போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை!

25 Jul, 2020 | 08:39 PM
image

(செ.தேன்மொழி)

பொரலஸ்கமுவ பகுதியில் ஒரு கிலோவிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் 10 இலட்சம் ரூபாய் பணத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஆறுபேரும் போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

மிரிஹான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

பொரலஸ்கமுவ பகுதியில் மிரிஹான விசேட விசாரணை பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் ஆறுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் திட்டமிட்ட முறையில் மிரிஹான , பொரலஸ்கமுவ மற்றும் ஹொரண ஆகிய பகுதிகளில் போதைப் பொருள் விநியாகத்தில் ஈடுபட்டு வருவதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இதன்போது சந்தேக நபரிடமிருந்து ஒரு கிலோ 45 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் 10 இலட்சம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் அனைவரும் போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்த போதைப் பொருள் கடத்தலும் சிறைக்கைதி ஒருவராலே திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவந்துள்ளது. அதற்கமைய மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08