்களுக்கு இடமளிக்கவேண்டும்.  ஆனால் தமிழ்க் கூட்டமைப்பினர் தமது அரசியல் மற்றும் வாக்குகளுக்காக இந்த பிரச்சினையை தீர்க்கவிடாமல்  நீடித்துவருகின்றனர்  என்று பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும்  முன்னாள் அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ குற்றம் சுமத்தினார்.

அவர் கேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே  அவர்  இந்த விடயங்களை குறிப்பிட்டார்.   

செவ்வியின் முழு விபரம்  வருமாறு,

கேள்வி: தேர்தலில் பெறும் வாக்குகள் மற்றும் ஆசனங்கள்  தொகுதிகளின்  எண்ணிக்கை  தொடர்பில் கணக்கிட்டு கூறுவதில் நீங்கள் வல்லவர் தானே?  இம்முறை   தேர்தலில் என்ன நடக்கும்? 

பதில் :  தேர்தலுக்கு இன்னும் குறிப்பிட்டவகையில் தினங்கள் உள்ளன.  எனவே இறுதி  தேர்தல்முடிவை கூறுவதற்கு எனக்கும்  ஒரு வாரம் அவசியமாகும்.  நாங்கள் மிக தெளிவான முறையில் வெற்றிபெறுவோம். ஆனால் அந்த வெற்றி எவ்வாறு அமையும் என்ற விபரங்களை கூறுவதற்கு  இன்னும் சில தினங்கள் அவசியமாகும். 

கேள்வி : தேர்தல் நிலைமைஇ கொரோனா பரவல் நிலைஇ மக்களின் ஆர்வம்இ எவ்வாறு உள்ளது?

பதில் : ஜனாதிபதி தேர்தல் ஒன்றுடன் ஒப்பிடும்போதும் எப்போதும் ஏனைய மூன்று தேர்தல்களான பாராளுமன்றம் மாகாண சபை மற்றும்  உள்ளூராட்சிமன்ற தேர்தல்களில் வாக்களிப்பு வீதம் குறைவாகவே இருக்கும்.   அதற்கு  மேலதிகமாக  கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான நிலையும்   வாக்களிப்பு வீதம் குறைவடைய காரணமாகும்.   அதேபோன்று  ஐக்கிய தேசிய கட்சி மற்றும்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இம்முறை பிளவடைந்து சிதறிக் கிடப்பதால் வாக்களிப்பு குறையலாம். காரணம் அந்தக் கட்சிகளின் ஆதரவாளர்கள் தடுமாறி வாக்களிக்காமல் விடுவார்கள். வடக்கில் முன்னாள் முதலமைச்சர் பிரிந்து வேறு கட்சியில் போட்டியிடுகிறார்.

கேள்வி :ஆளும் கட்சியின் வெற்றியின்  எதிர்பார்ப்பு எவ்வாறு உள்ளது?

பதில் : ஆளும் கட்சி எவ்வாறான வெற்றியை பெறும் என்பது தொடர்பில் யாரும் விவாதிக்கவேண்டியதில்லை.  நாம் பாரிய வெற்றியை அடைவோம்.

கேள்வி : ஏன் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை கேட்கின்றீர்கள்?

பதில் : நல்லதொரு கேள்வி.  உண்மையில் தமிழ் மக்கள் எங்களுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை வழங்காமல்  அரசியல் தீர்வை கேட்கின்றனர்.  அரசியலமைப்பு திருத்தத்தை கோருகின்றனர்.  ஆனால் கடந்த ஆட்சியில் மூன்றிலிரண்டு பலம் இருந்த ஆட்சியாளர்களிடம் அதனை  கேட்டுப்பெறவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுமந்திரன் சம்பந்தன் உள்ளிட்டோர் ஆதரவு வழங்கிய நல்லாட்சி அரசாங்கத்துக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தைவிட அதிக பலம்  இருந்தது.  ஆனால் அந்த நேரம் எதனையும் கேட்டுப்பெறவில்லை. எனினும் அடுத்து எமது அரசாங்கம் வந்ததும் அதனை கேட்பார்கள். எனவே  யாரிடமும் அடிபணியாமல் நாட்டுக்கு பொருந்துகின்ற ஒரு அரசியலமைப்பை உருவாக்குவதற்கு எங்களுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் அவசியமாகும். 

கேள்வி  : ஆளும் கட்சிக்கு தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் கிடைத்தால் அரசியல் தீர்வுக்கு செல்வீர்களா? 

பதில் : அதாவது மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் இல்லாமல் எப்படியும்  அதனை செய்ய முடியாது. மூன்றிலிரண்டு பலம் இருந்தாலும் செல்ல முடியுமா என்று தெரியாது.  காரணம் நாங்கள் கூட்டணி கட்சியாக இருக்கின்றோம்.  தனிக்கட்சி அல்ல. பல்வேறுபட்ட கருத்துக்களை உடைய கட்சிகள் உள்ளன. எனவே அனைவரதும் கருத்துக்களை ஆராய்ந்து ஒரு நிலைக்கு செல்லவேண்டும்.

கேள்வி : பஷில் ராஜபக்ஷஇ  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோர்  அங்கம் வகிக்கும் அரசாங்கத்தில் தீர்வை நோக்கி பயணிக்க முடியுமா?

பதில் : நான் இங்கு அரசியல் தீர்வு குறித்து பேசவில்லை. 1972 ஆம் ஆண்டு அரசியலமைப்பு ஆறு வருடங்களில் மாறியது.  தற்போதைய  அரசியலமைப்பு இழுபறியில் உள்ளது. தற்போதைய அரசியலமைப்பின் பிரதான தூண்கள் சிதறிவிட்டன.  13 ஆம் திருத்தம்  16 மற்றும் 18 ஆம் திருத்தங்களின்போது அது மாறியது. இறுதியில்  19 ஆம் திருத்தத்தில் முழுமையாக மாற்றமடைந்தது. ஆரம்ப அரசியலமைப்புடன் பார்க்கையில் பாரிய மாற்றங்கள்  நடந்துவிட்டன. உதாரணமாக ஏற்கனவே கட்டப்பட்ட வீட்டின் மேல் வேறுபல  கட்டடங்களை நிர்மாணித்தால் வீடு சரிந்துவிடும். அந்த நிலைதான் தற்போதைய அரசியலமைப்புக்கு ஏற்பட்டுள்ளது.

கேள்வி : அடுத்த ஆட்சியில் புதிய அரசியலமைப்பு நிச்சயமாக கொண்டுவரப்படுமா?

பதில் : புதிய அரசியலமைப்பை கொண்டுவருவதற்கே மூன்றிலிரண்டு பலத்தை கேட்கிறோம்.

கேள்வி : அவ்வாறு புதிய அரசியலமைப்பை உருவாக்கும்போது 70 வருட தேசிய பிரச்சினைக்கான தீர்வு குறித்து சிந்திக்கமாட்டீர்களா?

பதில் : தேசிய பிரச்சினை  70 வருடங்களுக்கு முன்னுக்கு போகுமா? பின்னுக்கு போகுமா என்று கூற முடியாது. ஆனால் அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தகுதியான அரசியலமைப்பு அவசியமாகும்.  வறுமை ஒழித்தல்  பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தல்  உணவு பாதுகாப்பை ஏற்படுத்துதல் தேசிய ஒருமைப்பாடு  இறையாண்மை தேசிய ஒற்றுமை  தேசிய பாதுகாப்பு போன்ற விடயங்களுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும். அதேபோன்று  போதைப் பொருள் பாதாள உலகம் இல்லாத அச்சம் இல்லாத வாழ  முடியுமான சமூகத்தை உருவாக்கவேண்டும். வறுமை மற்றும் அச்சம் என்பன இருக்கும்போதுதான் அவை பல்வேறு முகங்களில் வெளிவரும். 

கேள்வி : தேர்தலில்  தெரிவு செய்யப்படும்  வடக்கு கிழக்கு பிரதிநிதிகளுடன் பேச்சுநடத்துவீ்ர்களா?

பதில் : அதனை பிரதிநிதிகளை தெரிவு செய்கின்ற மக்களும்  பிரதிநிதிகளும்தான் தீர்மானிக்கவேண்டும். கடந்த அரசாங்கத்துடன் அவர்கள் பேச்சு நடத்தினார்கள்.  அரசாங்கத்துக்கு ஆதரவும் வழங்கினார்கள். வரவு செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தார்கள். நம்பிக்கையில்லா பிரேரணைகளின்போது அரசாங்கத்தை காப்பாற்றினர்.  கடந்த அரசாங்கம் திருட்டு மோசடியில் ஈடுபட்டபோது அதனை பாதுகாத்த கட்டிக்காத்த  தமிழ் பிரதிநிதிகள் வடக்கு கிழக்கு மக்களுக்காக எதனை பெற்றுக்கொடுத்தனர்?   மூன்றிலிரண்டு பலம் இருந்த நல்லாட்சியிடம் அரசியல் தீர்வை பெற்றனரா?  அரசியல் தீர்வில் ஒரு துளியையாவது கடந்த  அரசில் பெற்றனரா?  ஆனால் நாம் என்ன செய்தோம்? யாழ்.தேவி  வடக்குக்கு செல்தல்இ பிள்ளைகளுக்கு கல்வி கற்க மின்சாரம்இ  பொறியியல் பீடம்இ  விவசாயம் பீடம்இ ஏ –  9  வீதிஇ   விவசாயம்இ மீன்பிடிஇ  துரையப்பா விளையாட்டு அரங்கை மீள் புதுப்பித்தமைஇ   இவைதான் மக்களின்  தேவை என்று நாங்கள் கருதினோம்.  ஆனால் தமிழ் கூட்டமைப்புக்கு அவை தேவையில்லை. அப்படியானால் அவர்களுக்கு தேவையானதை ஏன் நல்லாட்சியிடம் பெறவில்லை? 

கேள்வி : அரசாங்கம் அரசியல் தீர்வு திட்ட யோசனையை முன்னெடுத்தால்  மூன்றிலிரண்டு பலத்தைப்பெற ஆதரவு வழங்குவதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளதே?

பதில் : அவ்வாறு நிபந்தனைகளுக்கு அடிபணியாத ஒரு வரத்தையே நாம் மக்களிடம் கேட்கிறோம். யாருடையதும் பணயக் கைதியாக நாங்கள் இருக்கமாட்டோம்.  நிபந்தனைகளுக்கு  அடிபணியவுமாட்டோம். நிபந்தனைகளின்றி யாரும் ஆதரவளிக்கலாம். அது அவர்களை பொறுத்தது.  நாட்டுக்கு  பொருந்துகின்ற அனைத்து இன மக்களுக்கும் தகுதியான அனைத்து பகுதிகளிலும் வாழும் மக்களுக்கு சமத்துவத்தை பெற்றுக்கொடுக்கும் அரசியலமைப்பை நாம் உருவாக்குவோம். 

கேள்வி : இந்தத் தேர்தலில் வடக்கு கிழக்கு மக்களிடம் நீங்கள் கேட்பது என்ன?

பதில் : வழமையாக கூறும் விடயத்தையே இம்முறையும் கூறுகின்றோம். இன்னுமொருமுறை இனவாதிகளிடம் ஏமாறவேண்டாம்.  மற்றுமொரு முறை ஏமாற வேண்டாம். நாங்கள் உங்களை நோக்கி நீட்டுகின்ற கரங்களின்மீது எச்சிலை உமிழ வேண்டாம் என்றே வடக்கு கிழக்கு மக்களிடம் கோருகின்றோம்.  ஒரு தரப்பினால் கைதட்ட முடியாது. அனைவரும் இணைந்து கைதட்டுவோம். 

கேள்வி : அடுத்த ஆட்சியில் வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுமா?

பதில் :  பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பிரச்சினை என்னவென்று எமக்கு தெரியவேண்டுமே? நாம் இணைந்து தீர்ப்போம். பிரச்சினையை இரண்டு தரப்பினரும்  இணைந்து தீர்ப்போம் என்பதே எமது தத்துவம்.

கேள்வி : இரண்டு தரப்பினர் என்று யாரைக் கூறுகின்றீர்கள்?

பதில் : பிரச்சினை உள்ளவர்களும் பிரச்சினையை தீர்க்க கூடியவர்களும் என்றே கூறுகிறேன். 

கேள்வி : அதிகாரப் பகிர்வு என்பது  தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன?

பதில் : அதிகாரப்  பகிர்வு குறித்து மஹிந்த சிந்தனையில் கூறப்பட்டுள்ளது. அதாவது அதிகாரங்களை உச்சபட்சமாக மக்களுக்கு பகிரவேண்டும்.  அந்த நிலைப்பாட்டில் இன்றும் இருக்கின்றோம். அது மாறாது.  கிராம மட்டத்தின் மக்களின் பங்களிப்புடனான நிர்வாகமே அவசியமாகின்றது. 

கேள்வி : 19 ஆவது திருத்தம் மாற்றப்படுமா?

பதில் : முழு அரசியலமைப்பையே நாங்கள் மாற்றப்போகிறோம்.   புதிய கட்டமைப்புடன் அரசியலமைப்பு வரும். 

கேள்வி : புதிய அரசியலமைப்பில்  13 ஆவது திருத்தத்துக்கு என்ன நடக்கும்?

பதில் : 13 மற்றும்  19 என்ற எதுவுமில்லை. முழு அரசியலைமப்பும் மாற்றப்படும்.   புதிய அரசியலமைப்பில் நீங்கள் கூறுகின்ற விடயங்கள் இருக்கலாம். இல்லாமலும் போகலாம். 

கேள்வி: மாகாண சபை முறை குறித்து உங்கள் மதிப்பீடு என்ன?

பதில் : மாகாண சபை காணாமல் போனமைக்கு கூட்டமமைப்பு காரணம்.  அவர்கள் தான் வாக்களித்து இதனை இல்லாமலாக்கினர்.  மஹிந்த ராஜபக்ஷ வரும்வரை வடக்கில் மாகாண சபை இருக்கவில்லை.  தற்போது அதனை அவர்கள் இழந்தனர். அதனால் மாகண சபை அல்லது அதன் அதிகாரங்கள் குறித்து பேசுவதற்கு  கூட்டமைப்புக்கு எந்த அருகதையும் இல்லை.  அதனைப் பற்றி பேச பொதுஜன பெரமுனவுக்கேஉரிமை உள்ளது. நாங்களே  மாகாண சபையை காணமலாக்கும் சட்டமூலத்தை எதிர்த்தோம்.

கேள்வி : வடக்கு கிழக்கு மற்றும் மலையக மக்களின் வாக்குகளை ஏன் ஜனாதிபதி  தேர்தலில் உங்கள் தரப்பினரால் பெற முடியவில்லை? 

பதில் : அதனை மக்களிடம் கேட்கவேண்டும்

கேள்வி : உங்கள் மதிப்பீடு என்ன?

பதில் : மக்கள் சரி என்ற எண்ணத்தில் நாங்கள் இருப்போம். 2015 தெற்கில் மக்கள் எங்களை தோற்கடித்ததும் நாம் அதனை புரிந்துகொண்டோம்.  நாம் எம்மை திருத்திக்கொள்ளவேண்டும் என்று எண்ணி திருத்திக்கொண்டோம். வடக்கு கிழக்கு மலையகத்தில் ஏன் கிடைக்கவில்லை என்று அதற்கான தீர்வை தேடுகிறோம். ஆனால் இம்முறை மலையக மக்கள் எம்மை ஆதரிப்பர்.  அடுத்த  முறை கிழக்கு மக்களின் ஆதரவை பெறுவோம்.  பின்னர் வடக்கு மக்களின் ஆதரவையும் பெறுவோம். 

கேள்வி : அரசாங்கம் இராணுவமயத்தை நோக்கி நகர்வதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றனவே?

பதில் : உலகில் வெளிநாட்டு இராணுவத்துக்கு எதிர்ப்பு வெளியிடுவார்கள். ஆனால்  தமது நாட்டு இராணுவத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றவர்கள்    இலங்கையிலேயே உள்ளனர்.  இராணுவம் என்பது மக்களிடம் இருந்தோ அரச இயந்திரத்திடம் இருந்தோ விலக்கி வைக்கும் துறை அல்ல.

அனைத்து நாடுகளிலும் இராணுவம்  செயற்படுகிறது. கம்யுனிஸ்ட் நாடுகளிலும் இராணுவம் செயற்படுகினறது.  லிபரல் ஜனநாயக நாடுகள் சர்வாதிகார நாடுகளிலும் இராணுவம் செயற்படுகிறது.  இராணுவம் என்பது அரச நிர்வாகத்தின் ஒரு பகுதியாகும். இராணுவத்தை மக்களிடம் இருந்து பிரிக்க முடியாது.   வெளிநாட்டு ஆக்கிரமிப்பு இராணுவம் என்பது வேறு. இது ஜனநாயக நாட்டில்  நிர்வாகம் நீதித்துறை அரச சேவை போன்று இராணுவமும் ஒரு துறை. 

கேள்வி :  சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தினர் ஈடுபடுவதாகவே குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது?

பதில் : அவ்வாறு  இராணுவத்தை பயன்படுத்துவதில் எமது அரசில் குறைவு என்றே கூறவேண்டும்.  அதிகளவில் இராணுவ வீரர்கள் ஓய்வுபெற்ற  பின்னரே ஈடுபடுத்துகிறோம். 

கேள்வி : கொரோனா ஆபத்தின்போது நீங்கள் பெரிய பொறுப்பை ஒன்றை வகித்தீர்களே?

பதில் : கொரோனாரவை நாங்கள் கட்டுப்படுத்தில் உண்மையில் புதுமையானது.  நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் நான் அந்த பொறுப்பை ஏற்று செய்தேன்.  கொரோனாவில் நாங்கள் கவனித்த இரண்டு விடயங்களாக மக்களின் உயிர் மற்றும்  வாழும் முறை என்பன காணப்பட்டன.  அவற்றை நாங்கள் திட்டமிட்டு செய்தோம்.    மக்களை வாழ வைப்பதற்கான சவாலை நான் ஏற்றேன்.  ஆனால் அந்த சந்தர்ப்பத்தில் நான்  அரசியல்  செய்யவில்லை.    நான் அரசியல்வாதிதான். அது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அந்த சந்தர்ப்பத்தில் அரசியல் செய்யவில்லை.  அதேபோன்று இராணுவத்தின் ஈடுபாடும் உள்ளது. நாங்கள் யுத்த நிலையில் இராணுவத்தைக்கொண்டு நாட்டை நிர்வகிக்கவில்லை.

கேள்வி : முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் எவ்வாறான  உறவு உள்ளது?

பதில் : மிகச்சிறந்த உறவு உள்ளது

கேள்வி : உங்கள் தரப்பினர் கடும் விமர்சனங்களை அவர் மீது முன்வைக்கின்றனரே?

பதில் : எமது கட்சி ஜனநாயக கட்சி.  கட்சி உறுப்பினர்கள் எம்மையும் விமர்சிக்கின்றனரே. 

கேள்வி : மலையக மக்களுக்கு தேர்தலின் பின்னர் 1000 ரூபா சம்பளம் பெற்றுக்கொடுக்கப்படுமா?

பதில் :  அதனை நாம் செய்வோம்.  அதேபோன்று  5000 ரூபாவை மூன்று மாதங்களுக்கு வழங்க முயற்சித்தோம்.  ஆனால் இரண்டு மாதங்களுக்கே வழங்க முடிந்தது. தேர்தல் முடிந்ததும் மூன்றாவது 5000 ரூபாவை வழங்குவோம்.  கடிதம் அனுப்பப்பட்டிருக்கின்ற பட்டதாரிகளுக்கு நிலுவைப் பணத்தை செலுத்தி சேவையில் இணைப்போம்.  ஒரு இலட்சம்  வேலைவாய்ப்புக்களை வழங்குவோம்.  ’

கேள்வி : 1000 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுப்பது கடினமானது போன்று தெரிகின்றதே?

பதில் :  மிக கடினமான விடயங்களை ராஜபக்ஷவினர் செய்துள்ளனர்.

கேள்வி : தமிழ் அரசியல்  கைதிகள் 91 பேர் உள்ளனர். அவர்களின் விடுதலை தொடர்பில்?  

பதில் :  நானும் ஒரு அரசியல் கைதிதான். எனவே அதனைப்பற்றி எனக்கு தெரியும். அரசியல் ரீதியாக பழிவாங்கப்படுதலை குறிக்கின்றது. நான் இன்றும்  நீதிமன்றம் போகிறேன். பொலிஸ் நிலையத்தில் கையொப்பம் இடுகிறேன். அரசியலே  காரணம்.  நீங்கள் கூறுகின்ற இவர்கள்  அரசியல் ரீதியில் பாதிக்கப்பட்டவர்களா என தெரியாது. அது நீதிமன்ற செயற்பாடு. அரசியல் ரீதியாக அதனை நான் பார்க்கவில்லை. எனக்கு எதிராக அரசியல் ரீதியாக வழக்கு தாக்கல் செய்துள்ளனர். ஆனால் வழக்கு தாக்கல் செய்த பின்னர் அது நீதிமன்ற நடவடிக்கை.

கேள்வி: புலிகள் அமைப்பில்  செயற்பட்டவர்களே இன்று வெளியில் உள்ளனர்.  எனவே இவர்களை மட்டும் ஏன்? 

பதில் : அது அரசியல் ரீதியான விளக்கம்.   எனது வழக்குகளில் சட்டவிரோத பயன்பாடு என்று கூறப்பட்டுள்ளது. நான் பார்க்காத தொடாத குழாய்  தொடர்பில் இந்த வழக்கு தாக்கல்  செய்யப்பட்டுள்ளது. இதனை அரசியல் பழிவாங்கல் என்று நான் கூறுகிறேன். ஆனால் தற்போது அது நீதிமன்ற செயற்பாடு. அதனால் அது தொடர்பில் நான் பேச முடியாது.

கேள்வி : காணாமல் போனோர் விவகாரம் பாரிய பிரச்சினையாகவே நீடிக்கிறது. அடுத்த ஆட்சியில் இது ஒரு பொறிமுறை வருமா?

பதில் : மஹிந்த ராஜபக்ஷ காலத்தில்  இது  தொடர்பில் உண்மையான நடவடிக்கை எடுக்கப்பட்டு பரணகம ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. இங்கு காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்பதனையே தேடவேண்டும். அதனை தேடவே  அன்று மஹிந்த நடவடிக்கை எடுத்திருந்தார். இதுபற்றி பேசிக்கொண்டிருப்பவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரிந்திருக்கும். புலிகள் பாடசாலைகளை மாணவர்களை இழுத்துச் சென்று சிறுவர் போராளிகளாக்கினர்.  பின்னர் மோதல்களில் உயிரிழந்திருக்கலாம். அந்த வரலாறையே கண்டுபிடித்து கூறவேண்டும்.

ஆனால் இந்தப்பிரச்சினையை அரசியலாக்கியுள்ளனர். இது உணர்வுபூர்வமான பிரச்சினை.  இதனை அரசியலாக்கவேண்டாம் என்று தமிழ்க் கூட்டமைப்புக்கு கூறுகின்றேன். இதனை சர்வதேச மயப்படுத்தவேண்டாம். பாதிக்கப்பட்ட மக்களுடன் இந்தப் பிரச்சினையை  தீர்த்துக்கொள்ள எங்களுக்கு இடமளியுங்கள். காயமடைந்துள்ள மக்களுடன் பேசி இதனை தீர்த்துக்கொள்ள இடமளியுங்கள். மாறாக காயத்தை ஆற்றாமல் அதனை பிச்சைக்காரனின் காயம் போன்று கொண்டு செல்லவேண்டாம்.  வாக்குகளுக்காக இந்த பிரச்சினையை நீடிக்கின்றனர்.   இந்த விடயத்தை இடம்பெயர்ந்த மக்கள் விடயத்திலும் இந்த அரசியலை செய்ய முற்பட்டனர். ஆனால் நாம் அவற்றை சிறப்பாக செய்து அதற்கு இடமளிக்கவில்லை. எனவே இதனையும்  செய்ய  இடமளியுங்கள். புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் மக்களுக்கு தமது  அகதி அந்தஸ்தை நீடித்துக்கொள்ள  இதனை பயன்படுத்துகின்றனர். அவர்கள் அந்த பிரச்சினையை  வேறு வடிவில் தீர்க்கலாம். ஆனால் அதற்காக  பாதிக்கப்பட்ட  மக்களின் காயங்களை பயன்படுத்தவேண்டாம்.

கேள்வி : இந்த விடயத்தில் என்ன செய்யப்போகின்றீர்கள்?

பதில் : காணாமல் போனோர் விடயத்தில் காயங்களை எம்மால் ஆற்ற முடியும். ஆனால் இந்த காயத்தை ஆற்றவிடாமல் பிச்சைக் காரர் காயத்தை ஆற்ற விரும்பாததை போன்று செயற்படவேண்டாம் என்று சுமந்திரனிடமும் சம்பந்தனிடமும் கேட்கின்றேன்.

கேள்வி : முன்னாள் வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இம்முறை போட்டியிடுகிறார். அவர் தெரிவு செய்யப்பட்டால் எவ்வாறு அவருடன்  செயற்படுவீர்கள்?

பதில் நான் அவரை சந்தித்ததில்லை. விக்கினேஸ்வரன் தான் வடக்கு மாகாண சபை முறையை மக்களுக்கு அர்த்தமில்லாத ஒரு விடயமாக மாற்றியவர். அதிகார பகிர்வு என்ற விடயத்தை வெறுக்கவைத்த ஒருவர். அவரின் பின்னால் யார் இருந்தது என்று தெரியவில்லை. ஆனால் அவர் அதற்காகவே வெளிப்பட்டார்.

கேள்வி : வடக்கு கிழக்கில் புதிய தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்த அடுத்த ஆட்சியில் என்ன செய்வீர்கள்?

பதில் : மக்கள் எமக்கு ஆதரவளித்து அந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்தினால் நாம் செய்வோம். இல்லாவிடின் நாம் எவ்வாறு செயற்பட முடியும்? அதனை தெளிவாக கூறவேண்டும். எமக்கு மக்கள் பிரதிநிதிகளை அனுப்பவேண்டும்.

கேள்வி : அதாவது வடக்கு கிழக்கில் ஆளும் கட்சிக்கு பிரதிநிதிகள் இல்லாவிடின் அங்கு திட்டஙகளை முன்னெடுப்பது கடினமா?

பதில் : கடினம் அல்ல. முடியாது. எமக்கு பிரதிநிதிகளை தெரிவு செய்து அனுப்பவேண்டும். அப்போதுதான் பிரதிநிதிகள் எம்மிடம் வந்து பிரச்சினைகளை கூறுவார்கள்.  அப்போதுதான் எமக்கு தெரியும். இல்லாவிடின் நாம் என்ன செய்தாலும்  எதிர்ப்பு வரும். அண்மையில் வீதி அபிவிருத்தி ஒன்று இலங்கை முழுவதும் முன்னெடுக்கப்பட்டது.  கிளிநொச்சியில் மட்டும் இடமளிக்கவில்லை. கொந்தராத்துகாரர்களை விரட்டிவிட்டனர். 

கேள்வி : அப்படியானால் வடக்கு கிழக்கு மக்களின் வாக்களிப்பு போக்கு தொடர்பில் நீங்கள் விரக்தியில் உள்ளீர்களா?

பதில் : பாரிய விரக்தியில்  இருக்கின்றேன். அவர்களுக்கு தலைமைத்துவம் கொடுப்பவர்கள் அந்த மக்களை தவறாக வழி நடத்துகின்றனர். எனவே குறைந்த பட்சம் எமக்கு சில பிரதிநிதிகளை தெரிவு செய்து வடக்கு கிழக்கு மக்கள் அனுப்பவேண்டும். அப்போதுதான் திட்டங்களை முன்னெடுத்து செல்ல முடியும்.  மக்கள் பிரதிநிதிகள் இன்றி நாம் எவ்வாறு செயற்பட முடியும்? அவசரகால  நேரத்தில்  செயற்படலாம். அது பொதுவான விடயம்.   பிரதிநிதிகள்  இல்லாமல் இராணுவத்தைக்கொண்டு எதனையாவது செய்ய முயற்சித்தால் அதற்கு எதிராகவும் கூக்குரல்  இடுவார்கள். நாங்கள் யாருடன் வேலை செய்வது?

கேள்வி :  சில மாவட்டங்களில் நீ்ங்கள் மறைமுகமாக சுயேச்சைக் குழுக்களை களமிறக்கி வாக்குகளை சிதறிக்க முயற்சிப்பதாக விமர்சனங்கள் உள்ளனவே?

பதில் : நாங்கள் யாழ்ப்பாணத்தில் போட்டியிடவில்லை. காரணம் தகுதியான அணி கிடைக்கவில்லை. ஜனாதிபதி தேர்தலில் அனைத்து மாவட்டங்களிலும் கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் பார்த்தால் எமக்கு வன்னியிலும் ஒரு எம்.பி. கிடைப்பார். ஆனால்  கிழக்கிலும் கிடைப்பார். ஆனால் யாழில் கிடைக்காது. அதனால் நாங்கள் போட்டியிடவில்லை. சுயேச்சைக் குழுக்கள் பல போட்டியிடுகின்றன.  ஜனாதிபதி பிரதமரின் புகைப்படங்களை வைத்துக்கொண்டிருக்கின்றனர். அவ்வளவுதான்.

கேள்வி : 2015 இல்  தோல்வி  2019 இல் வெற்றி எவ்வாறு உணர்ந்தீர்கள்?

பதில் : 2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சிமன்ற தேர்தலில்  வெற்றிபெற்றதும் பாரிய மகிழ்ச்சி ஏற்பட்டது. அங்குதான்  ஆரம்பமானது. அதுவே கடினமாகவும் இருந்தது. காரணம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோரின் கட்சிகளை எதிர்த்து போட்டியிட்டோம். 

கேள்வி : 2019 இல்  சிறுபான்மை மக்களின் வாக்குகள் குறைவாகவே கிடைக்கும் என்று தெரிந்திருந்ததா?

பதில் : அது அன்றிலிருந்து இருக்கின்ற விடயமல்லவா?

கேள்வி : இந்த தேர்தல் வெற்றி எவ்வாறு சாத்தியம்? பஷில் ராஜபக்ஷவிடம் உள்ள திறமை என்ன? 

பதில் : நாங்கள் மக்களின் மனதை உணர்ந்து புரிந்து  அரசியல்  செய்கிறோம்.

கேள்வி : 2015 ஆம்  ஆண்டு தோல்வியேற்படும் என்று தெரிந்திருந்ததா?

பதில் : 2015 இல் தோல்வி ஏற்படும் என்று எனக்கு தோன்றியது.

கேள்வி : ஏன் அவ்வாறு தோன்றியது?

பதில் : சில மக்களின் மனதுக்கு எதிராக சில நடவடிக்கைகள் எமது ஆட்சியில் எடுக்கப்பட்டது.

கேள்வி : அதனை ஏற்கின்றீர்கள்?

பதில் : அதனை ஏற்றமையினால்தான் மீண்டும் மக்களின் மனதை வெல்ல முடிந்தது.

கேள்வி: இனி அவ்வாறான தவறுகள்?

பதில் : அவ்வாறான தவறுகள் இருக்காமல் நடந்துகொள்ளவேண்டும்.

கேள்வி : ஆனால் நீங்கள் பாராளுமன்றம் செல்லாமலிருப்பது?

பதில் : பாராளுமன்ற அரசியலிலிருந்து வெளியே வந்து அரசியல் செய்ய முடியும் என்பதனை நான் காட்டியிருக்கின்றேன். தற்போது  மங்கள சமரவீர போன்றோர் அதனை முயற்சிக்கின்றனர். எந்தவொரு நாட்டிலும் பாராளுமன்றத்தில் மட்டுமே அரசியல் செய்யவேண்டியதில்லை.

கேள்வி : ஜனாதிபதி வேட்பாளர் ஆக முடியவில்லையே?

பதில் : எனக்கு அவ்வாறான தேவை இருக்கவில்லை. என்னைவிட தகுதியான ஒருவர்  முன்வந்தார். என்னைவிட தகுதியானவர் அதில்  இருப்பது எனக்கு மகிழ்ச்சி.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குராணை கிராமமும் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

2024-03-29 17:17:02
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48