அப்பிள் நிறுவனத்தின் தொழிற்சாலை இந்தியாவில் நிர்மாணம்

Published By: Jayanthy

26 Jul, 2020 | 07:25 AM
image

உலகின் முன்னணி ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பு நிறுவனமான அப்பிள் மேக் தமது புதிய ஐ - போன் -11 மொடலை  இந்தியாவில் உற்பத்திசெய்ய உள்ளதாக இந்தியாவின் மத்திய  அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்  தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய  அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், 

“இந்தியாவில் ஸ்மார்ட்ஃபோன்கள் தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்க ஊக்கமளிக்கிறது. அப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஐபோன் 11 ஐ தயாரிக்கத் தொடங்கியுள்ளதாகவும் இது இந்தியாவில் முதல் முறையாக தயாரிக்கப்படும் ஒரு சிறந்த மொடல் ஐபோன் என தெரிவித்துள்ளார். 

இதற்கு முன்பு, குபேர்டினோவை தளமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான ஐபோன் XR மொடலை இந்தியாவில் 2019 ஆம் ஆண்டு இணைக்கத் தொடங்கியது. 2017 ஆம் ஆண்டில், அப்பிள் ஐ போன் SE மொடல் மற்றும் 2016 மொடலின் உள்நாட்டு உற்பத்தியை பெங்களூர் தொழிற்சாலையில் தொடங்கியது.

இதனிடையே அப்பிள் நிறுவனம் பெங்களூருக்கு அருகிலுள்ள தனது விஸ்ட்ரான் தொழிற்சாலையில் ஐபோன் SE 2020 மொடலையும் இந்தியாவில் தயாரிக்க திட்டமிட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

இதற்கமைய அப்பிள் நிறுவனத்தின் ஐ போன் -11 மொடல் சென்னைக்கு அருகில் உள்ள ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் தாயாரிக்கப்பட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக அமெரிக்கா - சீனா இடையே ஏற்பட்டுள்ள மோதல்கள் காரணமாக அமெரிக்க நிறுவனங்கள் பெரும்பாலானவை கொரோனாவுக்கு பின்  சீனாவை விட்டு வெளியேறும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26